Wednesday, February 29, 2012

நாம் யார் -20

பாகம்-19 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

மதுரை நகர் (தோரா. கி.மு. 5ஆம் நூற்றாண்டு)

இரண்டாங்கடல்கோட்குப் பின், நீண்ட காலமாகக் கொற்கையிலும் மணவூரிலும் பாண்டியர்கள் ஆண்டு வந்தனர்.அதன் பின், வைகைக் கரையில் இருந்த கடம்பவனம் என்னும் கடப்பங்காடு அழிக்கப்பட்டு இற்றை மதுரை கட்டப்பட்டது. பஃறுளிக்கரைமேலிருந்த பாண்டியன் முதல் தலைநகர்ப் பெயரே இதற்கும் இடப்பட்டதனால்,அப் பெயர்க் கரணியமே இப் பெயர்க்குமாம்.அக்கால வழக்கிற் கேற்ப, மதுரையைச் சுற்றிநாற்புறமும், பல்வேறு போர்ப் பொறி களைப் பொருத்தற்கும் நொச்சி மறவர் நின்று போர்செய்தற்கும் ஏற்றவாறு, அகன்றுயர்ந்த கோட்டைமதில் எழுப்பப்பட்டது. நாற்புறமும் கோட்டை வாயிலும் வாயில்தொறும் மேன்மாடமும்அமைந்தன. மதின்மேல் இடையிடை காவற்கோபுரங்களும் கட்டப்பட்டன. வாயின்மாடச்சிறப்பினால் மதுரை மாடமதுரை யெனப்பட்டது.

கடைக் கழகத் தொடக்கம் (கி.மு. 5ஆம் நூற்றாண்டு)

மதுரை மாநகர்அமைக்கப்பட்டவுடன், மூன்றாம் புலவர் கழகமும் தோற்றுவிக்கப்பட்டது. 49 உறுப்பினராயினர். முக்கழகத்திலும் உறுப்பினர் தொகைக்கு வரையறை இல்லை. அந்த அந்த காலத்தில்தலையாய புலவர் அல்லது சிறந்த புலவர் எத்தனை பேரோ அத்தனைபேரும் இடம்பெற்றனர். புதிதாக யாரேனும்சிறந்த புலவர் வந்தாலும் சேர்க்கப்பட்டனர்.இதனையே, தகுந்த புலவர் வந்தாலும் கழகப்பலகை தானே ஒருமுழம் நீண்டு இடந்தரும் என்னும் மரபுரை குறிக்கும்.49 என்னும் தொகை ஏழேழென்று வகுக்கப்படுவதால், மொழிப்பற்றும் மூப்பும்புலமைத்திறமும் பார்க்காது, மதம்பற்றியோ குலம்பற்றியோ நிலம்பற்றியோ ஏழெழுவர் தொகுக்கப்பட்டனர் . எத்தனைவர் வந்தாலும் ஏற்றுப் பொருள் செலவு செய்யும் அளவிற்கு செல்வம் பாண்டியனிடத் திருந்தது. முக்கழகத்திலும் புலவர் தொகையை ஒன்பதென்னும் எண்ணில் முடித்தது.

திரித்து விடப்பட்ட கதைகள் 

இடைக்கழகத்திற்கும் கடைக்கழகத்திற்கும் 20,000 நூறாண்டிற்குமேல் இடைவெளி ஆனதனால்,இடைக்கழகத் திறுதிப் பாண்டியனான முடத்திருமாறனே கடைக்கழக முதற் பாண்டியனானான் என்பது பொருந்தாது.

இந்த கழகத்திற்குத் தொகை யென்றும், கூடல் என்றும் பெயர்கள்ஏற்பட்டன. அதன்பின், இடவாகு பெயராக மதுரையும் கூடலெனப்பட்டு, மாடச் சிறப்பால் மாடக்கூடல், நான்மாடக்கூடல் என்னும் பெயர் பெற்றது மாடங்கள் மேகங்கள் படும் அளவிற்கு வானளாவவுயர்ந் திருந்ததனால், நான்முகின் மாடக்கூடல் என்று புலவர் புகழ்ந்துபாடினர். அத் தொடரைத் தொல்கதையாளர் பயன்படுத்திக் கொண்டு, மதுரை மேல் கடுமையான மழைபொழிந்த நான்முகில்களை நான்மாடங்கள் கூடித்தடுத்தன வென்று கதை விட்டனர்.

மதுரைக் கோட்டைவாயில் ஒன்றன் முன், ஒரு மூதால மரம்படர்ந்தோங்கி யிருந்ததனால், அவ்விடம் ஆலவாய் என்று பெயர் பெற்றிருந்திருக்கலாம். அப்பெயரையும் பொருள் திரித்து, பாம்பினால் எல்லைகாட்டப்பட்ட விடமென்று கதை கட்டி விட்டனர். ஆலவாய் என்பது முதலில் நான்மாடங்களுள் ஒன்றன் ஒருவனின் பெயராகவே யிருந்தது.(இன்றையா அரசியல் வாதிகள் சொல்லுவதை போல மதுரையை மீட்டும் என தம்பட்டம் அடிப்பது போல அன்றே இந்த மாதிரி திரித்து கதை விட்டுள்ளனர் )

சமற்கிருத ஆக்கம்

வேத ஆரியர் என்று சொல்லப்படும் இந்திய ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்தவுடன் தம் (கிரேக்கத்தை யொத்த) மொழியைமறந்துவிட்டனர். இதற்கு அவர் சிறுதொகை யினராயிருந்ததும் பழங்குடி மக்களுடன் கலந்து போனது தான் காரணம்.

ஆரியப்பூசாரியரும் அவரைப் பின்பற்றிய விசுவாமித்திரன் போன்ற ஒருசில நாட்டுமக்களும்,பாடிய மந்திரத் தொகுதி என்னும் பாடற்றிரட்டே இருக்கு வேதமாம். 

ஆரியப்பூசாரிகளான பிராமணர் தென்னாடு வந்து தமிழரொடு தொடர்பு கொண்டபின். வேதமொழியுடன் ஏராளமான தமிழ்ச்சொற்களும் அவற்றினின்று திரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானபுதுச்சொற்களும் இடுகுறிச் சொற்களும் கலந்து,கலவை மொழியில் இதிகாச புராணங்களும் தரும சாத்திரங்களும் நாடகங்களும் பிறவும்இயற்றப்பட்ட பின்னரே, கி.மு. 6ஆம்நூற்றாண்டுபோல் சமற்கிருதம் என்னும் அரைச்செயற்கையான இலக்கிய நடைமொழி நிறைவாக உருவாயிற்று. பிராகிருதம் (பிராக்ருத) என்பது முந்திச் செய்யப்பட்டது என்றும், சமற்கிருதம் (ஸம்ஸ்க்ருத)என்பது கலந்து செய்யப்பட்டது என்றும் பொருள்படும்.(நம்மிடம் இருந்து கற்று கொண்டு நமது மொழி யோடு சேர்த்து வந்தது தான் சமற்கிருதம்) 

இந்தைரோப்பியம்,வேதியம், சமற்கிருதம் என்னும் மூவேறு நிலைகளில் , ஆரியம் தமிழ்ச்சொற்களைக் கடன் கொண்டுள்ளது.வேதியம் கடன்கொண்டது வடநாட்டுப் பிராகிருதவாயிலாக என்பது தெரிகிறது . வடமொழி என்னும் பெயர் வேதமொழிக்கும் சமற்கிருதத்திற்கும் பொது வாகும்.பைசாசி, சூரசேனி, மாகதி என்று வடநாட்டில் மூன்றும்,திராவிடி என்று தென்னாட்டில் ஒன்றுமாக,பிராகிருதம் நான்கென வகுத்தனர்.

பாணினீயம் 

சமற்கிருதத்தின்தலைசிறந்த இலக்கண நூலாகிய பாணினீயம்பாணினியால் கி.மு.4ஆம் நூற்றாண்டில்இயற்றப்பட்டது. இலக்கணநூலை வியாகரணம் என்பர்வடநூலார். அது கூறுபடுப்பு(Analysis) என்னும் பொருளது. நந்நான்கு இயல்கள் (பாதங்கள்) உள்ள எண்ணதிகாரங்கள் (அத்தியாயங்கள்) கொண்டது பாணினி வியாகரணம். அதனால் அது அட்டாத்தியாயீ (அஷ்டாத்யாயீ) எனப் பெயர்பெற்றது. அதன் நூற்பாக்கள் (சூத்திரங்கள்) ஏறத்தாழ 3980. அந் நூற்கு முன் எண்ணிலக்கண நூல்கள்இயற்றப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. அவற்றுள் முதலது வேதகாலத்த தெனப்படும் ஐந்திரம்.

தொல்காப்பியம் பாணினீயத்திற்கு மூன்று நூற்றாண்டு முந்தியது.


                                                                                                      தொடரும்..........................

No comments:

Post a Comment