பாகம்-13 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்,
நீருக்காக நீதி மன்றங்கள் நோக்கி பயணம்
நீருக்காக நீதி மன்றங்கள் நோக்கி பயணம்
==============================================
1998ஆம் ஆண்டு
மகபூப் பாட்ஷா, கே.எம்.அப்பாஸ், ரத்தினசாமி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தொடுத்தார்கள். அதில் வைக்கப்பட்ட இரு முக்கிய கோரிக்கைகளில் ஒன்று அணையின் பாதுகாப்பு மத்திய தொழிற் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்க வேண்டும்.
இன்னொன்று அணையின் நீர்மட்டத்தை 145 அடியாக உயர்த்த வேண்டும் என்பதுதான். சுப்ரீம் கோர்ட் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, “இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் இப்பிரச்சினை தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து என்பதால் மத்திய அரசு உடனே தலையிட்டு இப்பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.
எந்த முடிவு எடுக்க படவில்லை தமிழக அரசும் , கேரளா அரசும் இந்த வழக்கில் தங்களை இணைத்து கொண்டது ,
2000ஆம் ஆண்டு
வழக்கும் மீண்டும் உச்சநீதி மன்றத்திற்கு வந்தபோது, பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்காத்தால் , ஒரு வல்லுனர் குழுவை அமைக்கிறது நீதிமன்றம் , இந்த வல்லுனர் குழு ,அணை , அணை பகுதிகளை ஆய்வு செய்து நீதி மன்றத்திற்கு அறிக்கை தரவேண்டும் என உத்தரவு போட்டது உச்ச நீதிமன்றம்
2001ஆம் ஆண்டு
பிப்ரவரி 10 தேதி உச்சநீதி மன்றம் அணையே ஆய்வு செய்ய ஏழு பேர் கொண்ட குழு அமைத்தது , மிட்டல் தலைவராகவும் , மத்திய தலைமைப் பொறியாளர் இரண்டு பேர் . மத்தியப் பிரதேச அணைப் பாதுகாப்புக் குழுத் தலைவர் , உ.பி.தலைமைப் பெரியாளர் , தமிழக அரசின் சார்பில் ஒரு பிரதிநிதி , கேரளா சார்பில் ஒரு பிரதிநிதி என ஏழு பேர் குழு அமைக்கப்பட்டது
2002ஆம் ஆண்டு
ஏழு பேர் குழு அணை பகுதியை ஆய்வு செய்து , பல கட்ட ஆய்வுகளை செய்து , மண் மாதிரிகளை எடுத்தும் , அணையின் கட்டுமான பொருள்களின் மாதிரிகளை எடுத்தும் டெல்லி உள்ள மத்திய மண் வள பரிசோதனை கூடம் போன்ற இன்னும் பல பரிசோதனை கூடங்களில் ஒரு ஆண்டு காலம் ,பல கட்ட ஆய்வுக்கு பின், ஏழு பேர் குழு அணை வலுவாக இருக்கிறது , அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என அறிக்கை உச்ச நீதி மன்றத்தில் சமர்பித்த்து.
இந்த ஆய்வு பணிகள் , அறிக்கைகளை சரிபார்த்த ஏற்றுக் கொண்டு,மத்திய அரசும் அணையின் நீர்மட்டத்தை
உயர்த்தலாம் என அறிக்கை உச்ச நீதி மன்றத்தில் சமர்பித்த்து.
2006ஆம் ஆண்டு
தொடர்ந்து வாத , பிரதிவாதங்கள் நடந்தது , இவ்வாறு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் 27/ 02 / 2006 அன்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு தருகிறது
உச்ச நீதி
மன்ற தீர்ப்பு விவரம்
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்போது உள்ள 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்தி கொள்ளலாம்
அணையை
வலுபடுத்துவதற்கான எஞ்சிய பணிகளை தமிழ்நாடு மேற்கொள்ளலாம்
மத்திய நீர் ஆணையம் திருப்தியடையும் வகையில் , அணையை பலபடுத்தப் படுவதற்கான எஞ்சிய பணிகள் முடிந்த பிறகு ,அணையின் நீர் மட்டத்தை 152 அடிக்கு உயர்த்தலாம்
என நல்ல ஒரு தீர்ப்பை உச்சநீதி மன்றம் தந்தது ,மேலும் கேரளாவிற்கு சில விசயங்களை சுட்டி காட்டியது உச்ச நீதி மன்றம்
கேரளாவிற்கு விழுந்த சவுக்கடி
தற்போது உள்ள 136 அடியிலிருந்து 142 அடி வரை அணையின் நீர் மட்டம் உயர்த்தும் போது, அணையின் பாதுகாப்பை பொறுத்த வரையில் , நில நடுக்கத்தினை எதிர்க்கும் சக்தி உட்பட அனைத்து
பாதுகாப்பு கோணங்களையும் பல்வேறு அறிக்கைகள், ஆழமாக ஆராய்ந்துள்ளன. இதன்படி , முல்லை பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்ற கவலை ஐயப்பாடு ஆகிய அனைத்தும் ஆதரமற்றவை என உச்ச நீதி மன்ற சுட்டி காட்டி உள்ளது
மேலும் , அணை பாதுகாப்பாக உள்ளது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில் , இவைகள் எல்லாம் சர்ச்சைக்குரிய விஷயங்கள் என்ற சாக்கு போக்கை வைத்து , அதற்கு தடை ஏற்படுத்தும் விதமான அணுகுமுறையை கேரளா அரசு கடைபிடிப்பது அனுமதிக்க முடியாது, அணையின் நீர் மட்டம் 142 அடி உயர்த்தும் போது, அணையின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எந்த அறிக்கையும் சுட்டி காட்டவில்லை என உச்ச நீதி மன்ற தீர்ப்பில் உள்ளது
கேரளா சவுக்கடி வாங்கியும் திருந்தவில்லை , உச்ச நீதி மன்ற தீர்ப்பை என்ன செய்தது, அதற்கும் முட்டுக்கட்டை போடும் பணிகளை செய்ய ஆரமித்தது
தொடரும்............................
பின் குறிப்பு
இனி வருவது மக்கள் மன்ற போராட்டம் ,அரசியல் கட்சிகளின் போராட்டம் , மக்களாட்சிக்கு எந்த அரசியல் கட்சி சார்பு கிடையாது , இங்கே காமராசரையும் சுட்டி காட்டினோம் , எம்.ஜி.ஆரையும், கருணாநிதியையும் சுட்டி கட்டினோம் , இனி மேலும் சில கட்சிகளை சுட்டி காட்டுவோம்.
No comments:
Post a Comment