Thursday, December 8, 2011

முல்லை பெரியாறு- பாகம் 3

முல்லை பெரியாறு-கேரளா பக்கம் 
==============================
பாகம் இரண்டு படிக்காதவர்கள் படிக்க இங்கே அழுத்தவும்  , தொடச்சியை பார்ப்போம் 


இடுக்கி நீர் தேக்கம் மற்ற இரண்டு அணைகளின் நீர் எங்கு செல்கிறது என பார்ப்போம் 


இடுக்கி வளைவு அணை ,செறுதோணி அணை



மேலே உள்ள படம் இடுக்கி வளைவு அணையும் செறுதோணி அணையும் 


வளைவு அணையிலிருந்து எந்த நீர் வெளியேற்றமும் கிடையாது 


செறுதோணி அணையில் பிரோத்தியோக நீர் வெளியேற்றும் மதகுகள் கிடையாது 


மாறாக அணை நிறையும் பொது அதிகபடியான நீர் வெளியேற அமைப்புள்ளது




மேலே உள்ள படம் செறுதோணி  முன் தோற்றம் , இந்த இரு அணைகளும் ஒரு தடுப்பு சுவர் போல தான் பயன் படுகிறது , முக்கிய பயன்பாட்டில்  உள்ள அணை குளமாவு அணை , அதன் விவரம் பக்கம் இரண்டில் இருக்கிறது 


ஒரு வேலை அதிகபடிய தண்ணீர் வெளியேறும் பொது இந்த செறுதோணி அணையில் இருந்து தண்ணீரின் போக்கை பார்ப்போம் 



மேலே உள்ள படம் லோவேர் பெரியார் - பணம்குட்டி நீர்த்தேக்கம் , இந்த இடத்தில் செறுதோணி  அணையில் இருந்து வரும் தண்ணீரும் , மற்றொரு அனையான கல்லற்குட்டி அணையிலிருந்து வரும் தண்ணீரும் ஓன்று சேர்ந்து மீண்டும் பெரியாறு ஆக  புறப்படுகிறது , 


செறுதோணி  அணையில் இருந்து பணம்குட்டி வரையுள்ள  மலை இடுக்குகளில் வளைந்து நெளிந்து தண்ணீர் கடந்து வரும் தூரம் சுமார் - 19 ,662  மீட்டர் 


நம்ம ஊர்லா எங்கு பாத்தாலும் பெரியார் (ஈ வே ரா ) இருப்பது போல அங்கே எங்கு பெரியாறு இருக்கிறது 



மேலே உள்ள படம் குட்டம்புழ என்ற இடம் , இங்கே பணம்குட்டில் இருந்து வரும் பெரியாறு நீரும் , இடமலையர் அணையின் இருந்து வரும் நீரும் குட்டம்புழ ஆறும் சங்கமிக்கும் இடம் , மீண்டும் இந்த இடத்திலிருந்து மலை இடுக்குகளின் நடுவே வளைந்து நெளிந்து  பெரியாறு மேற்கு நோக்கி பயணிக்கிறது 


பணம்குட்டி நீர்த்தேக்கம் முதல் குட்டம்புழ  வரை யுள்ள தூரம்  சுமார் - 39 ,689  மீட்டர் 


இடுக்கி அணையிலிருந்து குட்டம்புழ  வரை யுள்ள தூரம்  சுமார் - 59 ,360  மீட்டர் 





மேலே உள்ள படம் தட்டேக்காடு நீர்தேக்கமும் பூததன்கேட்டு அணையும் 


இதுவரை மலை இடுக்குகளில் பயணித்த பெரியாறு இந்த பள்ளத்தாக்கை அடைகிறது 


இந்த நீர்தேக்கத்தின் பரப்பு சுமார் - 1235  ஏக்கர் 


கடல் மட்டத்திலிருந்து சுமார் 166  அடி உயரத்தில் உள்ளது 


குட்டம்புழ விலிருந்து தட்டேக்காடு வரி உள்ள தூரம் சுமார் 9780  மீட்டர் 


இந்த நீர் தேக்கத்திலிருந்து வெளியேறும் சமவெளி பகுதிகளில் பல ஊர்களின் நடுவே வளைந்து நெளிந்து பல கிளைநதிகளையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு 


மலையதூர் ,சேரநல்லூர் காலடி வல்லோம் , திருவிரனிக்குளம் ,குட்டமச்செரி ,ஆலுவ, சென்கமாநாடு , கொட்டபுரம் ,மஞ்சலி ,வடகும்புரம் போற்ற பகுதிகளை சுமார் 74 ,420 மீட்டர் தூரம்  கடந்து மலியங்கர என்ற இடத்தில் பெரியாறு அரபிக்கடலில் சேர்க்கிறது,  


மேலே சொன்ன ஊர்களில் போதுமான அளவு தண்ணீர்  குடிநீருக்கு  கிடைக்கிறது மேலும்   எந்த விவசாய நிலமும் இல்லை , மலையாளிக்கு நமக்கு   தண்ணீர் தர  மனமுமில்லை  


இதுவரை கேரளாவின்  பக்கம் பார்த்தோம் , இந்த தகவல்கள் அடிப்பிடையில் எந்த விதத்திலும் பெரியாறு தண்ணீர் அவர்களுக்கு பயன்படவில்லை என்பதை நீங்களே சிந்தித்து பார்க்கவேண்டும் ,
அடுத்து தமிழக பக்கம் வருவோம் 
                                                                                                               தொடரும்.........................

No comments:

Post a Comment