Tuesday, February 7, 2012

நாம் யார் -2

பாகம்-1படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.


குமரி கண்டம் மொழி 


சைகை மொழி 


மாந்தன்கள் ஆரம்பம் குமரிக்கண்டம் தான் என முடிவானது , இவர்களின் மொழி என்னவாக இருக்கும், கி.மு.5,00,000-1,00,000 ஆண்டுகள் வரை . குமரிகண்ட மாந்தன்,  நிலையான குடும்ப உறவின்றி விலங்குபோல் அவ்வப்போது தன் வேட்கைகளைத் தணித்துக்கொண்டு, மொழியும் மொழியுணர்ச்சியுமின்றி இயற்கை யான உணர்ச்சி யொலிகளையும் விளியொலிகளையுமேயுடையவ தாக இருந்தது , பெரும்பாலும் சைகைகளாலேயே தன் கருத்தை வெளிப் படுத்தி வந்தான். ஆகையால், அவன் மொழி சைகை மொழியாகவே இருந்தது. உடற்சைகை, உறுப்புச்சைகை எனச் சைகை இரு திறப்படுமாதலால், முகச்சைகையாகிய வலிச்சமும் சைகைகளை கொண்டு தனது தகவல்களை பரிமாறி கொண்டான் .


மொழியற்ற நிலையில், மாந்தன் கருத்தும் எண்ணமும் உருவ ஒலியாக இருந்துவந்தன. உருவலிப்பாவது, ஓர் இடத்தையோ, பொருளையோ, நிகழ்ச்சியையோ உள்ளத்திற் படம் பிடித்தல்.


உணர்ச்சி, வேட்கை, நினைப்பு, எண்ணம், தீர்மானம், அகக்காட்சி, இன்புறவு, பொந்திகை (திருப்தி), மகிழ்ச்சி, துன்புறவு, சினம் அல்லது வெறுப்பு ஆகிய பல்வேறு உளநிகழ்ச்சி களும், நமக்கிருப்பது போன்றே மொழியற்ற மாந்தனுக்கும் இருந்தன. இதுமாதிரி இன்றும் வாய்பேச முடியதவர்களிடம் இருக்கிறது .


இயற்கை மொழி 


சைகை மொழியிலிருந்து கொஞ்சம் முன்னேறி ,கி.மு. 1,00,000-50,000 ஆண்டுகள் வரை குமரி கண்டத்தில் பேசப்பட்ட மொழி இயற்கை மொழி என பட்டது எழுத்து, உச்சரிப்பும், சொற்பொருத்தும் இன்றிப் பெரும்பாலும் இயல்பாகப் பேசப்படும் ஒலித்தொகுதி, இயற்கை மொழி என பொருள் படுகிறது ,இது முழைத்தல்மொழி எனப்படும், இது 


இதன் ஒலிகள் எழு வகை படுகிறது 

(1) உணர்ச்சி ஒலிகள் (Emotional Sounds)

இன்ப துன்ப உணர்ச்சியை வெளியிடும் ஒலிகள் உணர்ச்சி ஒலிகள் எனப்பட்டது.
ஆ, ஈ, ஊ, ஓ, ஐ

(2) விளி ஒலிகள் (Vocative Sounds)

பிறரை விளிக்கும் (அழைக்கும் )ஒலிகள் விளியொலிகள் எனப்பட்டது . 
ஏ, ஏய், ஓ, ஏலா, எல்லா.

(3) ஒப்பொலிகள் (Imitative Sounds)

                  இருதிணைப் பொருள்களும் செய்யும் ஒலிகளை ஒத்தொலிப்பவை ஒப்பொலிகள் எனப்பட்டது.
கூ (கூவு), கா கா-(காகம்), காக்கா (காக்கை), இம் (இமிழ்), உர் (உரறு), ஊள் (ஊளை), குர் (குரங்கு). 

வாயொலியின்றி வாய்வழியும் மூக்குவழியும் செவிப்புல னாகும் காற்றுமட்டும் வெளிவரும் செயல்கட்கும், ஒப்பொலி முறையில் சொற்கள் தோன்றியுள்ளன.

கொட்டாவி விடும்போது ஆவென்றும், நெருப்பெரிக்கவும் விளக்கணைக்கவும் சூடான பொருளை ஆற்றவும் நோவு தீர்க்கவும் ஊதும்போது ஊவென்றும் ஒலித்தற்கேற்ப, வாயினின்று காற்று வெளி வருதலும்; உரக்க மூச்சு விடும்போதும் இளைக்கும் போதும், மூசு என்று கேட்குமாறு மூக்கினின்று காற்று வெளிவருதலும் ஒலி வந்ததே ஒப்பொலிகள் என பட்டது.

(4) குறிப்பொலிகள் (Symbolic Sounds)

சில கருத்துகளைப் பிறர்க்குத் தெரியும் வகையில் குறிக்கும் ஒலிகள் குறிப்பொலிகளாம்.

தோ தோ (துவா துவா) என்று நாயையும், பேபே (போ போ) என்று கோழியையும், வேசு வேசு என்று பூனையையும், பாய் பாய் என்று ஆட்டையும் விளிக்கும் ஒலிகள் விளியொலிகளாயினும் வழக்கம்பற்றிக் குறிப்பால் உணரப்படுவதாற் குறிப்பொலிகளாம்.

(5) வாய்ச்செய்கை யொலிகள் (Gesticulatroy Sounds)

மாந்தன் இயற்கையாகவும் செயற்கையாகவும் தன் வாயினாற் செய்யும் சில செய்கைகளும் சைகைகளும், ஒவ்வோர் ஒலியைப் பிறப்பித்தற்கேற்ற வாய்வடிவை அமைத்து, அந்த ஒலிகளின் வாயிலாய் அச் சொற்களுக்கு மூலமான சொற்களைப் பிறப்பித் திருக்கின்றன. அச் சொற்கட்கு மூலமான அவ் வொலிகள் வாய்ச் செய்கை ஒலிகள் எனப்பட்டது.
ஆ-அ-அங்கா. அங்காத்தல் = வாய்திறத்தல்.
அவ்-கவ்-வவ். அவ்-அவ்வு-கவ்வு-வவ்வு.
பிற்காலத்தில் அவ்வுதல் என்னும் சொல் கவ்வுதல் என்னும் சொல் ஆக வந்தது.


கவ்வு என்னும் சொல், கவ்வை, கப்புதல், கப்பு, கப்பித்தல், கப்பை, கவட்டி, கவட்டை, கவடு, கவடி, கவண், கவணை, கவண்டு, கவண்டி, கவர், கவர்வு, கவல், கவலை, கவவு, கவளம், கவளி, கவளிகை, கவுள், கவறு, கவான், கவை, காவு, கா, காவடி, காவட்டு, காதல், காமம் முதலிய பல சொற்களைப் பிறப்பித்துள்ளது.

(6) குழவிவளர்ப் பொலிகள் (Nursery Sounds)

குழவிவளர்ப்பில் குழவிகள் இயல்பாக ஒலிக்கும் ஒலிகளி னின்று தாய்மார் சில சொற்களை அமைத்துக் கொள்வதுண்டு. அத்தகைய ஒலிகள் குழவிவளர்ப்பொலிகள். அவை மிகச் சிலவே.

இங்கு - இங்கா = பால்.

குழவிப் பருவத்தினும் பெரியது குழந்தைப் பருவம். அப் பருவத்தில், சோறு என்பதைச் சோ, சோய், சோசி என்று குழந் தைகள் கொச்சையாய்ச் சொல்பவை குழவி வளர்ப் பொலிகளாகா. டும் டும் (tom tom), பீப்பீ(pipe) என்பன போன்றவை குழந்தைகள் சொல்லும் ஒப்பொலிச் சொற்கள்.

 மாந்தர் நாகரிக நிலையிலேயே மாட்டைப் பாலிற்காக வளர்க்கத் தொடங்கிவிட்டதாகத் தெரிவதால், தாயை விட்டு நீங்கிய கன்றுக்குட்டியின் கதறலினின்று, அம்மா என்னுஞ் சொல்லைத் தமிழர் அன்னையைக் குறிக்க அமைத்துக்கொண்டனர் என்று கொள்வது மிகப் பொருத்தமாம். பின்பு, அது அப்பா என்று வலித்துத் தந்தையைக் குறித்திருக்கின்றது.

(7) சுட்டொலிகள் (Deictic Sounds)

சுட்டிக்காட்டும் ஒலிகள் சுட்டொலிகள்.

குழந்தை பருவத்தில் எதையாவது சுட்டி காட்டுவதற்கு வாயை விரிவாய்த் திறந்து ஒலி எழுப்பியது ,பின் அதை சுட்டி காட்டிய பிறகு வாயைப் பின்னுக்கிழுக்கும் பொது வந்த ஒலி, சுட்டொலிகள் எனபடுகிறது , 


அங் , இங் என்று எழும்பிய ஒலிகள் பின்னலில் அங்கே , இங்கே என மாறி உள்ளது .


                                                                                                        தொடரும்....................

No comments:

Post a Comment