Monday, February 20, 2012

நாம் யார் -13

பாகம்-12 படிக்காதவர்கள் ,படிக்க  இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.


பழம்பெரும் தமிழ் நாகரிகம் 

மேனாடுகளுள் முதற்கண் நாகரிகமடைந்தவை சுமேரியாவும் எகிப்தும் ஆகும்.

சுமேரியர், கொளுவுநிலை (Agglutinative) மொழி பேசிய துரேனிய அல்லது சித்திய இனத்தார்.பிற்காலத்தில் சேமிய வகுப்பார் சுமேரியாவைக்கைப்பற்றினர். சுமேரிய நாகரிக வழிப்பட்டது பாபிலோனிய நாகரிகம். இரண்டிற்கும் உரிய நாடு மெசொப்பொத்தாமியா. அது தைகிரிசு ஐப்பிராத்து என்னும் இரண்டுக்கும் கிடையில், கீழைத்துருக்கி நீங்கலாக உள்ள நாடாகும். இன்று கிடைத்துள்ள முதற்பழஞ் சுமேரிய வெட்டெழுத்தின் காலம் கி.மு 3100,சுமேரிய மொழி கி.மு. 2000 வரை ஆட்சிமொழியாயிருந்தது. அதன்பின், பாபிலோனிய அக்கேடிய (Akkadian) மொழி அதன் இடத்தைக் கொண்டது.

தென் பாபிலோனிய அல்லது தென்கல்தேயத் (Chaldean)தலைநகரான ஊர் என்னும் நகர் இருந்த இடத்தில்  அகழ்வில், கி.மு. 3000 ஆண்டிற்கு முற்பட்ட சேரநாட்டுத் தேக்கு உத்தரம் எடுக்கப்பட்டுள்ளது.நிலாத் தெய்வத்திற்கு அங்கொரு கோவிலும் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. பாண்டியர் திங்களைத் தம் குடிமுதலாகக் கொண்டிருந்ததனால்,முதற்காலத்தில் அதைத் தெய்வமாகவும்வணங்கியிருத்தல் வேண்டும். பொதுமக்களும் அதைவணங்கியதைப் ‘பிறைதொழுகென்றல்‘ என்னும் அகப்பொருட் டுறையால் அறியலாம். பூம்புகாரில் ஒருநிலாக்கோவில் இருந்தது.

எகிபதிய அரசாட்சி, 31 ஆள்குடிகள் (Dynasties) தொடர்ந்து, தோரா. கி.மு. 3100-லிருந்து தோரா. கி.மு.335 வரை இருந்து வந்தது. அதன்பின், கி.மு. 332-ல் மக்கதோனியப் பேரரசனான மா அலெக சாந்தர்எகிபதுவைக் கைப்பற்றினான். தொன்மையில்,எகிபதுவும் சுமேரியாவும் ஏறத்தாழச் சமமாகும்.

ஆப்பிரிக்காவின் தென்பாகத்தினின்றும் மேலையாசியா வினின்றும் அடுத்தடுத்துச் சென்ற மக்கட்கூட்டத்தாரே, நீலாற்றின் பள்ளத்தாக்கிலுள்ள சதுப்புநிலங்களையடுத்த தாழ்நிலங்களை, நாலாயிரம் ஆண்டாக மெள்ளமெள்ளத் திருத்திக் குடியிருந்தனர் என்று எகிபதுநாட்டு வரலாறு கூறுகின்றது. அந் நாட்டிற்கும்இந்தியாவிற்கும் தொன்றுதொட்டு வணிகத்தொடர்பிருந்ததாக, வரலாற்று ஆராய்ச்சியாளர்கூறுகின்றனர்.

"ஆசியாவினின்று கடல் வழியாக,முதற் குடியேற்றக் கூட்டத் தார் கி.மு. 3000-ற்குப்பிற்படாது கிரேக்க நாட்டிற்குச் சென்ற போதே, மெசொப்பொத்தாமியாவில் ஊர் நாகரிகம்முழுவளர்ச்சி யடைந்திருந்தது. அவர்கள்,செப்பறைத் தீவிலும் (Cyprus)கிரேத்தாத் தீவிலும் (Crete)சில சைக்கிலேடுகளிலும் (Cyclades),கிரேக்கத் தீவக் குறையில் மேற்குப் பாகத்தை விடவெப்பமாகவும் காய்ந்துமிருந்த கிழக்குப்பாகத்திலும் குடியேறினார்கள். அன்று அவர்கள்பயிர்த்தொழிலிலும் கடற்செலவிலும் முல்லை வாழ்க்கையிலும் பயின்றிருந்தனர். ஆயினும்,அன்றும் அவர்கள் புதுக் கற்கால நிலையிலேயே யிருந்தனர். ஏனெனின், அவர்கள் கருவிகள் கல்லாலும் பெரும்பாலும் மெலோசுத் (Melos)தீவிற் கிடைத்த புட்டிக்கண்ணாடி போன்ற எரிமலையுறைகூழாலுமே (obsidian)செய்யப்பட்டிருந்தன.

தோரா. கி.மு. 2600 ஆன கிரேக்கஉறைக்காலத் தொடக்கத்தில் (சில ஆசிரியர் உறைக்காலத்தைச் செம்புக்கால மென்றும் சரியான உறைக்காலமென்றும் பிரித்து, அதன்தொடக்கத்தைத் தோரா. கி.மு. 2900 என்றும் முந்தியதாக்குவர்.), செம்பைப் பயன்படுத்தத் தெரிந்தவேறு சில கூட்டத்தாரும் சென்று, முன்பு சிதறலாகக்குடியிருந்தவரொடு கூடிக்கொண்டனர். அவர்களும் ஆசியாவினின்று சென்றவர் களாகவும், தங்கட்குமுந்தினவரின் இனத்தைச் சேர்ந்தவர்களாகவும்பெரும்பாலும் இருந்திருக்கலாம்.

மெசொப்பத்தாமியாவிலும்எகிப்துவிலும் நாகரிக மாந்தனாற் செய்யப்பட்ட திருந்திய கலைகளும் தொழில்களும், ஐரோப்பாவில்முதற்கண் கிரேத்தாத் தீவின் மினோவராலும் (Minoans)கிரேக்க நாட்டு மைசீனியராலும் (Mycenaeans) உறைக்காலத்தில் தழுவப்பட்டு வளர்க்கப்பட்டன.

கிரேக்கரின் நகர நாட்டுக்காலத்தில் (கி.மு.458-404) அரசியல் மதியியல் (அகக்கரணவியல்) குமுகாயவியல் புத்தெழுச்சி யுண்டாயிற்று. கிரேக்க நாகரிகம், கி.மு. 8ஆம்நூற்றாண்டிலிருந்து நண்ணிலக் கடற்கரை ஐரோப்பியநாடுகட்கும் கருங்கடற்கரை நாடுகட்குங்கொண்டுசெல்லப்பட்டது.

கிரேக்கராலும்மக்கதோனியராலும் (Macedonians)கி.மு.4ஆம் நூற்றாண்டில் ஒரு பேரரசுஏற்படுத்தப்பட்டது. மக்கதோனிய அரசனானமாஅலெகசாந்தர் (Alexander the Great-கி.மு 356-323), சிந்துவெளிவரை அப் பேரரசைவிரிவுபடுத்தினான். கி.மு.5ஆம் நூற்றாண்டில்உரோமப் பேரரசு கிரேக்கப் பேரரசை வீழ்த்தியது.

உரோமப் பேரரசின் தலைநகர், கி.மு.330-ல், உரோமநகரத்தினின்று (பின்னர்க்கான்சுத்தாந்தினோபில் எனப் பெயர்பெற்ற)பிசந்தியத்திற்கு (Byzantium)மாற்றப்பட்டபோது, பிசந்தியப் (Byzantine)பேரரசு தொடங்கிக் கி.பி. 1453 வரை நீடித்தது.பிசந்தியத்திலும் அதையடுத்த சுற்றுப்புறத்திலும்கிரேக்கரே யிருந்தனர். கிரேக்கப் பேரரசில்மட்டுமன்றி, உரோமப் பேரரசிலும் பிசந்தியப்பேரரசிலும் கிரேக்க நாகரிகமே இணைப்புக் கூறாகஇருந்து, இற்றை ஐரோப்பிய நாகரிகத்திற்குஅடிகோலிற்று. ஆயின், அக் கிரேக்கநாகரிகத்திற்கு அடிமணை தமிழ நாகரிகம் என்பதைஉலகம் இன்னும் அறிந்திலது.

மேலையாசியாவினின்று, கிரேக்கநாட்டிற்கு மக்கள் குடியேறு முன்பே, கொளுவுநிலைமொழிகளைப் பேசிக்கொண்டிருந்த துரேனியஇனத்தார் வட ஐரோப்பாவிற் குடியேறிவிட்டனர்.

துருக்கியர் (Turks),காசக்கர் (Cossacks)முதலிய வகுப்பார் சேர்ந்த தார்த்தாரிய (Tartarian)இனத்தாரும் இரசியாவிற் குடியேறி யிருந்தனர்.அதனாலேயே, "Scratch a Russian and you find aTartar" என்னும் ஆங்கிலப் பழமொழியெழுந்தது.

ஆரியர் இந்தியாவிற்கு வந்தவிதம் 

துரேனியர்க்கும் தார்த்தாரியர்க்கும் பின் மேலையாரியரின்முன்னோரான வடதிரவிடர் வடமேலை ஐரோப்பாவிற்குடியேறி னர். அங்கு அவர் மொழி தியூத்தானிய (Teutonic)ஆரியமாகத் திரிந்தது. அது பின்னர்த் தெற்கில்இலத்தீன முறையிலும் அதன்பின் கிரேக்க முறையிலும்மாறிற்று. அதற்கடுத்த திரிபே கீழையாரியமூலமாகும். அதுவும் பின்னர் இந்தியம் ஈரானியம்என்னும் இருகிளையாகப் பிரிந்தது.

                                                                                                    தொடரும்.........................................

No comments:

Post a Comment