Wednesday, February 22, 2012

நாம் யார் -15

பாகம்-14 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

ஆரிய பூசாரிகள்

ஆரியப் பூசாரிகள், உடல் வளர்ச்சியின்றிச் சிறுபிள்ளைகள் போல்,இயற்கையும் செயற்கையுமான பல்வேறு சிறு தெய்வங்களைப் பற்றி முன்னிலைப் பரவலாகவும் படர்க்கைப் பரவலாகவும் பாடிய பாடற்றிரட்டே,ஆரிய வேதத் தொகுப்பாம். முதன்முதலாகத்தோன்றிய தொகுப்பு (ஸம்ஹிதை) இருக்கு (ருக்) வேதம்.அதில் கங்கை வெளியும் பிரமபுத்திர வெளியுமாகியகீழ் வடவிந்தியாவிற்குரிய அரிசி, ஆலமரம்,வேங்கை முதலியன சொல்லப்படாமையால், அத்தொகுப்பு முழுதும் பஞ்சாபு என்னும் ஐயாற்று வெளியில் ஆரியர் தங்கியிருந்த போதேபாடப்பட்டதாக அறிஞர் கருதுகின்றனர்.

வேள்வி வளர்த்தல்

பூசாரிகளல்லாத ஆரிய வந்தேறிகள் பழங்குடி மக்களொடு கலந்து போனதனால், அவர்களொடு கலவாத ஆரியப் பூசாரிகள் நாட்டுமக்களை யடுத்தே பிழைக்க வேண்டியிருந்தது. சிவநெறி யாரும் நாகரிகமக்களும் பொதுமக்களிடை யிருந்ததனால், அவர்களாற் புறக்கணிக்கப்பட்ட ஆரியப் பூசாரிகள்,அரசரை வயப் படுத்தச் சூழ்ச்சி செய்து சில வழிகளைவகுத்தனர். அவற்றுள் ஒன்று வேள்வி வளர்த்தல்.

தெய்வத்தின் பெயரால் என்னசொன்னாலும் நம்புவதும் எதைக் கேட்டாலும் கொடுப்பதும் ஆகிய மதப்பித்தம், பழங்குடிமக்களின் சிறப்பியல் பென்பது கண்டு, அரசரிடம் சென்று,தாங்கள் தேவர் வழிவந்த நிலத்தேவர்(பூசுரர்) என்றும், தங்கள் மொழி தேவமொழியென்றும் தாங்கள் வகுத்த வேள்விகளைச் செய்தால்அரசர்க்கு வெற்றியும் குடிகட்கு நன்மையும் நாட்டிற்குச் செழிப்பும் உண்டாகுமென்றும்,சொல்லி ஏமாற்றினர். இவ் வேமாற்றிற்கு,அவர்களின் வெண்ணிறமும், உரப்பியும் எடுத்தும்கனைத்தும் ஒலிக்கும் ஒலிகள் மிக்க அவர்களின்மந்திரமொழியும் பெரிதும் துணைசெய்தன. அடியைச்சாய்த்தால் மரஞ்சாய்வதுபோல் அரசனை வயப்படுத்தினால் குடிகள் தாமாக வயப்படுவர் என்றுஅவர்கள் கருதியது நிறைவேறிற்று. விசுவாமித்திரர்போன்ற அரசர் சிலர் வயப்பட்டனர்.

நான்கு வேதம்

வேள்வி செய்யவேண்டியமுறையைப்பற்றிப் பெரும்பாலும் உரைநடையில் இருக்கு மந்திரங்களை எடுத்துக் கூறி, அவற்றிற்கு எசுர்( யசுர் வேதம் ) வேதத் தொகுப்பென்றும்; வேள்வியிற் பாடற் கேற்றவாறு பல ரிக் வேத மந்திரங்கட்கு இசையமைத்து, அவற்றின் திரட்டிற்குச் சாமவேதத் தொகுப்பென்றும் பெயரிட்டனர். இதனால், முன்னர் ஒரே வேதமாயிருந்தது மூவேதம் (த்ரயீ) ஆயிற்று.

வேள்வியில் மந்திரம் கூறித்தெய்வங்களை அழைப்பவன் 'ஹோதா' என்றும், தீ வளர்ப்பவன் 'அத்வர்யு' என்றும், இசை வகுத்தமந்திரங்களைப் பாடுபவன் 'உத்காதா' என்றும்பெயர் பெற்றனர். வேள்வியின் பெருமைக்குத்தக்கவாறு, இம் முப்பணியர் தொகையும் மிகும்.

கொளுத்த பூசாரி வர்க்கம்

பற்பல வேள்விகள் வகுக்கப்பட்டன. நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் இலட்சக்கணக்கிலும், பொதுமக்கள் பணம் அரசர் வாயிலாகச் செலவிடப்பட்டது.வேள்விப் பணியாளர் (ருத்விக்குகள்) பொன்னும்மணியும் ஏராளமாகப் பரிசு பெற்றதுடன், ஆயிரக்கணக்கான ஆரியப் பூசாரியர் கொழுக்க விருந்துண்டனர்.இங்ஙனம், அவர்கள் வாழ்க்கை எளியமுறையில் இனிதுநடைபெற வழிவகுக்கப் பட்டுவிட்டது. அரசர், வேள்விவளர்ப்பே கால மழைக்குக் கரணியம் என்று நம்பியதால், எத்துணைப் பொருட்செலவு நேரினும் பொருட் படுத்தாது, இக்காலத்துப் பொருளியல்வளர்ச்சித் திட்டங்கள் (EconomicProjects) போன்றே கருதி, இயன்றபோதெல்லாம் சிறு வேள்விகளையும் பெருவேள்விகளையும் இயற்றுவித்து வந்தனர்.

                                                                                                     தொடரும்............................

No comments:

Post a Comment