பாகம் ஒன்பது படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்,
கேரளா ஆரம்பித்த பிரச்சனைகள்
=============================
கேரளா ஆரம்பித்த பிரச்சனைகள்
=============================
1924 ஆம் ஆண்டு
மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது ,அப்போது அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை , முதல் முறையாக அணை முழுமையாக நிரப்பியது
1926 ஆம் ஆண்டு
மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அணையின் நீர்மட்டத்தை விட , 7 அடி அதிகமாக வெள்ளம் வந்த்து .அணை உடைந்து இருக்கும் என்று ஆங்கிலேயர்கள் கூட அச்சம் கொண்டனர் ஆனால், அணை கம்பீரமாக இருந்த்து . அன்றேக்கே அப்படி இருந்த்து என்றால் , அணை வலுப்படுத்த பட்ட பின் எப்படி இருக்கும்
1943 ஆம் ஆண்டு
17 வருடங்கள் கழித்து மீண்டும் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது ,அப்போது அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை, இப்போதும் அணை முழுமையாக நிரப்பியது
1955 ஆம் ஆண்டு
சுகந்திர இந்தியா ஆன பின் ,பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் வகுக்கப் பெற்றது.
1956 ஆம் ஆண்டு
மொழி வாரி மாநிலங்கள் உருவான போது அணை இருக்கும் பகுதிகளான பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்கள் எங்களுக்கே வேண்டும் என்று கேரளா அடம்பிடித்தது. இத்தனைக்கும் அங்கு அப்போது 90 சதவீதம் பேர் தமிழர்கள் வாழ்ந்தார்கள். மொழி வாரி மாநிலங்கள் அடிப்படையில் பார்த்தால் கூட இப்பகுதிகள் தமிழ்நாட்டிற்கே வந்திருக்க வேண்டும்.
ஆனால் அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு – சென்னை மாகாண முதல்வராக இருந்த காமராஜரிடம், “இந்த இரு தாலுகாக்கள் கேரளாவிடம் இல்லை என்றால் அந்த மாநிலம் தலையில்லாத உடலாகவே இருக்கும்” என்று சொல்லி, இவ்விரு தாலுகாக்களையும் கேரளாவிடம் ஒப்படைத்தார்
தேவிகுளம் மற்றும் பீர்மேடு தாலுகாக்களைத் தமிழகத்துடன் இணைக்க மாநிலங்கள் மறுசீரமைப்பு குழு பரிந்துரை செய்தும் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த காமராஜர், "கேரளாவும் இந்தியாவின் ஒரு பகுதி தானே, எதில் இருந்தால் என்ன" என்று அவற்றை தமிழகத்துடன் இணைக்கும் தீர்மானத்தைச் சட்டசபையில் தாக்கல் செய்ய மறுத்து விட்டது
1961 ஆம் ஆண்டு
மீண்டும் 18 ஆண்டுகள் கழித்து ,மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது ,அப்போது அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை,இப்போதும் அணை முழுமையாக நிரப்பியது
பின் பல மாதங்கள் அணையின் நீர்மட்டம் 152.35 அடியாக இருந்த போதும் பாதிப்பு ஏற்படவில்லை
1962ஆம் ஆண்டு
மலையாள பத்திரிகைகள் அணையின் மீது சந்தேக பார்வையோடு செய்தி எழுத ஆரமித்தது , இதை கேரளா மக்கள் ரசிக்கவில்லை, இந்த பொய் செய்தி எடுபடவில்லை
1970ஆம் ஆண்டு
ஏக்கருக்கு 5 ரூபாய் என்று தமிழகம் கொடுத்து வந்தது.அப்போதைய முதலமைச்சராக இருந்த திமுக சேர்ந்த கருணாநிதியுடன் , கேரளாவில் முதலமைச்சராக இருந்த இந்திய பொதுவுடமைக் கட்சி சேர்ந்த செ. அச்சுத மேனன் , பழைய ஒப்பந்தத்தைத் திருத்தி, ஆண்டிற்கு 5 ரூபாய் என்றிருந்த குத்தகைத்தொகையை 30 என மாற்றி, அணையிலும் அதைச் சார்ந்த நீர்ப்பிடிப்பு மற்றும் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளிலும் மீன் பிடிக்கும் உரிமையும் தமிழகத்திடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டது. இவ்வொப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது
1955 ஆம் ஆண்டு வகுக்க பட்ட திட்டத்தின் படி முல்லை பெரியாற்று நீரில் மின்சாரம் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோது
1975 ஆம் ஆண்டு
இடுக்கி அணைய 800 மெகாவாட் மின் உற்பதிக்காக கட்டி எழுப்பியது கேரள அரசு
கேரளம் நினைத்த அளவுக்கான மின் உற்பத்தியை அதன்மூலம் பெறமுடியவில்லை.
இந்நிலையில்தான் கேரள அரசின் மின் துறை பொறியாளர்கள் முல்லை பெரியார் அணையின் கொள்ளளவை 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்தால் இடுக்கி பெறும் நீர் வரத்து அதிகரிக்கும் என்று அம்மாநில அரசுக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்
1979ஆம் ஆண்டு
மீண்டும் 23.10.1979 மலையாள மனோரமா ஏடு, அணைக்கு ஆபத்து என்று செய்தியை பொய் செய்தியை பரப்ப ஆரமித்தது,இன்னும் சில பத்திரிக்கைகள் ஒரு படி மேலே , யானை போகும் அளவிற்கு ஓட்டை அணையில் இருக்குன்னு பொய் எழுதியது
இதை காரணமாக வைத்து , “முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது.இது உடைந்தால் கேரள மக்களுக்கு ஆபத்து” என்ற கோரிக்கையை முன் வைத்து, முதல் போராட்டத்தை துவக்கியவர் அன்று கேரளாவில் எம்.எல்.ஏ.வாக இருந்த கே.எம்.தோமஸ்
இதில் இருந்தே பிரச்னைகள் ஆரம்பம் ஆனது , எதனால் பிரச்னை வந்த்து என உங்களுக்கு புரிகிறதா , புதிதாக வந்த இடுக்கி அணையால் தான்
தொடரும்............................
No comments:
Post a Comment