Sunday, February 26, 2012

நாம் யார் -17

பாகம்-16 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

பிராமணன்.

ஆரியப் பூசாரிகள் சிந்துவெளியினின்று கங்கைவெளிக்கு வந்தபின்,வேத மந்திரங்களின் பொருளை விளக்கும் பிராமணம் என்னும் உரைநடை நூல்கள் எழுந்தன. பல வேள்விச்சாலை முதுகுடுமிப் பெருவழுதியும்அரசவேள்வி (ராஜஸூய) வேட்ட பெருநற்கிள்ளியும் பலயானைச் செல்குழு குட்டுவனும் போன்ற அரசரைத் தமிழகத்தில் துணைக்கொண்டது போன்றே, விதேகநாட்டு மாதவன் போன்ற அரசரை வடநாட்டில்துணைக்கொண்டு ஆரிய வேள்வி மதத்தைப்பரப்பியிருக்கின்றனர் என்பது, சதபதபிராமணத்தால் தெரிய வருகின்றது .

வேள்வி எல்லாம் வல்லதும் அளவிலாஆற்றலுடையது மாகுமென்றும், வேள்வி யாசிரியனேமக்களுட் பெரியவ னென்றும், அவன் வேள்விவளர்ப்பதனாலேயே மழை பெய்து பயிர் விளைந்து ஆசுரந்து உலகம் நடைபெறுகிறதென்றும் கருத்துகள்பரப்பப் பட்டன. ஆரியப் பூசாரி பெரியவன் என்னும்கருத்தில் பிரமன் (Brahman)எனப்பட்டான். பிரமன் = பிராமணன்.

நைமிசாடவி மாநாட்டு

பிராமணர் தென்னாட்டுத் தமிழநாகரிகச் சிறப்பைப்பற்றிக் கேள்விப்பட்டு, இங்கும் தம் மேம்பாட்டை நிறுவுமாறு, நைமிசஅடவியில் அடிக்கடி மாநாடு கூடிச் சூழ்ந்ததாகத்தெரிகின்றது.

ஒரு நிமை (நொடி) நேரத்தில் ஒருபெரும்படை கொல்லப்பட்ட இடம், நைமிசம் என்றுபெயர் பெற்றதாகச் சொல்லப்படுகின்றது.இமை-நிமை - வ. நிமி - நிமிஷ - நைமிஷ - நைமிச.

நைமிசாடவி மாநாட்டுத்தீர்மானத்தின்படி, அகத்தியர் தென்னாடுநோக்கிப் புறப்பட்டார். அவர் காசியினின்றுவிந்தமலை யடைந்து அங்கிருந்து தண்டக அடவி வந்துதங்கி, அதன்பின் காஞ்சி யடைந்து, பின் காவிரிதோன்றும் சையம் என்னும் குடகுமலை சென்று, குடமலைவழியாகப் பொதியமலை போய்ச் சேர்ந்ததாகக்காஞ்சிப் புராணங் கூறுகின்றது.

அகத்தியர் 

விந்தமலை கடக்க முடியாத தென்று ஆரியர் நெடுநாளாகக் கருதிக் கொண்டிருந்ததனால்,அகத்தியர் அதைக் கடந்து வந்தபோது அதன்செருக்கை யடக்கினதாகக் கூறினர்.

அகத்தியர் காசியிற் புறப்படு முன்னரேசிவபெருமானிடந் தமிழ் கற்றார் என்னுங் கதையும்,அகத்தியருக்கு அடுத்தே ஒரு பிராமணக் கூட்டம் வந்து தண்டக அடவியில் தங்கியிருந்ததும், அகத்தியர்இராமனுக்கு வில்லும் வாளும் வழங்கியதும்நோக்குமிடத்து, ஓர் ஆரியக் குடியேற்றக்கூட்டத்தின் தலைவராகவே அகத்தியர் திட்டமிட்டுவந்ததாகத் தெரிகின்றது.

அவர் தமிழகம் வந்து முத்தமிழுங் கற்று,ஒரு முத்தமிழிலக்கணம் இயற்றி, அதற்கு அகத்தியம்எனப் பெயரிட்டார். தமிழ முனிவர்போற்பொதியமலையில் தங்கி, ஆரியரும் தமிழருமானமாணவர் பலருக்குத் தமிழ் கற்பித்தார்.

அகத்தியர் வழிகாட்டியபின் தமிழகம்வந்த பிராமணர், தென்னாட்டாரும் வடநாட்டார்போன்றே மதப்பித்தரா யிருந்தது கண்டு, தாம்நிலத்தேவரென்றும் தம் மொழி தேவமொழி யென்றும்ஏமாற்றி, குமரிமுதல் பனிமலைவரை இந்தியப்பழங்குடி மக்கள் அனைவரையும், உலகில் மக்களுள்ள கால மெல்லாம் தமக்கும் தம் வழியினர்க்கும்அடிமைப்படுத்துதற் பொருட்டு, குமுகாயத் துறையில்ஒன்றும் சமயத்துறையில் ஒன்றுமாகஈரனைத்திந்தியத் திட்டங்களை வகுத்துவிட்டனர்.

நான்கு வரணப் பகுப்பு

கல்வி ,காவல் ,வணிகம் ,உழவு ,கைத்தொழில் என்னும் மருதநிலத் தொழில்கள் ஐந்தனுள், கைத்தொழில் உழவிற்குப்பக்கத் துணையான இருந்ததால் , ஏனை நான்கிற்கும்உரிய அந்தணர், அரசர் ,வணிகர் ,வேளாளர் என்னும் நால்வகுப்பாரை பிரித்து அறியப்பட்டது.

உலக வழக்கில் கல்வி, காவல் (ஆட்சி),வணிகம், உழவு, கைத்தொழில் என்னும் ஐவகைத்தொழில் செய்வோரும், முறையே, பார்ப்பார் ,அரசர், வணிகர், உழவர்(வேளாளர்) ,தொழிலாளர் எனப்படுவர்.

பிராமணர் இப் பாகுபாட்டைப் பயன்படுத்தி,பார்ப்பாரையும் அந்தணரையும் ஒருங்கே பிராமணர் என்றும், அரசரைச் சத்திரியர் என்றும், உழவர் சிறார் சிலர் மாடு மேய்ப்பதாலும்,உழுவித்துண்ணும் வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர்(வெள்ளாளர்) ,பலர் கடைகாரரும் வணிகருமாயிருப்பதாலும், உழவும் வணிகமும் மாடுமேய்ப்பும் ஒருங்கே செய்பவரை வைசியர் என்றும், உழவு,கைத்தொழிலுங் கூலிவேலையுஞ் செய்யும் மூவகுப்பாரைச் சூத்திர ரென்றும் மக்களைநால்வகுப்பாக வகுத்துனார்.

பிராமணனுக்கு வெண்ணிறமும்சத்திரியனுக்குச் செந்நிறமும் வைசியனுக்குப் பொன்னிறமும் சூத்திரனுக்குக் கருநிறமும் சார்த்திக் கூறி, நால்வரணப் பாகுபாட்டைஏற்படுத்தி, பிராமணர் கல்வித்தொழிலை யும் பிற வகுப்பார் தத்தமக்குக் குறிக்கப்பட்டதொழில்களையும் வழிவழி செய்து வரவேண்டுமென்றும்,

சத்திரியன் முதலிய மூவரும் பிராமணனுக்கு இறங்கு வரிசையில் தாழ்ந்தவ ரென்றும், சூத்திரன் மேன் மூவர்க்கும் வைசியன் மேலிருவர்க்கும்சத்திரியன் பிராமணர்க்கும் தொண்டுசெய்யவேண்டு மென்றும், இது இறைவன் ஏற்பாடென்றும்,மேல்வகுப்பார் மூவரும் பூணூல் அணியும் இரு பிறப்பாளரென்றும், வேதத்தைச் சூத்திரன் காதாலுங்கேட்கக் கூடாதென்றும், பிராமணனைக் காணின் மற்றமூவரும் தத்தம் தாழ்வுநிலைக்குத் தக்கவாறு ஒதுங்கிநிற்கவேண்டு மென்றும் இறைவன் கட்டளையிட்டதுபோற் கற்பித்துவிட்டனர்.

இச் சட்டதிட்டம் வடநாட்டில்விரைந்து முழுவதும், தென் னாட்டிற் படிப்படியாகப்பேரளவும், ஆட்சிக்குக் கொண்டுவரப் பட்டது.

                                                                                                   தொடரும்....................................

No comments:

Post a Comment