Monday, February 27, 2012

நாம் யார் -18

பாகம்-17 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

பாரதக் காலம் (தோரா. கி.மு. 1100-1000)

பீடுமன் பரசுராமனிடம் விற்கலைபயின்றவன் என்று சொல்லப்படுவதால், பாரதக்காலம் இராமாயணக் காலத்திற்கு இருதலைமுறையே பிற்பட்டதாகும்.

பாண்டவரும் கௌரவரும் திங்கள் மரபைச் சேர்ந்தவர். வடநாட்டுத் திங்கள் மரபு,பாண்டியன் கங்கைக்கண் நிறுவிய தனது நிர்வாக தேவைக்காக குடியேற்றிய தமிழர்கள் . பாண்டவரின் முன்னோர் புதன் (அறிவன்),புரூரவன், ஆயு, நகுடன், யயாதி, பூரு, துடியந்தன், பரதன்,அத்தி, குரு, சந்தனு, பீடுமன், விசித்திரவீரியன்,திருதராட்டிரன், பாண்டு என்போர். பீடுமன் கௌரவ பாண்டவரின் பாட்டனும், திருதராட்டிர பாண்டுவர்அவரின் தந்தைமாரு மாவர்.

அருச்சுனன் (மருதன்) தென்னாட்டுத் திருநீராட்டு வருகை

அருச்சுனன் குமரிநீராடத் தென்னாடு வந்தபோது பாண்டியன் (சித்திராங்கதன்) மணவூர் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டிருந்தான். அங்குப் பாண்டியனின் விருந்தினனா யிருந்த அருச்சுன னுக்கும் பாண்டியன் மகள் சித்திராங்கதைக்கும் இடையே காதல் நேர்ந்ததனால், இருவருக்கும் திருமணம் நிகழ்ந்தது. இந்த மாதிரி வட நாடு , தென்னாடு பிணைப்போடு இருந்துள்ளது.

ஆரியன் என்னும் சொல்

ஐரோப்பிய மொழிகளும், பாரசீகமொழியும், வேத மொழியும் சமற்கிருதமும், வடஇந்திய மொழிகள் மட்டுமன்றி நடுவிந்தியமொழிகளும், இன்று ஆரியம் என்று சொல்லப்படினும்,முதன்முதல் அப் பெயர் ஏற்பட்டது வேதமொழியும் சமற்கிருதமும் ஆகிய வடமொழிக்கே. சென்றநூற்றாண்டில் மாகசுமுல்லரே வேத மொழிக்கு அல்லதுசமற்கிருதத்திற்கு இனமான மொழிகட் கெல் லாம்ஆரியம் என்னுஞ் சொல்லைப் பொதுப்பெயராகவழங்கினார்.

ஐரோப்பிய மொழிகட்கும்பாரசீகத்திற்கும் ஆரியம் என்னும் பெயர் பொருந்தினும் வடஇந்திய மொழிகட்கு, சிறப்பாகநடுவிந்திய மொழிகட்கு, அப் பெயர் பொருந்தாது.வடமொழியாளரே வேதக்காலத்தின்பின்,தென்னிந்திய மொழிகளை யெல்லாந் திரவிடமொழிகள் என்று கொண்டு, தமிழ், தெலுங்கு,கன்னடம், மராத்தி, குசராத்தி ஆகிய ஐந்தையும்ஐந்திரவிடம் (பஞ்ச திராவிட) எனக் குறித்தனர்.வடஇந்திய மொழிகளை 'முன்வடமொழி' (பிராகிருதம்)எனக் குறிப்பதே பொருத்தமாம்.

தொல்காப்பியம் (கி.மு.7ஆம் நூற்றாண்டு)

தொல்காப்பியம் இன்றுள்ள முதல் தொன்னூல் மட்டுமன்றி, பண்டைத் தமிழ் நாகரிகத்தையும் பண்பாட்டையும் தாங்கிநிற்கும் ஒரு பெருந் தூணாகும். அஃதின்றேல், கடைக்கழகத்திற்கு முந்திய தமிழும் தமிழ் வரலாறும் அதனால் தமிழர் வரலாறும் அறவே இல்லாமற் போம்; தமிழன் உலகுள்ள வளவும் ஆரியனுக் கடிமையாகவே இருந்துழல்வான். குமரிநாட்டுத் தமிழன் தன் நுண்மாண் நுழைபுலத்தால் வகுத்த பொருளிலக்கணம், அதற்கு அச்சிறப்பைத் தந்துள்ளது.

தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ள (அகமும் புறமும்பற்றிய) பாட்டு, உரை, நூல் (இலக்கணமும் பல்வேறு அறிவியலும்), வாய்மொழி (மந்திரம்), பிசி (விடுகதை), அங்கதம் (எதிர்நூல்), முதுசொல் (பழமொழி) என்னும் எழுநில யாப்பிற்கும்; வெள்ளை, ஆசிரியம், கலி, வஞ்சி, மருள், பரிபாடல் என்னும் அறுவகைப் பாவிற்கும்; புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, அவையடக்கியல், செவியுறை என்னும் நால்வகை வாழ்த்திற்கும்; பாவண்ணம், தாவண்ணம் முதலிய இருபதுவகை வண்ணத்திற்கும்; அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எண்வகை வனப்பிற்கும் இலக்கியமா யிருந்தவற்றுள் ஒன்றுகூட இன்றில்லை.

தொல்காப்பிய அரங்கேற்றம்

தொல்காப்பியர் அகத்தியரின் மாணவரல்லர். மாணவராயின் அகத்தியரை அல்லது அகத்தியத்தைத் தம் நூலிற் குறித்திருப்பார்.அகத்தியர் தலைமையிலேயே  தொல்காப்பியமும்அரங்கேற்றப் பட்டிருக்கும். "முந்துநூல் கண்டு" என்றதற் கேற்ப, "என்மனார் புலவர்" என்று பலர்பாலிலேயே முன்னூலாசிரியரைத் தம் நூல் முழுதும் குறித்திருக்கின்றார்.  அகத்தியர்க்கும் தொல்காப்பியர்க்கும் இடைப்பட்ட காலம் ஏறத்தாழ ஐந்நூறாண்டாகும். முன்னவரின் மாணவரேபின்னவர் என்று கொண்டவர்,அகத்தியரைப்பற்றித் தொல்காப்பியத்தில் ஒரு குறிப்பு மின்மையால், அதற்குங் கரணியங்காட்டுவார்போல் ஒரு கதையைக் கட்டிவிட்டனர்.

தொல்காப்பியர்காலத்தில் கழகமும் ஏற்படவில்லை. பாண்டியன் பெரும்பாலும் மணவூரில் வதிந்திருத்தல் வேண்டும்.அற்றைப் பாண்டியன் பெயர் நிலந்தரு திருவிற்பாண்டியன் என்று, பனம்பாரனார் குறித்துள்ளார். அவன் இரண்டாம் கடல்கோட்குத் தப்பினஇடைக்கழகப் பாண்டியன் அல்லன். நிலமில்லாத தன்குடிகள் சிலர்க்கு நிலம் ஒதுக்கியதனால், அப்பெயர் பெற்றிருத்தல் வேண்டும்.

தொல்காப்பியத்திலுள்ளஆரியக் கருத்துகளும் ஒருசில வட சொற்களும் பற்றி நாம் வருந்த வேண்டுவதில்லை. அது அக்காலத்துநிலைமை. ஆரியக் கருத்தும் சொல்லும்கொண்டிருந்ததனாலேயே, அது இதுவரை அழிவுறாம ல்தப்பிவந்துள்ள தென்று நாம் உணர்ந்துமகிழவேண்டும்.(யாராவது தொல்காப்பியத்தில் வடமொழி சொல் இருக்கு என்று கொளுத்துவதற்கு கிளம்பி விடாதிர்கள் )
                                                                                                  தொடரும்.......................................

No comments:

Post a Comment