Friday, February 10, 2012

நாம் யார் -5

பாகம்-4 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

ஆயுதம் செய்த மனிதன் 

தண்ணீர் தேடி , வேறு இடங்களுக்கு பயணபட்ட மனிதன் , இயற்கையை கையாளவும் , தன்னோ கண்டு ஓடும் மிருங்களை வேட்டை ஆடவும் , தன்னை தாக்க வரும் மிருகங்களை எதிர் தாக்குதல் செய்யவும் சில ஆயுதங்களை தயாரித்தான் எப்படி கற்களில்,

நீர் நிலைகளை இருக்கும் இடத்தில் , மற்ற இடங்களில் கிடைத்த மாதிரி பழங்கள் கிடைக்கவில்லை , தனது உணவு தேவைக்கு புதிய வழிகளை தேடினான் , வேட்டையாடி தின்னும் கொடுர மிருகங்களை பார்த்து , தானும் வேட்டையாடி , உண்ண அரமித்தான் , பன்றிகள் கிழங்கு வகைகளை தோண்டி தின்னுவதை பார்த்து தானும் அதை போல செய்ய முனைந்தான் .

இதற்கு தேவையான கருவிகளை தானே கற்களில் இருந்து தேடிகொண்டான் ,கில்லி (கல்லி), வெட்டி,குத்தி, கத்தி, உளி, சுத்தி (சுத்தியல்), சமட்டி (சம்மட்டி), குந்தம், கூந்தாலம், கோடரி, குத்துக் கோடரி முதலிய கருவிகளைக் கல்லால் முரட்டு வேலைப்பாடாகச் செய்து, பயன்படுத்தி ஆரமித்தான்.

கிழங்கு தோண்டற்குக் கோணலில்லாத கொம்பையும் கூராகச் செதுக்கிய வன்குச்சையும், வேட்டையாடற்குக் கல்லையும் குறுந்தடியையும் நெடுந்தடியையும் பயன்படுத்தி வந்தான்.

ஆடைகள் 

இதுவரை ஆடைகள் இல்லாமல் இருந்தமனிதன் , இடம் விட்டு இடம் மாறும் பொது தனது உடல் ,புதிய இடங்களின் தட்ப வெட்ப நிலைகளை தாக்கும் வகையில் ,எதோ ஒன்றை தன் உடல் மீது போர்த்த வேண்டிய நிலைக்கு அவன்தான் 

அவர் உடுத்திய உடை, கோரை தழைத்தொடையும் தையிலையும், மரப்பட்டையும் விலங்குத்தோலுமாகும் 

நெருப்பு உருவாக்கம் 

மூங்கில் மரங்கள் ஒன்றோடு ஓன்று உரசி நெருப்பு உருவானதை கண்ட மனிதன் அதை கண்டும் முதலி ஓடினான் , பின் அந்த மூங்கில் மரங்களில் கூடி கட்டி வாழ்ந்த பறவைகள் சில நேர சிறு நெருப்புக்கு உட்பட்டு , உடல் வெந்து கிழே விழுந்த பொது , அதான் சுட்ட பறவை மாமிசம் தின்று பார்த்தான் , அதான் சுவை அறிந்து , உணவே சுட்டு உண்ணா ஆரமித்தான் .

கற்களை கருவிகளாக பயன்படித்திய பொது , ஒன்றான் மீது ஓன்று படும் பொது இரு நெருப்பு வருவதை கண்ட மனிதன் , இந்த நெருப்பை கையாள்வது எளிது என நினைத்து , கற்களோடு கற்களை உரசி நெருப்பை உண்டாக்கி , தனது தேவைகளுக்கு பயன்படுத்த ஆரமித்தான் .

அணுகாதும் அகலாது மிருந்து குளிர்காய்தல், இறைச்சி சுடுதல், இருள் நீக்கல், குளவியைக் கலைத்துத் தேனெடுத்தல், கொடுவிலங்கு வெருட்டல் முதலியன தீயின் மூலம் தீர்த்து கொண்டான் மனிதன்.

பயமும் பக்தியும் 

நன்மை தீமை களை செயவும் இயற்கை வளங்களை தெய்வமாக வணங்க ஆரமித்தான் ,தீ, கதிரவன், திங்கள் போன்ற வற்றை தெய்வமாக வணங்கினான் .

இறந்தோர் ஆவி, பேய் இருப்பதாக நம்பி பயந்தான் , மேலும் பாம்பை கண்டும் பயந்து ஓடினான் (சும்மாவா சொன்னாங்க பாம்பு என்றால் படையும் நடுங்கும் என ),மரந்தொறும், மலைதொறும், நீர்நிலைதொறும் ஆவி அல்லது பேய் குடிகொண்டிருந்ததாகவும் நம்பினர்.

இறந்து போன மனிதர்களை குடியிருப்பிற்குச் சற்றுத் தொலைவான இடத்திலுள்ள குழியிலிட்டு, காகங்கழுகும் நரியோரியும் தின்னாவாறு மண்ணால் மூடிவிடுவதை கடைபிடிக்க ஆரமித்தான்.

                                                                                                   தொடரும்.......................................

No comments:

Post a Comment