Saturday, February 25, 2012

நாம் யார் -16

பாகம்-15 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

மறைமுக போர்

ஆரியர் தென்னாடுவந்தபின், இந்திரன் என்னும் சொல்தமிழகத்திலும் வழக்கூன்றியது. "இந்திரனேசாலுங் கரி" என்று திருக்குறளிலும் , இந்திரவிழவூ ரெடுத்த காதை யென்று சிலப்பதிகாரத்திலும் இருக்கிறது. இந்திரவிழா பண்டைத் தமிழர் விழாவாயிருந்ததனாலேயே, காவிரிப் பூம்பட்டினத்தார் அந்நகர் மூழ்கும்வரை அதைக் கொண்டாடி வந்தனர்.

வடநாட்டரசர் தமிழர் போன்றேஇந்திரனைக் குலதெய்வமாகக் கொண்டிருந்ததனால்,ஆரியப் பூசாரியர் இந்திரனை மன்றாடி மந்திரங்கள் பாடினர்.

ஆரியக் கொலை வேள்வியையும்சிறுதெய்வ வணக் கத்தையும் அன்னிய மொழிமந்திரங்களையும் ஏற்காத சிவ நெறியாரான மன்னர், ஆரியப் பூசாரியரைப் போற்றவில்லை.அதனால், அப் பூசாரியர் தமக்கு வயப்பட்ட வரைக்கொண்டே வயப்படாதவரொடு போரிட்டு வென்றனர்.இத்தகைய வெற்றிகளே இருக்கு வேதத்திற்சொல்லப்பட்டுள்ளன.நேரடியாக மோதாமல் சூழ்ச்சியால் வென்றார்கள் ஆரிய பூசாரிகள்.

சோழ வழி வந்தவன் ராமன்

சோழன் வேந்தன் வடநாட்டில்தன் படிநிகராளியாக அமர்த்திய சோழக்குடியினன் வழிமரபே, சமற்கிருத இலக்கியத்திற் 'சூரியவமிசம்' என்று சொல்லப்படுவது. அவ் வழியில்வந்தவனே இராமன்.

கம்பராமாயணம், பாலகாண்டம், குலமுறைகிளத்து படலத்தில், இராமனின் முன்னோராகச்சொல்லப்பட்டவர் பதினால்வர். அவர் பெயர்கள்: மனு, பிருது (வேனன் மகன்), இட்சுவாகு, ககுத்தன்(ககுத்ஸன்), பாற்கடல் கடைந்து அமுதளித்தவன் (நிமி), மாந்தாதா, முசுகுந்தன், சிபி, சாகரர்,பகீரதன், நூறு குதிரைவேள்வி (அசுவமேதம்) செய்தவன்,இரகு, அசன், தசரதன் என்பன.

முசுகுந்தச் சோழன்

இந்திரனுக்கு உதவியதாக ஒரு வரலாறு

ஒருகாலத்தில் கலுழன் என்பவன் விண்ணுலகையடைந்து, அங்கிருந்த அமிழ்தத்தைக் கவர்ந்து சென்று விடுகிறான் . இந்திரன் தான் திரும்பி வருமளவும்விண்ணகரைக் காக்க முசுகுந்தச் சோழனை அமர்த்தி,அவனுக்குத் துணையாக ஒரு பூதத்தையும் நிறுத்திவிட்டு,அமிழ் தத்தை மீட்கச் சென்றுவிட்டான்.

இந்திரன் இல்லாத நேரத்தில் அவுணர் என்பவர்கள் திரண்டு வந்து முசுகுந்தனொடு போர் புரிந்து தோற்றுபோனார்கள், பின்னர் ஒரு வஞ்சனையால் அவனை வெல்லக் கருதி, அவர் மீண்டும் வந்து, அவன் அகக்கண்ணும் காரிருளில் மூழ்குமாறு ஒரு பேரிருள் அம்பைவிடுத்தனர். அவன் செய்வதறியாது மயங்கிநிற்கும்போது, அவன் துணைப்பூதம் ஒரு மந்திரத்தைஉதவ அதனால் தெளிந்து, அவுணரைக் கொன்றுகுவித்தான். மீண்டுவந்த இந்திரன் செய்தியறிந்து, முசுகுந்தனுக்கு நிலையாக வுதவுமாறு அப்பூதத்தையும் அவனுடன் அனுப்பினான்.

சீனா நாட்டுக்கு உதவியதாக ஒரு வரலாறு

சீன நாட்டிற்கு வானவர் நாடு என்றொருபெயருண்டு. அந் நாடு பூதக் கதைகட்குப் பெயர் போனதென்பது அலாடின் கதையால் அறியப்படும்.

முசுகுந்தன் சீனநாட்டரசன் ஒருவனொடுநட்புக் கொண் டிருந்து, அவன் நகருக்குச்சென்றிருக்கலாம். அன்று கலுழவேகன் என்பானொருவன் அமிர்தபதி என்பா ளொருத்தியைக் கவர்ந்து சென்றிருக்கலாம். சீனவரசன் முசுகுந்தனைத் தன்நகரைக் காக்குமாறு இருத்திவிட்டு அமிர்தபதியைமீட்கச் சென்றபின், ஊணர் (Huns- ஹூணர்) என்னும் நடு ஆசியவாணர் சீனத் தலைநகரைத்தாக்கி முசு குந்தனால் முறிடிக்கப்பட்டிருக்கலாம்.சீன அரசன் தனக்குத் துணையென்று கொண்டிருந்தபூதப்படிமையைப் புகாருக்கு அனுப்பியிருக்கலாம்.

இருவேறு வரலாறு வரலாறு கொண்டு இருக்கும் முசுகுந்தன் , மொத்தத்தில் யாராவது ஒருவருக்கு உதவி இருக்கான் என்பது உண்மை.

சிபி சோழன்

சிபி என்பவன், புறாவைத் துரத்திய பருந்திற்குத் தன் தசையை அறுத்துக் கொடுத்த செம்பி அல்லது செம்பியன் என்னும் சோழனே. அவன்பெயர் வடமொழியிற் சிபி எனத் திரிந்துள்ளது.இதையறியாத (அல்லது அறிந்தே ஏமாற்று கின்ற) வடமொழிப் புலவர், சோழர் சிபி என்னும் வடநாட்டுஆரிய வரசனின் வழியினராகக் கூறி வந்தனர்.

ஆரிய சூழ்ச்சி

வேதக்காலத்தில் வடஇந்தியாவில் நிகழ்ந்த இனப்போர்களெல்லாம், ஆரியச் சூழ்ச்சியால் பழங்குடிமக்களும் ஆரிய அல்லாத வட நாட்டவருக்குமான ஒரே இனத்திற்குள் நிகழ்ந்தவையே.

தென்னகத்தில் சிறப்பாக இருந்த பண்டைய தமிழர்களில் எதற்கு எடுத்தாலும் அஞ்சி நடுங்கும் மக்களும் , கல்வி அறிவு இல்லாத மக்களும் , எந்தவித உழைப்பும் இல்லாத உண்டு வாழ்ந்த சொம்பெறிகளும் சில எண்ணிக்கையில் இருந்து உள்ளனர் இவர்களை ஆரிய பூசாரிகள் தங்களுக்கு அடிமை படித்தி கொண்டனர் .ஏற்கனவே வட நாட்டில் இனப்போர் கள் நிகழ்த்தி அடிக்கி விட்ட ஆரியார்கள் , தென் நாட்டில் இந்த அடிமை தமிழர்களை வசபடித்தில் தமிழர்களின் மீது தாக்கும் சூழ்ச்சிகளை கையாண்டானர் .

                                                                                               தொடரும்...............................

No comments:

Post a Comment