Saturday, December 31, 2011

முல்லை பெரியாறு- பாகம் 19

பாகம்-18 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.


போராடுபவர்களை கவுரவிக்கும் ஒரு பதிவு.


போராளி வாழ்க்கை 

                
முல்லை பெரியாறு போராட்டத்தில் இன்றைய மக்களின் விழிப்புணர்வுக்கு பெரிதும் பாடுபட்டவர்கள் ,வரிசை படித்தினால் முதலில் வருபவர் கம்பம் . கே.எம்.அப்பாஸ் அவர்கள் ,அவரை பற்றிய சிறிய குறிப்புகளை தரவே இந்த பதிவு

முல்லை பெரியாறு போராட்டத்தில் வைகோ , பழ.நெடுமாறன் , இன்னும்  பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராடினாலும் , கே.எம்.அப்பாஸ் அவர்கள் ஆரம்பம் முதல் போராடிவரும் ஒரு போராளி என சொல்லாம் , இன்றும் இவர் முல்லை பெரியாறு பிரச்சனைக்கு எந்த அமைப்பு கூப்பிட்டாலும் ஒருகினைத்து போராடிவருகிறார்

கே.எம்.அப்பாஸ் அவர்கள் ,மதிமுக இயக்கம் நடத்திய  பல போராட்டங்களும் பங்கெடுத்தவர் ,எந்த கட்சியை யும் சாராத பொதுநலவாதி

77  வயதாகும் அப்பாஸ் அவர்கள் , கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக முல்லை பெரியாறு அணைக்காக போராடி வருகிறார்.

இவர்தான் முல்லை பெரியாறுக்கு நீதி கேட்டு ,முதலில் நீதிமன்றத்திற்கு போனார்.

முல்லை பெரியாறு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ்

பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக தனிமனிதராக நின்று குரல் கொடுத்து வருபவர் இவர்.

2006 ஆண்டுக்கு பிறகு பல அமைப்புகளோடு சேர்ந்தே போரட்ட ஆரமித்தார் , குறிப்பாக மதிமுக , பழ.நெடுமாறன் அவர்களின் அமைப்பு.

அரசியல் கட்சி , ஆளும் கட்சி , எதிர்கட்சி எதுவும் செய்யாத நிலையில் , முதலில் இவர் தலைமையிலான 48 விவசாயிகள்தான் பிரதமரைச் சந்தித்து முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து பேசினார்கள்.

முல்லை பெரியாறு அணை உடைவது போல கிராபிக்ஸ் காட்சிகள் அடங்கிய ஒரு சி.டி-யை கேரளா அரசு வெளியிட்டது, இதற்கு நீதிமன்ற மூலம் தடை வாங்கியவர் இவர்தான்

இப்போது டேம்-999  படத்திற்கும் தடை கேட்டு நீதிமன்ற சென்றவர் இவர்தான் .

 எழுதிய புத்தகங்கள்

முல்லை பெரியாறு அணை உருவான வரலாறு குறித்து இவர் பல அறிய தகவல்களோடு புத்தகம் எழுதியுள்ளார், இதில் அணைக்காக தமிழர்களும் ஆங்கிலேய பிரதிநிதிகளும் (பென்னி குக் போன்றவர்கள்) பட்ட சிரமங்கள் , உயிர் இழப்புகள் போற்றவற்றை அறிய தந்துள்ளார்
  
பெரியார் அணை - சில உண்மைகள் என்ற புத்தகத்தை 2000 ஆண்டு ஒரு புத்தகத்தையும்

முல்லைப்பெரியாறு சில உண்மைகள் - உச்சநீதிமன்றத் தீர்ப்பு தமிழாக்கம் என்ற புத்தகத்தை 2000 ஆண்டு ஒரு புத்தகத்தையும்

எழுதி வெளியிட்டுள்ளார் கே.எம்.அப்பாஸ் அவர்கள்

குடும்பத்திலும் முல்லை பெரியாறு

இவர் முல்லை பெரியாறு அணையை எவ்வளவு நேசிக்கிறார் , அதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என சுருக்கமாக சொல்லிவிடலாம் , ஆனால் தனது வருங்கால சந்ததிகளும் இதை பற்றி பேசும் வகையில் செயல்பட்டுள்ளார்.

முல்லை பெரியாறு முதல் ஆய்வில் ஈடுபட்ட பெறியாளர் பெயர் ரியாஸ்

கே.எம்.அப்பாஸ் அவர்களின் இரண்டாவது மகன் பெயர் ரியாஸ்

அணை கட்டுமான வேளைகளில் தன்னை ஈடுபடித்தி கொண்ட மற்றொரு ஆங்கிலேயர் பெயர் சுவிப்

கே.எம்.அப்பாஸ் அவர்களின் பேரன் பெயர் சுவிப்

முல்லை பெரியாறு பணியில் ஈடுபட்ட ஆங்கிலேய மாவட்ட ஆட்சி தலைவர் பெயர் பெரிஷ்

கே.எம்.அப்பாஸ் அவர்களின் தங்கை மகன் பெயர் பெரிஷ்.
  
இந்த மாதிரி தன் நலம் பார்க்க போராடியவர்களின் போராட்டம் வீண் போகலாம , போகாது , நாமும் இந்த போராட்டத்திற்கும் துணை இருப்போம் ,

கே,எம்.அப்பாஸ் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, இளையவர்களுக்கு தெரியாத பல விசயங்களை எடுத்து சொல்ல , அவருக்கும் நல்ல உடல் தந்து வாழவைக்க இறைவனை-இயற்கையை மக்களாட்சியும் அதன் வாசகர்களும் வேண்டி கொள்வோமாக 
                                                                                                             தொடரும்..........................                            

முல்லை பெரியாறு- பாகம் 18

பாகம்-17  படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.


தண்ணீருக்காக தருமயுத்தம் 
==================================
2009 ஆம் ஆண்டு

நவம்பர் 29 & 30 ,இரு தினங்கள் முல்லை பெரியாறு அணை குறித்து மதுரை மாவட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி பிரசாரம்

நவம்பர் 1&2 , இரு தினங்கள் முல்லை பெரியாறு அணை குறித்து சிவகங்கை மாவட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி பிரசாரம்

நவம்பர் 3, அன்று முல்லை பெரியாறு அணை குறித்து திண்டுக்கல் மாவட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி பிரசாரம்

நவம்பர் 4,5 &6 , மூன்று தினங்கள் முல்லை பெரியாறு அணை குறித்து தேனி மாவட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி பிரசாரம்

என தொடர் பிரச்சாரம் செய்கிறார் மதிமுக - வைகோ.

2009 ஆம் ஆண்டு

டிசம்பர் 18 முதல் 21 வரை  ,முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை மாவட்டத்தில் இருந்து  நடை பயணத்தைத் தொடங்கு, 600 மேற்பட்ட கிராமங்களில் கடந்து விழிப்புணர்வு பிரச்சாரம் ,கலகம் பிறந்தால் தான் நியாயம் கிடைக்கும்.

2009 ஆம் ஆண்டு

டிசம்பர் 22 , அன்று , கேரளாவிற்கு செல்லும் சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் குறித்து கம்பத்தில் விளக்க கூட்டம்.

இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 29 கூடலூரில் கேரளாவிற்கு செல்லும் சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் குறித்து கம்பத்தில் விளக்க கூட்டம். என பயணிக்கிறது மதிமுக -வைகோவின் பயணம்.

2010 ஆம் ஆண்டு

சனவரி 28, அன்று தேனியில் மக்களை எழுச்சி பெற செய்வோம் , கேரளா அரசி கண்டித்தும் ,ஒரு கண்டன ஆர்பாட்டத்தை நடத்து கிறார் மதிமுக -வைகோ

2010 ஆம் ஆண்டு

பிப்ரவரி 2,கேரள அரசு முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய அணை கட்ட நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த அணையின் பொறுப்பு எங்களிடமே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் முன்பு வாதிகிறார்.

என்ன ஒரு வாதம் என பாருங்கள் ,சிறு ஓட்டை கிடைத்தாலே போதும் வழக்கை திசை திருப்பி விடுவார்கள் எவ்வளவு பெரிய வாய்ப்பை தந்து விட்டது தமிழகம், எவனாவது அவன் பணத்தை நமக்கு செலவு செய்வன.

2010 ஆம் ஆண்டு

பிப்ரவரி 9,வழக்கில் தமிழக அரசின் போக்கை கண்டித்தும், மக்களை எழுச்சி பெற செய்வோம்,மதுரையில் ஒரு கண்டன ஆர்பாட்டத்தை நடத்து கிறார் மதிமுக -வைகோ.

2010 ஆம் ஆண்டு

பிப்ரவரி 18,முல்லை பெரியாறு அணை உறுதியாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு நடத்த முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி .எஸ்.ஆனந்த் தலைமையில் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதில் மத்திய அரசை சேர்ந்த 2 நிபுணர்களும், தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த தலா ஒரு நிபுணர்களும் இந்த குழுவில் இடம் பெறுவர்.

எந்தனை ஏற்கனவே இரு முறை ஆய்வு செய்தும் ,மறுபடியும் ஓரு ஆய்வு குழு ,

2010 ஆம் ஆண்டு

மார்ச் 22,ஊட்டியில் , கேரளாவிற்கு செல்லும் சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் குறித்து கம்பத்தில் விளக்க கூட்டம். போடுகிறார் வைகோ.

2010 ஆம் ஆண்டு

ஏப்ரல் 20,முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழக வாழ் வாதாரங்களை காக்கவே, கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவும், ஓரவஞ்சகமாக செயல்படும் மத்திய அரசாங்கத்தை கண்டிக்கவும், மே 28ம் தேதி நடத்த இருக்கும் கேரளம் செல்லும் அனைத்து சாலைகள் முற்றுகைப் போராட்டத்துக்கு தமிழக மக்கள் பேராதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொள் வைக்கிறார்  வைகோ.

நாம் அப்போது இதெல்லாம் அரசியல் என ஏளனம் பேசினோம் , இப்போது தெரிகிறதா அதன் அவசியம் என்ன என்று. உண்மையில் பிரச்சனையின் ஆழத்தை மக்களுக்கு செல்வதே அரசியல் தான்.

2010 ஆம் ஆண்டு

ஏப்ரல் 24,அன்று , கேரளாவிற்கு செல்லும் சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் குறித்து கரூரில் விளக்க கூட்டம்.
  
மே 3,அன்று , கேரளாவிற்கு செல்லும் சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் குறித்து மதுரையில் விளக்க கூட்டம்.
  
மே 4,அன்று , கேரளாவிற்கு செல்லும் சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் குறித்து பரமகுடி  விளக்க கூட்டம்.

மே 5,அன்று , கேரளாவிற்கு செல்லும் சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் குறித்து திண்டுக்கல் விளக்க கூட்டம்.

என பல இடங்களில் மக்களை தயார் செய்கிறார் வைகோ

2010 ஆம் ஆண்டு

மே 28, தண்ணீருக்காக தருமயுத்தம் நடத்தியே தீருவேன் என முடிவு செய்து ,பல இயக்கங்களை சேர்த்து கொண்டு மதிமுக ,கேரளா செல்லும் அனைத்து சாலைகளையும் மறித்து போராட்டம் செய்தார் வைகோ ,

இந்த போராட்டத்தில் ஒரு சிறிய பிரச்சனையும் நடக்காமல் நடத்தி காட்டினார், இதை திமுக கட்சி பத்திரிக்கை யான முரசொலி யில் பாராட்டி செய்தி வெளி இட்டார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.



                                                தொடரும்.............................

Thursday, December 29, 2011

முல்லை பெரியாறு- பாகம் 17

பாகம்-16  படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம் 


போராட்ட காலம் தொடர்ச்சி 
==================================

2009 ஆம் ஆண்டு

அக்டோபர் 24,கேரளாவிற்கு புதிய அணைக்கு ஆய்வு செய்ய அனுமதி தந்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்குக் கண்டனம் தெரிவித்து நவம்பர் 1ம் தேதி மதுரையில் திமுக சார்பில் மாபெரும் கூட்டம் நடைபெறும் எனவும் திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.இவர்களும் மத்திய அமைச்சரவையில் தான் இருந்தார்கள்

2009 ஆம் ஆண்டு

அக்டோபர் 24, கேரளத்தில் ஆட்சிக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அச்சுதானந்தன் இந்திய பிரமதரை 5 முறை சந்தித்து அணை உடைந்துவிடும் என்று இதனால் லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பச்சைப் பொய்யை கூறினார். அதற்காக அவர் கொடுத்த ஆதாரங்கள் எதுவும் இல்லை. என வைகோ குற்றம் சாட்டுகிறார்,

2009 ஆம் ஆண்டு
அக்டோபர் 26,பெரியாறு அணை விஷயத்தில் கருணாநிதி மத்திய அமைச்சரை எதிர்த்து மதுரையில் தி.மு.. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

ஆனால் 2 தினங்களில் அந்தர்பல்டி அடித்து தற்போது முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெறும் என்று அறிவித்தார்.

2009 ஆம் ஆண்டு

அக்டோபர் 27,முல்லைப் பெரியாறு பிரச்னை குறித்து மத்தியில் உள்ள திமுக அமைச்சர்கள் போராடவில்லை. மதுரையில் வந்து கூட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பது வேடிக்கை.

கேரளாவில் பிரபுக்கள் ஆட்சி நடக்கவில்லை. கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது. இந்தியாவுக்கே வழிகாட்டியாக நீங்கள் இருக்க வேண்டும். தண்ணீருக்காகவும், நிலத்துக்காகவும் நில பிரபுக்கள்தான் போராடுவர். நீங்கள் அப்படி இருக்க வேண்டாம் என்றார்.தா.பாண்டியன்

2009 ஆம் ஆண்டு

நவம்பர் 5,கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து இடையூறு செய்து வருவதால் அணையின் பாதுகாப்புக்கு சிஐஎஸ்எப் படையினரை நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு  கருணாநிதி கோரிக்கை விடுத்துதார்.

2009 ஆம் ஆண்டு

நவம்பர் 8,அன்று ,முல்லை பெரியாறு விவகாரத்தில் மத்திய , கேரளா , தமிழக அரசுகளின் நடவடிக்கைகளை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாகவும் , கேரளா அரசின் போக்கை கண்டித்து மதிமுக பொது செயலாளர் வைகோ , தேனியில் கண்டன பொது கூட்டம் ஓன்று நடத்து கிறார்.

2009 ஆம் ஆண்டு

நவம்பர் 14,அன்று ,முல்லை பெரியாறு அணை காக்க  மதிமுக பொது செயலாளர் வைகோ , மதுரையில் உண்ணாவிரதம்  நடத்து கிறார்.

2009 ஆம் ஆண்டு

நவம்பர் 19,அணையின் 9, 10, 17, 18வது பிளாக்குகளில் நீர்க்கசிவு இருக்கிறதாம். சுர்க்கி எனப்படும் பூச்சு இந்த இடங்களில் பெயர்ந்திருப்பதாக கேரள குழு கூறுகிறது.

இதை வைத்து அணையில் தற்போது 135.1 அடி நீர் இருப்பு இருந்தது .இந்த நிலையில் நீர்க்கசிவு ஏற்பட்டு விட்டதாக கூறி அணையின் நீர்த்தேக்க அளவை 136 அடியிலிருந்து 130 அடியாகக் குறைக்க கேரளா சதி செய்ய ஆரமித்த்து

2009 ஆம் ஆண்டு

நவம்பர் 20,இதையடுத்து உண்மை நிலை என்ன என்பதைக் கண்டறிய பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதி, நீர்க்கசிவு அளவிடும் காலரி பகுதி ஆகியவற்றை தமிழக குழு பார்வையிட்டது.

குறிப்பாக நீர்க்கசிவு அதிகம் இருப்பதாக கேரள குழு கூறிய மெயின் அணையில் உள்ள 17, 18 பிளாக்குகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பின்னர் பொதுப்பணித்துறை பொறியாளர் குழுத் தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், கேரள நிபுணர் குழு கூறுவது போல் அணைப்பகுதியில் எங்கும் நீர்க்கசிவு இல்லை. வழக்கமாக கசிவு நீர் எந்த அளவு வெளியேற வேண்டுமோ அதைவிட குறைவாகத்தான் உள்ளது.

2009 ஆம் ஆண்டு

நவம்பர் 21,கேரளா சட்ட திருத்தத்தை  செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் தமிழக அரசு வழக்கு , உச்சநீதிமன்றத்தில்  விசாரணையில் இருந்து வந்த நிலையில், திடீரென இதை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்தது. இதை ஏற்ற உச்சநீதிமன்றம் அரசியல் சாசன பெஞ்சுக்கு இந்த வழக்கை அனுப்ப தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்தது.

இதற்கு எந்த எதிர்ப்பையும் தமிழக அரசு காட்டவில்லை, இதுவரை  33 முறை திமுக அரசு வாய்தா வாங்கியது , உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு காட்டிய மெத்தனத்தால்தான் முல்லைப்பெரியாறு அணை வழக்கு 5 நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.

அரசியல் சாசன அமர்வு

இந்த நிலையில் அரசியல் சாசன பெஞ்ச்சை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தார் , நீதிபதிகள் டி.கே.ஜெயின், சுதர்சன் ரெட்டி, முகுந்தகம் சர்மா, ஆர்.எம்.லோதா, தீபக் வர்மா ஆகியோர் இந்த பெஞ்சில் இடம் பெறுவார்கள்.  இந்த பெஞ்ச் தனது முதல் விசாரணையை நவம்பர் 23ம் தேதியன்று நடத்தவும் அன்றைய தினம் விசாரணை நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யப்படும்.

2009 ஆம் ஆண்டு

 நவம்பர் 22, ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்பு அமர்வு வழக்கு ஒருகினைந்து பணிகளை செய்ய ,அப்பாதைய தமிழக  அமைச்சர் .பொன்முடி மேற்கொள்வார் என்று தமிழக அரசு தெரிவித்து.

2009 ஆம் ஆண்டு

நவம்பர் 23,அன்று முல்லை பெரியாறு வழக்குஅரசியல் சாசன அமர்வு முன்பாக வந்தது. ஆனால், வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்துவைத்து உத்தரவிட்டது.

                                               தொடரும் .............................