Saturday, February 11, 2012

நாம் யார் -6


பாகம்-5 படிக்காதவர்கள் ,படிக்க  இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

சக்கரம் கண்டுபிடித்த மனிதன்

மலைகளில் இருந்து கற்கள் உருண்டு வருவதை கண்ட மனித யோசித்தான் , அனைத்து கற்களும் உருள்வது இல்லை , உருண்டையான , வட்ட வடிவில் இருப்பவை உருள்வது கண்டு , கல்லிலே சக்கரம் தயாரித்தான் இதை வைத்து வந்தது தான் எந்திர வளர்ச்சி , தனது வேலைகளை எளிது ஆக்க சின்ன சின்ன உபகரணங்களை செய்து பயன்படித்தினான் மனிதன்.

விலங்குகளை அடக்கினான்

இது வரை எந்த விலங்கை கண்டாலும் பயந்து ஓடினான் , கற்கருவிகளையும் நெருப்பையும் பயன்படித்தி வேட்டை ஆடி , உணவான உட்கொண்ட மனிதன் , விலங்குகளை தனது தேவைக்கு அடிக்கி ஆள ஆரமித்தான்.

மலையடிவாரங்களிலும் மலைமேலும் வாழும்ஆடு, மாடு, எருமை ஆகிய மூவிலங்கினங்களையும், அவர்பிடித்துப் பழக்கி வீட்டு விலங்காக்கினர். மூன்றும் பால் தந்தன. ஆடு பால் தருவதொடுஊனுணவுமாயிற்று. காளைமாடும் கடாவெருமையும்ஏருழவிற்குப் பயன்பட்டன. மானையும் ஆமானையும்காட்டுப்பன்றியையும் முயலையும் உடும்பையும்பிடித்து ஊனுணவிற்குப் பயன்படுத்தினர். இன்றுபன்றியிறைச்சி யுண்பவர் ஒருசாராரே. அவரினுஞ்சிறு தொகையினர் மாட்டிறைச்சி யுண்பவர். பறவைகளுள் கோழி, புறா, குயில், காடை, கதுவாலிஆகியவற்றின் ஊனை விரும்பியுண்டனர்.காட்டுக்கோழியைப் பழக்கி வீட்டுக்கோழியுமாக்கினர். விளைநிலத்திலும் வீட்டிலுமுள்ள கூலங்களை எலிகள் தின்று கெடுத்ததனால்,  அவற்றைக் கொல்லக் காட்டுப்பூனையையும்; ஆடுகளை நரிகள் பிடித்துத் தின்றதனால், அவற்றை விரட்டி மந்தையைக் காக்கக் காட்டு நாயையும் வீட்டிற் பழக்கினர்.

பயிர் சாகுபடி

இயற்கையாக கிடைத்த வற்றை தின்று வந்த மனிதன் , ஆறுகளில் அருகில் போனவுடன் , தனக்கு தேவையான பழங்களை , காய்கறிகளை , தானியங்களை தன் இருப்பிடத்திற்கு அருகே பயிர் செய்து பயன்படுத்த முயற்சி செய்தான் , மரம் ,செடிகொடிகளை அப்புற படித்தி விளைநிலங்களை உருவாக்கினான் .

வானாவாரிப் பயிர்கள் என்பன,ஏர்க்காடும் கொத்துக்காடு மாகிய நிலத்தில்மழையினாலேயே விளைந்த தினை வரகுபோன்றசிறுதவசங்களும், அவரை துவரை போன்ற பயறுவகைகளுமாகும்.புல்வெளிகளா யுள்ளவற்றைக்கால்நடைமேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, குறுங்காடும்பெருங்காடுமா யுள்ளவற்றைத் தீயினாற்சுட்டெரித்துக் கொன்று விளைநிலமாக்கிய விடம்,பிற்காலத்திற் கொல்லை யெனப்பட்டது. அடர்ந்தமரஞ்செடி கொடிகளால் இருண்டு கிடவாது வெட்டவெளியான நிலமெல்லாம், கண்ணிற்குப் புலனான தனால், புலம் எனப்பட்டது.

உணவு அவிக்கும் பழக்கம்

பாறைகளிலுள்ள பள்ளங்களிலும் குழிகளிலுமுள்ள நீர், கதிரவன்
வெம்மையாலும் காட்டுத் தீயாலும் காய்ந்த போது,  அதுக்கு உள்ளே
விழுந்த உணவுப் பொருள்கள் சுட்ட வுணவினும் பருத்தும்
மென்மையாகியும் சுவைமிக்கும் இருந்ததைக் கண்ட மாந்தர்,
வரகு தினை முதலியவற்றின் அரிசியைச் சோறாக்கவும், அவரை
துவரை முதலிய பயறுகளை அவிக்கவும் கற்றுக்கொண்டனர். பட்ட மரங்கள்
உராய்ந்து அடிக்கடி நெருப் பெழக் கண்டதனால், இயற்கை நெருப்பில்லாத
போது கற்களை உரசி செயற்கை நெருப்பையும் உண்டாக்கிக் கொண் டனர்.
வீடுதொறும் நாள்தொறும் வேளைதொறும் தீக்கடையத்
தேவையில்லாவாறு, ஊர் முழுவதற்கும் பொதுவாக ஓர் இடத்தில் இரவும்
 பகலும் கட்டை யெரியவிட்டு அவியா நெருப்பைப் பேணி வந்தார்கள்.
பின்னல் வேலைகள்

உடைக்கு விலங்குகளின் தோல் பயன்படித்தினான் , இரவு நேரங்களில் தூங்கும் , மற்ற விலங்குகள் வந்து , இந்த தோலாடையை இழுத்து கொண்டு போய்விடுகிறது.

மரப்பட்டை ஆடைகள் எளியவையாக இல்லை , இலைகள் இன்னும் பிரச்சனை இதற்கு தீர்வை கண்ட மனிதன் , நார்களை பின்னி உடையாகவும் ,

போர்த்திக்கொள்ள ஆட்டுமயிர்க் கம்பளியும், படுக்க மூங்கிற்பாயும்
ஓலைப்பாயும் ,கைப்பின்னலாக செய்து பயன்படித்தினான் மனிதன் .
                                                                                 
                                                                                                         தொடரும் ..........................

No comments:

Post a Comment