Sunday, December 11, 2011

முல்லை பெரியாறு- பாகம் 5

முல்லை பெரியாறு-தமிழகம் பக்கம் 
===============================


பாகம் நான்கு படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம் 


முல்லையாறு லோவேர் கேம்ப் பகுதியில் சமவெளியில் நீர் வந்து சேரும் வரை பார்த்தோம் ,


இதுவரை மலைகளின் நடுவே மலை உட்சியில் பாய்ந்துவரும் தூரம் மொத்தமே சுமார்  7095  மீட்டர் 


இதே கேரளாவில் சமவெளியை அடைய  குறைந்த பட்ச மலைகளின் நடுவே பெரியாறு கடக்கவேண்டிய தூரம் 49 ,605 மீட்டர் 


யாருக்கு தண்ணீரின் பயன்பாடு அதிகம்  என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் 


மேலே உள்ள படம் , தேனி  நகரத்திற்கு அருகே , முல்லை பெரியாரும் , வைகை ஆறும் இணையும் இடம் 


கேரளாவில்  பல ஆறுகளை இணைந்து கொண்டு ஓடிய பெரியாறு இங்கே பிரிந்து பிரிந்து  பயணிக்க  ஆரமிக்கிறது , இங்கு தண்ணீரின் தேவை இருப்பதால் தனித்தனியாக பிரிகிறது , அங்கே தண்ணீரின் தேவை குறைவு என்பதால் ஓன்று சேர்ந்து கடலில் வீணாக கலக்கிறது 


லோவேர் கேம்ப் பகுதியில் சமவெளியிலிருந்து புறப்படும் பெரியாறு கூடலூர் ,குழப்ப கவுண்டன்  பட்டி , கருணா முதேவன் பட்டி , சுருளிபட்டி , நாராயனதேவன்பட்டி ,கம்பம் ,கமய கவுண்டன் பட்டி , அனைபட்டி , C .புதுபட்டி ,ரோயப்பன்பட்டி ,ஹனுமந்தன்பட்டி ,அனைமலையன்பட்டி,கோகிலாபுரம் ,உத்தமபாளையம் ,அம்மாபட்டி ,எல்லப்பட்டி ,சின்னமனூர் , மார்கயன்கோட்டை, குச்சனூர் ,சீலயம்பட்டி , கோட்டூர் ,பலர்பட்டி , உப்பகோட்டை,உப்பர்பட்டி ,வீரபாண்டி ,போதேந்திரபுரம் , வயேல்பட்டி ,போன்ற ஊர்களையும் , மேலும் சிறிய கிராமங்களையும் கடந்து , தேனி நகருக்கு கிழக்கே அரண்மனை புதூர் என்ற ஊரின் அருகே வைகை ஆற்றோடு இணைந்து , இனி வைகை ஆறாக பயணிக்கிறது 


லோவேர் கேம்ப் பகுதியில் இருந்து மேலே சொன்ன ஊர்களின் வழிய பெரியாறு வளைந்து நெளிந்து  கடந்துவரும் தூரம் சுமார் 68 ,328  மீட்டர் 


மேலே உள்ள படம் வைகை அணையின் தோற்றம் , பல சிறிய ஆறுகளையும் சேர்த்து கொண்டு , முல்லைஆறுடன் தேனியில் இருந்து பயணிக்கும் வைகை இந்த அணைக்கட்டை அடைகிறது 


தேனி இருந்து முல்லையும் வைகையும் இணைந்து இந்த அணைக்கட்டு வரை பயணிக்கும் தூரம் சுமார் 12 ,621 மீட்டர் , வைகை அணை சமவெளி பகுதியில் கட்டப்பட்ட ஒரு அணை 


இங்கு  இருந்து புறப்படும் வைகை , முதலகம் பட்டி ,  குள்ளபுரம் ,அயன் கோவில்பட்டி,  குள்ளி செட்டி பட்டி , சித்தர்கள் நத்தம் , மல்லயம்  பட்டி ,அணை பட்டி , விளாம்பட்டி ,குருவித்துறை ,மேலானசிக்குலம் , கருப்பட்டி ,மன்னடிமங்கலம், இரும்படி , சோழவந்தான் , தச்சம்பது , திருவேடகம் , தேனூர் ,கொடிமங்கலம் , சமயநல்லூர் , கீலமதூர் ,துவரிமான் , பறவை , கோச்சடை ,போன்ற ஊர்களையும் மேலும் சிறிய ஊர்களையும் கடந்து மதுரை மாநகரை அடைகிறது வைகை , பல தடுப்பணைகளையும் , கடந்து வருகிறது 


வைகை அணைக்கட்டில் இருந்து மதுரை வரை பயணிக்கும் ஆற்றின் நீளம் சுமார் 76 ,885  மீட்டர் 


மதுரை மாநகரின் நடுவே பாய்ந்து மீண்டும் கிழக்கு நோக்கி பயணிக்கும் வைகை , முல்லை ஆறுகளின் கூட்டு ஓட்டம் 


வண்டியூர் , புளியங்குளம் , கீலடி , சிலைமான் , பள்ளுச்சந்தி புதூர் ,மணலூர் ,அங்கடிமங்கலம்,பழையூர் ,திருப்புவனம் , மடப்புரம் ,கனூர் ,மழவரயனேந்தால் ,சமபரயனேந்தால், பதினேட்டம்கோட்டை ,அன்னிஎந்தால் ,ராஜகம்பீரம் ,வேலூர் ,மான மதுரை ,பர்டிபமியூர் ,சுடியூர் ,தெளிச்சட்டனல்லூர் ,பரமக்குடி ,தினைகுளம்,வல்லம் ,சின்ன அக்கிரமேசி , வலசை ,கொல்லனுர் ,மேன்னந்தி ,சேவூர் அடையும் வைகை முல்லை ஆறுகளின் கூட்டு ஓட்டம் , இந்த இடத்திலிருந்து பல பிரிந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பல ஊர்களை கடந்து இரு பெரும் பகுதியாக வங்க கடலில் கலக்கிறது 


மேலே உள்ள படம் வைகை , முல்லை ஆறுகளின் கூட்டு ஓட்டம் முடியும் இடம் 


ராமநாத மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று இங்கே இரு பெரும் பிரிவுகளாக கடலில் கலக்கிறது , ஓன்று சேதுக்கரை என்ற இடத்திலும் மற்றொன்று ஆற்றங்கரை என்ற இடத்திலும் கடலில் கலக்கிறது , இது மழைகாலங்களை தவிர வேறு இப்போது இதுவரை தண்ணீர் வரவதில்லை 


மதுரை மாநகரில் இருந்து வங்க கடல் வாராய் கடந்துவரும் தூரம் சுமார் 1 ,41 ,741  மீட்டர் 


தமிழக பக்கம் வரும் முல்லையாறு மலை பகுதிகளில் சுமார் 7095  மீட்டர் 


சமவெளி பகுதிகளில் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் பயணிக்கும் தூரம் அதாவது பயன் படும் தூரம் சுமார்  2 ,99 ,548  மீட்டர்   (300 கிலோ மீட்டர் ) 


மேலே சொன்ன அனைத்து ஊர்களும் விவசாயத்தை நம்பி இருக்கும் ஊர்கள் 


பின் குறிப்பு :- நதிகளின் பயணத்தை எழுதுவது உற்சாகமாக இருக்கிறது, மேலும் பல நதிகளை பற்றி எழுதுவோம் 


                                                                                                                     தொடரும்..................

No comments:

Post a Comment