Saturday, February 18, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-6


பாகம்-5 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

தேர்தல் ஆணையம்
==================

ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை ஆரமித்தலும் சங்கரன்கோவில் இடைதேர்தல் தேதி யை இப்போது தான் வெளியீட்டு உள்ளது தேர்தல் ஆணையம் .

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் :- 16.02.2012

வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் :- 22.02.2012

வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் :-29.02.2012

வேட்பு மனு பரிசீலனை செய்யும் நாள் :- 01.03.2012

வேட்பு மனு திரும்ப பெரும் இறுதி நாள் :-03.03.2012

வாக்குபதிவு நடைபெறும் நாள் :-18.03.2012      (காலை:- 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை )

வாக்குகள் எண்ணப்படும் நாள் :- 21.03.2012

வாக்கு பதிவு மின்னணு வாக்கு பதிவு இந்திரங்கள் மூலம் நடைபெற இருக்கிறது.

அதிமுக
=======

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னே வேட்பாளர் அறிவித்து விட்டு , 26 அமைச்சர்களை தேர்தல் பணிக்கு அனுப்பி விட்டது ,ஏன் இந்த பயம் ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுகவிற்கு , ஒரு வேளை கடந்த எட்டுமாத அரசு மேல் மக்களின் கோபம் இடைதேர்தலில் காலைவாரிவிட்டால் என்ன செய்ய , என்ற பயத்தில், லாரி , லாரியாக இலவசங்களை கொண்டு பொய் அனைத்து தரப்பிலும் முழு மூச்சில் தர , தமிழக அரசின் ஓட்டு மொத்த கவனமும் , ஏன் மொத்த அரசாங்கமே அங்கே முகாம் இட்டு தேர்தல் பணி செய்து வருகிறது .முதலில் உளவு துறை அறிக்கை ஆளும் கட்சிக்கு சாதகமாக வரவில்லை என்பது உண்மை.இவர்கள் பெரிதும் நம்பி இருப்பது நகர்புற வாக்குகளையும் , பெண்களின் வாக்குகளையும் தான் , அதான் நகர்மன்ற தலைவியாக இருக்கும் பெண் வேட்பாளர்.

மதிமுக
=======
இவர்கள் அதிமுக வை விட முன்பே தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டார்கள் , வேட்பாளர் மட்டும் அறிவிக்க வில்லை , தனது ஊத்திகளை எல்லாம் பயன் படுத்த ஆரமித்து விட்டார் , மதிமுக பொது செயலாளர் வைகோ , இவர்களின் தேர்தல் வேலைகளை பார்த்த அதிமுக திடுக்கிட்டு பொய் அவசர அவசரமாக வேட்பாளர் அறிவிப்பு , தேர்தல் பணி தொடக்கம் என ஆரமித்தார்கள் , உண்மையில் இவர்களை கண்டு அதிமுக அஞ்சியது உண்மை , வைகோ , ஒரு வழக்கறினார் குழுவை தேர்தல் களத்தில் இறக்கி விட்டு உள்ளார் , வழக்குகள் வந்தால் உடனுக்கு உடன் சந்திக்க அவர்களும் தயாராக இருக்கிறார்கள் . இன்னும் சில யுத்திகளை கையாள தயாராக இருக்கிறது மதிமுக முகாம் , இளைஞர் பட்டாளம் வேறு ஒருபக்கம் தயாராகி கொண்டு இருக்கிறது ,இவர்கள் வைக்கும் சுவர் விளம்பரங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது , இன்னும் வேட்பாளரை அறிவிக்க வில்லை , அதிலும் ஒரு சஸ்பென்ஸ் வைத்து உள்ளார்கள் .பெரும்பாலும் இவர்கள் கிராம புற வாக்குகளை அள்ளுவார்கள் என தெரிகிறது . நகர் புறத்தில் கொஞ்சம் பம்பரம் மெதுவாக சுற்றுகிறது , ஒருவேளை சட்டையை சுழற்றினால் , வேகம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது .

திமுக
=====

இவர்கள் ஏனோதானோ என எதோ தேர்தல் வேளை செய்ய வேண்டும் என்ற ரீதியில் களத்தில் அங்கு அங்கே தென்படுகிறார்கள் , காங்கிரஸ் கட்சிக்கு இணையாக கோஷ்டிகள் வேற , மூன்றாவது இடம் பிடித்தால் நல்ல வேளை என நினைத்து களத்தில் இருக்கிறார்கள் , ஆளும் கட்சி மேல் வெறுப்பு என்றால் அது நமக்கு தானே ஓட்ட விழும் என்ற வீண் கனவில் இருக்கிறார்கள் , மக்களின் கோபம் எட்டு மாதத்திற்கு முன் இருந்த இவர்களின் ஆட்சியும் மீது சேர்த்து தான் என்பது புரியாமல் பேசி கொண்டு இருக்கிறார்கள்.வேட்பாளர் அறிவித்து விட்டார்கள் , வேளைக்கு ஆள்கள் அமர்த்துவது போல தேர்தல் பணிகளை நடத்தி கொண்டு இருக்கிறார்கள் .

தேமுதிக
========

சும்மா இருந்தவர்களை சட்டமன்றத்தில் சீண்டி விட்டார்கள் ,முதலில் இவர்கள் போட்டி போட வேண்டாம் என்ற மனநிலையில் தான் இருந்தார்கள் , இவர்கள் போட்டி போடாமல் இருந்து இருந்தால் இவர்கள் பிரிக்கும் வாக்குகள் மதிமுகவிற்கு சென்று விட்டால் அவர்கள் வெல்வது உறுதி செய்ய பட்டுவிடும் , எனவே இவர்களை சீண்டி விட்டு வலுகட்டாயமாக தேர்தல் களத்திற்கு இழுத்து கொண்டு வந்துள்ளது ஆளும்கட்சி .கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாக இவர்கள் இப்போது இருக்கிறார்கள்.

இடதுசாரிகள்
============

இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன் எனோ தெரியவில்லை இந்த இடைதேர்தல் எல்லாம் நேர விரையம் என ஒரே வரியில் பதில் சொல்லிவிட்டார் .(தோழர்கள் இப்படியே எல்லா தேர்தலிலும் சொல்லிருவார்களோ ).ஜனநாயக அமைப்பு ஓன்று தேர்தல் நேர விரையம் என சொல்லுவது என்ன நியாயம் தெரியவில்லை.ஆனால் அதான் மற்றொரு மூத்த தலைவர் மதிமுகவிற்கு ஆதரவு தரும் எண்ணத்தில் இருக்கிறார் .

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டி போடலாம இல்லை , விஜயகாந்தை ஆதரிக்கலாமா என்ற ஒரு குழப்ப நிலையில் இருக்கிறார்கள் , ஏனோ சிகப்பு துண்டு காரர்களுக்கு கருப்பு துண்டு காரரை ஆதரிக்க முன் வருவதில்லை ,(ஒருவேளை அவரின் முல்லை பெரியாறு போராட்டம் இவர்களுக்கு பிடிக்கவில்லையோ )

இதர கட்சிகள்
=============

காங்கிரஸ் , என்னதா சொல்ல எதோ இருக்கிறார்கள் , கூட்டனி தருமம் காக்க திமுகவை ஆதரிக்க போகிறார்களோ என்னவோ , அவர்கள் தான் உள்ளாட்சி தேர்தலில் கூட்டனி தர்மத்தை மீறி தனித்து போட்டி போட்டார்களே , என்ன செய்ய?, கிணத்தில் போட்ட கல்லாக காங்கிரஸ் கட்சி.

கிருஷ்ணசாமி யின் புதிய தமிழகம் போட்டி இடுவார்கள் என தெரிகிறது , இவருக்கு போட்டியாக ஜான் பாண்டியனின் கட்சியும் களத்திற்கு வருவார்கள் போல ,(இல்லை ஒருவேளை வைகோவை ஆதரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது).

திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் ,கிருஷ்ணசாமி ,ஜான் பாண்டியனை மீறிய செல்வாக்கு இவர்களுக்கு இல்லை அதனால் தனித்து களம் காண மாட்டார்கள் ,யாருக்காவது ஆதரவு தருவார்கள் , இந்த தொகுதி தனி தொகுதியாக இருந்தாலும் இவர்கள் ஒதுங்கி இருப்பார்கள் என தெரிகிறது.

பாமக , என்ன காமெடி பண்ணுகிறார் களா என தொகுதி மக்கள் மக்களாட்சியை பார்த்து கேட்பது தெரிகிறது , எழுதும் பொது அனைவரையும் சேர்த்து தானே எழுத வேண்டும் , பிறகு மருத்துவர் கோபத்து கொள்ள மாட்டாரா(அவர் வேற 2016 ஆட்சி அமைக்க போகிறார் ) , இந்த தொகுதிக்கும் இவர்களுக்கு சமந்தமே இல்லை, அங்கே பொய் பாமக என கேட்டால் தெரியாது என்ற பதில் தான் முதலில் வரும்.

சில தமிழ் ஆர்வ இயக்கங்கள் இந்த முறை மதிமுகவை ஆதரிக்கும் எண்ணத்தில் இருக்கிறது , ஆனால் கடைசி நேரத்தில் இவர்களின் எண்ணத்தையும் கலைக்கும் முயற்சியும் நடக்கிறது.

இந்த மாதிரி எதிர்கட்சிகள் அனைத்தும் தனி தனியாக பிரிக்கும் வாக்குகள் அனைத்தும் ஆளும் கட்சியான அதிமுகவிற்கு சாதகமாக அமையும் என ஆளும் கட்சி நினைக்கிறது , முடிவுகள் எப்படி இருக்குமோ.

                                                                                                  தொடரும்.......................................

2 comments:

  1. எப்படியோ ...சங்கரன்கோவிலில் திருவிழா ஆரம்பித்து விட்டது ...

    மாண்புமிகு சங்கரன்கோவில் வாக்காள பெருமக்களே ..............
    http://naanoruindian.blogspot.in/2012/02/blog-post_17.html

    ReplyDelete
  2. வணக்கம் இருதயம்,

    வருக

    ReplyDelete