Wednesday, February 8, 2012

நாம் யார் -3

பாகம்-2படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.


தமிழ்த் தோற்றம் (செயற்கை மொழி)

சைகை மொழியாகவும் வாய் மொழியாகவும் பேசி திரிந்த மாந்தங்கள் , எழுத்து வடிவம் கொடுக்க ஆரமித்தார்கள் , இந்த வாய் மொழிகள் இடத்திற்கு இடம் மாறுபட்டு இருந்தது எப்படி என்றால் , அங்கே நிலவிய சூழலுக்கு ஏற்ப தான் கண்ட காட்சிகள் , விலங்குகளின் ஒலிகளை போன்றவரை உள்வாங்கி , வாய் மொழியே பேசினான் ஆதி மனிதன் , இதன் ஒரு பகுதியாக எழுத்துகளை உருவாக்கும் எண்ணம் உதித்து எழுத்துகளை உருவாக்கினார்கள் .

 சுட்டொலிகளினின்றுஞ் சொற்கள் தோன்றியதே தமிழ்த் தோற்றமாம். இது செயற்கை மொழி (Artificial Language) அல்லது இழைத்தல் மொழி (Articulate Speech) எனப்படுகிறது.

கி.மு. 50,000 ஆண்டுகளில் மாந்தர்களின் மொழி யெல்லாம் இசைப்பாட்டாகவே இருந்திருக்கிறது.காதல், இன்பம், வெற்றி, மகிழ்ச்சி, துன்பம் முதலிய மன நிலைகளிலேயே மாந்தர்கள் இசைவுணர்ச்சியும், மொழியாற்றலும் மிக்கவராகவும் -இசைமொழி வாயிலாய்த் தம் கருத்தை வெளியிட்டுள்ளனர்.

உரை, செய்யுள் (அல்லது பாட்டு) என்னும் இருவகை மொழி நடையுள், முதலில் தோன்றியது முன்னதே. அதுவும் தனித்தனி சொல்லாகவே தோன்றிற்று. ஆகவே, சொல்லே மொழியலகாம் (Unit of speech). உள்ளத்தில் தோன்றும் கருத்து, அதைத் தெரிவிக்கும் சொற்றொடர்க்கு முற்றும் ஒத்ததன்று.

 மொழி இயற்கையானதாயின் எல்லா மக்களும் கல்லாமலே ஒரே மொழி பேசுதல்வேண்டும். அங்ஙனமில்லை. மக்கட் கூட்டங்களின் நாகரிக நிலைக்குத் தக்கவாறு, மொழிகள் வெவ்வேறு வகைப்பட்டும் நிலைப்பட்டும் அமைப்புக் கொண்டும் உள்ளன. சில அநாகரிக மாந்தர் மொழிகள் பறவை விலங்கொலிகளினும் சற்றே உயர்ந்தவையாகும். எத்துணை உயர்தனிச் செம்மொழியாயினும், தலைசிறந்த அறிவியல் வளர்ச்சி பெற்ற மக்களாயினும், ஒவ்வொரு சொல்லாய் மெல்ல மெல்லக் கற்றாலன்றி ஒருவரும் தம் தாய்மொழியைப் பேசவியலாது.

தமிழ் வளர்ச்சி

இலக்கணம் வகுத்து ,எழுத்துகளை வகை பிரித்து , உரைநடை வகுத்து , என பல பரிமாணத்தில் தமிழ் வளர்ச்சி பெறுகிறது , இவ்வாறு உருவான தமிழ் இதுவரை குமரி கண்டத்தில் குறிஞ்சி நிலத்தில் இருந்து தோன்றியது , 

பின் முல்லை நிலத்திற்குப் பரவிய போது, அந் நிலத்திற்குச் சிறப்பாகவுரிய கருப் பொருள்கள்பற்றிய சொற்கள் பிறந்தன. அதன்பின் முல்லையடுத்த மருதநிலத்திற்குப் பரவியபோது, அந் நிலத்திற்குச் சிறப்பாகவுரிய கருப் பொருள்கள்பற்றிய சொற்கள் தோன்றின. அதன்பின், மருதத்தை யடுத்த நெய்தல்நிலத்திற்கு மருத நகர் மீன்பிடியாளர் குடியேறி வாழ்ந்தபோது, அந் நிலத்திற்குச் சிறப்பாகவுரிய கருப்பொருள்கள்பற்றிய சொற்கள் எழுந்தன.

முதற்கால மாந்தர் செயற்கை நீர்நிலை அமைக்கத் தெரியாதிருந்த காலத்தில், இயற்கை நீர்நிலையான ஆற்றையே நம்பியிருந்தனர். இற்றைத் தமிழகத்திற் போன்றே பழம்பாண்டி நாடான குமரிக்கண்டத்திலும், பெருமலைத் தொடர்கள் மேல்கோடியிலே இருந்தன. அவற்றினின்று பஃறுளியும் குமரியும் போன்ற ஆற்றை யடுத்தே மக்கள் பரவின்,

மாந்தர் செயற்கை நீர்நிலை அமைக்கத் தெரியாதிருந்த காலத்தில், இயற்கை நீர்நிலையான ஆற்றையே நம்பியிருந்தனர். இற்றைத் தமிழகத்தை போன்றே பழம்பாண்டி நாடான குமரிக்கண்டத்திலும், பெருமலைத் தொடர்கள் மேல்கோடியிலே இருந்தன. அவற்றினின்று பஃறுளியும் குமரியும் போன்ற ஆற்றை யடுத்தே மக்கள் பரவியுள்ளனர்.

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்ற முறையிலேயே நிலங்களை அடைந்திருக்க முடியும். இந் நிலைமை இற்றைத் தமிழகத்திற்கும் ஏற்றதாதல் காண்க. முந்தியல் மாந்தர் முந்நிலை நாகரிகத்தையும் முறையே அடைதற் கேற்றவாறு, குறிஞ்சி முல்லை மருதம் ஆகிய முந்நிலமும் அடுத்தடுத்திருத்தல் தமிழ் நாட்டிற்போல் வேறெங் கணுமில்லை.


மன்னர்கள் 

வெற்பன், குறும்பொறைநாடன், ஊரன், துறைவன், விடலை என்னும் ஐந்திணைத் தனியூர்த் தலைவராட்சிக்குப் பின், பலவூர்க் கிழமை பூண்ட வேளிரின் குறுநில ஆட்சி வந்து, அதன்பின் சேர சோழ பாண்டியரின் பெருநிலை ஆட்சி தோன்றியபோது, தமிழ் ஐந்திணைச் சொற்களும் சேர்ந்த பெருவள மொழியாயிற்று, மருதநிலத்தில் நகர்கள் தோன்றிய நாகரிகம் வளர்ந்து பல்வேறு தொழில்களும் கலைகளும் அறிவியல்களும் ஏற்பட்ட பின், தமிழ் மேன்மேலும் வளர்ந்தோங்கி நின்றது.
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      .                                                                                                               தொடரும்.......................

No comments:

Post a Comment