ஈர்ப்பு
தமிழர்கள்
போல இந்தியாவின் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் வேறு யாருமில்லை , இன்று வஞ்சிக்க பட்ட நிலையிலும் இந்தியாவின் மீது பிடிப்போடு இருக்கிறார்கள் , என்றால் இன்று நேற்று வந்த
ஈர்ப்பு அல்ல இது ஆதி முதல் வந்தது.
இந்தியா
என்று உருவாக்கும் முன்னே இன்றையா இந்தியா நிலபரப்பை மொத்தமாக சொந்தம் கொண்டாடினான்
தமிழன் ,
"
மன்னும் இமயமலை எங்கள் மலையே " என்றும் , காவிரியும் கங்கையும் எங்கள் நதியே " என்றும் , "பஞ்சநதி
பாயும் பழனத்
திருநாடுஎங்கள் நாடே" , என
பாடினான் தமிழன், இந்த ஈர்ப்பு இன்றும் உள்ளது.
எதிர்ப்பு
இன்று நிலை தலைகீழ் , இந்தியா தேசத்தின் மீது முதல் கோபத்தை செலுத்துவது தமிழன் தான் , தன் உறவுகளை பறிகொடுத்த வேதனை , தானும் வஞ்சிக்க படுகிறோம் என்ற கோபம், ஆட்சி அதிகாரம் செலுத்துவர்களின்
மெத்தன போக்கு இதை எல்லாம் அவனை எதிர்க்க கற்றுகொடுத்தது.
வந்தவரை வாழவைத்த தமிழன்
வனமாக கிடந்த நிலத்தை தன் உழைப்பால் சீர்
படித்தில் விளைநிலமாக மாற்றினான் , தன் வேளாண்மை உத்தியால் உற்பத்தியை பெருக்கினான்,
எங்கு இருந்து வந்தவர்களுக்கு வட நாட்டை விட்டு கொடுத்து விட்டான் , ஏன் விட்டு கொடுத்தான் தென்னாட்டில் அடர்த்தியாக இருந்த தமிழன் , வட நாட்டில் எண்ணிக்கையில் குறைவு எனவே வந்தவர்களுக்கு வழி விட்டு தென்னாடே
என் நாடு என இருந்து விட்டான்.இன்றும் இந்தியாவின் எல்லை ஓரம் உள்ள பெலுச்சியர்
நாட்டிலே தமிழ் இனத்தை சேர்ந்த
மொழியொன்று இன்றளவும் வாழ்கிறது.
இமயம் மீது காதல்
ஆரியர்களின் ஆக்கிரமிப்பு
செய்து அவர்களின் நாடாக வடநாட்டை ஆக்கி கொண்டாலும் ,என்னதான் தென் நாட்டில் இருந்தாலும் தமிழன் வட நாட்டை தன் நாடாகவும் ,இமயமலையை சொந்தம் கொண்டாடினான்
, இதற்கு தடையாக இருந்தவர்களை எதிர்த்து இமயத்தில் கொடி நாட்டினான்.
விற்கொடி
இது சேர்ர்களின் கொடி வில் பொறித்த கொடி ,சேர மன்னர்களின் ஒருவனான நெடுஞ் சேரலாதன் என்பவன் இமயமலை வரை படையெடுத்து சென்றான்.எதிர்த்த வட நாட்டு ஆரிய மன்னர்களை வென்றான் , சிறை படித்தினான் , இமயமலையில் வில் கொடியை ஏற்றி " இமய வரம்பன் " என்னும் புகழை பெற்றான்.
புலி கொடி
வெற்றி முகத்தோடு தென்னாடு
நோக்கி திரும்பிய கரிகாலனுக்கு
வழியில் வச்சிர நாட்டு மன்னன்
வரவேற்று முத்து பந்தலை பரிசாக தந்தான்.
அவனை கடந்து வந்த கரிகாலனை , மகத
நாட்டு அரசன் தடுத்து போர் புரிந்தான், தோற்று போன மகத நாட்டு மன்ன்ன்
வளவனுக்கு பட்டிமண்டபத்தை இட்டு வணக்கினான்.
அவந்தி நாட்டு மன்ன்ன் தோரணவாயில் ஒன்றை பரிசாக தந்தான்.
பாண்டிய
மன்னர்களில் ஒருவனும் மீன் கொடியை இமயத்தில் நாட்டி உள்ளன் , சேர , சோழர்களுக்கு
முற்பட்டவர்கள் என்பதால் இவர்களின் பெயர் தெரியவில்லை ,
"பருப்பதத்துக் கயல்
பொறித்த பாண்டியர் குலபதி " என பெரியாழ்வார்
படுகிறார் .
ஆரிய படைகளை வென்றமையால் செழியன் என பெயர் பெற்றதாகவும்
"
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
" என்ற சிலப்பதிகார
வரிகள் சொல்லுகிறது.
No comments:
Post a Comment