Sunday, February 12, 2012

நாம் யார் -7

பாகம்-6 படிக்காதவர்கள் ,படிக்க  இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

பொருள்களை கையாண்ட விதம் 

கனிகள் , தானியங்கள் ,காய்கறிகளும் போன்ற கெட்டிப் பொருள்களை இட்டுவைப்பதற்கு,  பனைநார்ப் பெட்டிகளும் மூங்கிற் கூடைகளும் முடையப்பட்டன. நீரையும் நீர்ப்பொருள்களையும் வார்த்து வைப்பதற்கு, மூங்கில் நாழியும் மரத்திற் கடைந்துகொண்ட கடை காலும் ஆட்டுத்தோற் பையும் பயன்படுத்தப்பட்டன. சமைப்பதற்குக் கற்கலம் உதவிற்று. கல்லில் குடையப்பட்ட பாத்திரம்.

இசைக்கருவிகள் 

ஆடு மாடு உடும்பு முதலியவற்றின் தோலை மரத்தில் கட்டி உலர்த்தியபோதுகுச்சுங் கையும் பட்டு இன்னோசை யெழுந்ததைக் கண்டு , தோலிசைக் கருவிகளும்வண்டினால் துளைக்கப்பட்ட மூங்கிற் குழாயிலும் நாணல் தட்டையிலும் காற்றுப் புகுந்தபோதுஇனிதாய் ஒலித்ததைக் கண்டு புல்லாங்குழலும்முறுகக்கட்டிய வில்லின் நாண் தெறித்தபோதுஇன்னிசை பிறந்ததைக் கண்டு வில் யாழ் என்னும் நரப்பிசைக் கருவியும் கண்டு பிடுத்து இசைத்தான் மனிதன் .

திருமண வாழ்க்கை 

இது வரை கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மனிதன் , குடும்ப வாழ்க்கைக்கு முன்னேறினான் , இன்பத்திற்கு மட்டுமன்றி, வேளைக்கு வேளை உணவு சமைக்கவும், தொழிலுக்குத் துணையாயிருக்கவும், உடைமைகளைப் பாதுகாக்கவும், நோய்நிலையில் நலம் காக்கவும் , ஒரு பெண் நிலையாக வீட்டிலிருக்க வேண்டியிருந்ததால், வீட்டு வாழ்க்கை ஏற்பட்டபோதே, ஓர் ஆடவனும் பெண் கூடிவாழும் கூட்டு வாழ்க்கையும் ஏற்பட்டது. அது இல்வாழ்க்கை யென்று பொதுவாகச் சொல்லப்பட்டது .

ஊர்கள் தோன்றின .

இல்வாழ்க்கையும் நிலையான கூட்டுக் குடியிருப்பும் ஏற்பட்டதனால், ஆங்காங்குப் பல ஊர் கள் தோன்றிப் பெருகின. ஒவ்வோர் ஊரிலும் குடிவாணர் பெரும்பாலும் பலதலைமுறைப்பட்ட ஒரே மாபெருங் குடும்ப வுறவினரா யிருந்ததனால், அக் குடும்ப முதியோனே தலைவனாயிருந்து, குற்ற வழக்குத் தீர்த்துத் தண்டித்தும் முறைசெய்தும் வந்தான். அக்காலத்தில் மக்கள் வாழ்வு நீண்டிருந்ததனால் மகன், தந்தை, பாட்டன், பூட்டன், ஓட்டன் (சேயான்) என்னும் ஐந்தலைமுறையினரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருந்தனர். (இன்று நிலைமை என்ன என பாருங்கள் ).

உலோகங்கள் 

பொற்காலம் -தங்கத்தின் விவரங்களையும் , செம்புக்காலம் - செம்பின் விவரங்களையும் , உறைக்காலம் -மணிகளின் விவரங்களையும் ,வெள்ளியின் விவரங்களும் , இரும்பு காலம் - இருப்பின் விவரங்களையும் , அதான் பயன்பாடுகளையும் அறிந்து மெல்ல உலகங்களை தனது வாழ்வோடு பயன்படுத்த ஆரமித்தான் மனிதன்.

இதன் மூலம் , ஆயுதங்கள் , வீட்டு, விவசாய உபகரணங்கள் , நகை போற்றவற்றை உருவாக்கினான் மனிதன்.

கொஞ்சம் கொஞ்சமாக நாகரியத்தை கற்று கொண்ட மனிதன் , தனது செயல்பாடுகளையும் முன்னோக்கி நகர்த்தினான்.   


                                                                                                    தொடரும்................................                                                                                                                             

No comments:

Post a Comment