அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
ஆரம்பத்தில் சினிமா வை பின்னணியில் இருந்து எம் ,ஜி.ராமசந்திரன் , அண்ணாவின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் திமுகவில் இணைந்த எம்.ஜி.ஆர். அண்ணாவின் மறைவிற்கு பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரால் அண்ணாவின் பெயரில் 1972ல் தொடங்கப்பட்ட இயக்கமே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1973ல் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்,
1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது , மிக பெரிய வெற்றி பெற்ற இந்த கூட்டணி
10 ஜூன் 1977-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், இந்த கூட்டணி பிரிந்து , அதிமுக , இந்திய பொதுவுடமைக் கட்சி ,அனைத்திந்திய பார்வார்டு பிளாக், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்ஆகிய கட்சிகளுடன் புதிய கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுப் பெரும்பாலான இடங்களில் வெற்றி கண்டது, முதல் முறையாக எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார்
1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக , ஜனதா கட்சி (தேசாய் ), காங்கிரஸ் (அர்ஸ்) போன்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டிபோட்டது , இந்த தேர்தலில் அதிமுகவிற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது ,வெறும் இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றது அதிமுக
1980 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,காந்தி காமராஜ் காங்கிரசு, அர்ஸ் காங்கிரசு, ஃபார்வார்ட் ப்ளாக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டிபோட்டது , இதில் அமோக வெற்றி பெற்ற அதிமுக , எம்ஜீஆர் மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வரானார்
1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக , பல பிரிவுகளாக பிரிந்திருந்த காங்கிரஸ் மீண்டும் ஓன்று சேர்ந்தது , இந்திய தேசிய காங்கிரசு,காந்தி காமராஜ் காங்கிரசு ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டிபோட்டது , பெருபான்மை இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற்றது
1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக , பல பிரிவுகளாக பிரிந்திருந்த காங்கிரஸ் மீண்டும் ஓன்று சேர்ந்தது , இந்திய தேசிய காங்கிரசு,காந்தி காமராஜ் காங்கிரசு ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டிபோட்டது , பெருபான்மை இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற்றது , மூன்றாம் முறையாக முதல்வரானார் எம்ஜீஆர்
இந்த காலகட்டத்தில் எம் ஜி ஆர் முழு மூச்சாக ஈழ போராட்டத்தை ஆதரித்தார்
டிசம்பர் 24, 1987 அன்று தமிழக முதல்வராக இருந்த மரணமடைந்தார். இதை தொடர்ந்து எம்ஜியாரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை, ஆட்சியும் கலைக்கப்பட்டது ,
இதற்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது , அதிமுக (ஜா ) , அதிமுக (ஜே ) என பிரிந்ததால் கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை இழந்தது
1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ,
அதிமுக (ஜே ) , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடனும் கூட்டணி அமைத்தும்
அதிமுக (ஜா ),தமிழக முன்னேற்ற முன்னணி உடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது
அதிமுக (ஜே ), அணி 27 இடங்களில் வெற்றி பெற்று எதிர்கட்சி அந்தஸ்து பெற்றது , பின் இரு அணிகளும் சேர்ந்து மீண்டும் அதிமுக ஜெ. ஜெயலலிதா தலைமையில் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கியது
No comments:
Post a Comment