Thursday, December 22, 2011

முல்லை பெரியாறு- பாகம் 11

பாகம் பத்து  படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்,


பலபடித்திய தமிழகம் ! பறித்துக் கொண்ட கேரளம் ?
============================================
1979ஆம் ஆண்டு

               பிரச்சனை வந்த உடன் , தமிழகம் ,பெரியாறு அணைக்கட்டில் இருந்து உட்புறமாக 12  மீட்டர் தொலைவில் தமிழக எல்லை உள்ளது , இந்த பகுதியில் புதிய அனைகட்டலாம் .இந்த அணை கட்டுவதன் மூலம் தமிழகம் கேரளாவுக்கு எவ்வித பணமும் தர வேண்டியதில்லை . முழுக்க முழுக்க தமிழகத்தில் சொந்தமாக அணை இருக்கும் , இந்த திட்டத்தை மறைந்த       எம் ஜி ஆர் ஆட்சி யில் பரிசிலிக்கப்பட்டது

1979ஆம் ஆண்டு
                புதிய அணை என தமிழகம் நினைத்தும் , கேரளா பின் வாங்கி ,  மத்திய நீர் ஆணையத்திடம் பிரச்னையை எடுத்து கொண்டு போனது

23.11.1979 அன்று மத்திய நீர் ஆணையத் தலைவர் டாக்டர் கே.சி. தாமசும், இரண்டு மாநிலங்களைச் சேர்ந்த என்ஜினீயர்களும், முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டு, செய்தியாளர்களிடம், அணைக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்று அறிவித்தார்.

மீண்டும் 25.11.1979 அன்று திருவனந்தபுரத்தில் இரு மாநில அதிகாரிகளையும் கலந்தாலோசித்த பிறகு, டாக்டர் கே.சி. தாமஸ், முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்று அறிவித்தார்.

இருந்த போதிலும், அணையைப் பலப்படுத்துவதற்கு 3 கட்டங்களாக நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று அறிவுரை வழங்கினார்.
  
அதில் இரு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அணையை 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பலப்படுத்துவது என்றும், அதுவரை அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து குறைத்து 136 அடியாக வைத்துக் கொள்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இப்படித்தான் அணையின் நீர்மட்ட அளவு அணை கட்டிய 84 வருடங்கள் கழித்து முதல் முறையாக குறைக்கப்பட்டது. அன்றைய தினம் இந்த ஒப்பந்தத்திற்கு அப்போது எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராஜா முகமது ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1979ஆம் ஆண்டு

மத்திய நீர் வள ஆணையம் பரிந்துரை படி ,எம்.ஜி.ஆர்-கேரளவுடன் ஒப்பந்தத்துக்கு முன்பு வந்தார் ,ஏற்கனவே மீன் பிடிக்கும் உரிமையை இழந்த போதும் , இதுவரை தமிழகம் அனுபவித்து வந்த இன்னும்   சில விசயங்களை விட்டு கொடுக்க பட்டது

அணையை வலுபடுத்து வரை தற்காலிகமாக அணையின் நீர் மட்டத்தை குறைப்பது

அணையில் படகு விடும் உரிமை கேரளாவிற்கு தருவது

அணை வரையிலான சாலையும் தமிழக அரசிடமிருந்து கேரளாவிற்கு அதிகாரம் கைமாற்றம்

1980ஆம் ஆண்டு

அவ்வாறே ஓர் ஆண்டுகாலம் அணையைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் தமிழகத்தால்  மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் 29.4.1980 அன்று டெல்லியில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் இரண்டு மாநிலப் என்ஜினீயர்களுடன் அணையைப் பலப்படுத்தியது பற்றி ஆய்வு செய்து விட்டு, 136 அடியில் ,145 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்தவும், மேலும் 12.51 கோடி ரூபாய் செலவில் அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் ஆணையிட்டது.

 அந்த பணிகளும் நடைபெற்றன. ஆனால் 145 அடி உயர்த்த கேரள அரசு சம்மதிக்கவில்லை. இதில் விஷேசம் என்னவென்றால் அணை பாதுகாப்பு தொடர்புடைய அனைத்துப் பணிகளும் கேரள அரசுக்கு அனுப்பப்பட்டு, அம்மாநில அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகே செய்யப்பட்டன

1981ஆம் ஆண்டு

ஒருபக்கம் அணை பலபடுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது , இந்த காலகட்டத்தில் அணையின் தற்காலிக நீரின் அளவாக கேரளா வைத்திருந்த உயரத்தை (136 அடி )விட அதிகமாகி அணையில் 138.1 அடி தேங்கியது , அப்போதும் அணையில் எந்த பதிப்போம் ஏற்படவில்லை

1982ஆம் ஆண்டு
தமிழகத்தால் அணை வலுபடுத்த படுவதை பார்த்த கேரளா , இனி அணை வலிமை பற்றி பேச முடியாது என நினைத்து , இந்த அணைக்கு வரும் நீர் வரத்தை தடுக்கும் வகையில் தண்ணீர் வரும் வழியில் நான்கு புதிய அணைகளை கட்டியது. ஒப்பந்த விதிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கை இது.

இந்த முறையும் பிரச்னையை தீர்க்க எதாவது தமிழகம் செய்ய வேண்டுமால் வா , அணையின் பாதுகாப்பை தமிழக காவல் துறையிடம் இருந்து  கேரளா காவல்துறைக்கு தந்தது , அதற்கு வருடம் கூலி தமிழகம் தருகிறது , இருந்த ஒரு சலுகையும் போனது

1985ஆம் ஆண்டு

5 ஆண்டுகளுக்கு மேலாக அணை பலபடுத்து வேலைகளை செய்து வந்த்து தமிழகம் , பணிகள் முடிந்த தருவாயில் ,மீண்டும் மத்திய நீர் வளம் ஆணையம் அணையை ஆய்வு செய்ய வருகிறது

8.6.1985 அன்று மத்திய நீர்வள ஆணையத்தின் உறுப்பினர் அணையை ஆய்வு செய்த பிறகு, அணை பாதுகாப்பாக உள்ளது, எனவே 152 அடி உயரத்திற்கு நீரைத் தேக்கி வைக்கலாம் என்று தன் சோதனை அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கனவே சென்ற முறை சொன்ன 136 அடியிலிருந்து 145 அடிக்கு நீரை உயர்த்த பொது , இந்த முறை அணை நீரை 152 அடிக்கு உயர்த்த விடுமா கேரளா விடவில்லை ,இருந்த அணையின் பாதுகாப்பும் கேரளா காவல்துறையிடம் போய்விட்டது ,

1989ஆம் ஆண்டு

அணை நீரை உயர்த்தாமல் தமிழகத்தை கட்டுபடுத்தலம் கேரளா ஆனால் இயற்கையை என்ன செய்ய முடியும் ,அதிக மழைவின் காரணமாக அணையில் நீர்மட்டம் கேரளா வைத்த 136 அடியை விட உயர்ந்து 141.3 அடி என நீர் பெருகியது, இப்போதும் அணைக்கு ஒன்னும் ஆகவில்லை

1989ஆம் ஆண்டு

இதுவரை தமிழகத்தை அதிமுக ஆட்சி செய்தது, பல வருடங்களுக்கு பிறகு ,1989இல் தி.மு.. மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

அப்போது அணையின் நீர்மட்டம் 141.3 அடி என உயர்ந்த்தை வைத்து ,152 அடிக்கு தான் நீர் மட்டத்தை உயர்த்த மட்டேன்கிரங்க ,  முதல் முறை மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் முந்தைய உத்தரவுப்படி 145 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் அதனை அணையை பாதுகாக்கும் கேரள காவல் துறை ஏற்கவில்லை.  ஆனால் கூலி மட்டும் தமிழகத்துடன் வாங்கி கொண்டு வந்தது

1992 ஆம் ஆண்டு

மீண்டும் அதிக மழைவின் காரணமாக அணையில் நீர்மட்டம் கேரளா வைத்த 136 அடியை விட உயர்ந்து 141.8 அடி என நீர் பெருகியது, இப்போதும் அணைக்கு ஒன்னும் ஆகவில்லை

1992 ஆம் ஆண்டு

அணை நிரம்பி கேரளா வைத்த அதன் கொள்ளளவான 136 அடியை எட்டியது ,இப்போதும் அணைக்கு ஒன்னும் ஆகவில்லை
  
1994 ஆம் ஆண்டு

அணை நிரம்பி கேரளா வைத்த அதன் கொள்ளளவான 136 அடியை எட்டியது ,இப்போதும் அணைக்கு ஒன்னும் ஆகவில்லை
  
இனி அடுத்த நமது பதிவில் வருவது நீருக்க நீதிமன்றங்கள் நோக்கி பயணம்

                                               தொடரும்.......................

2 comments: