கூடங்குளம் அணு உலை - பெரியாறு அணை
சில நண்பர்கள் இரண்டு விவகாரத்தை ஒப்பிட்டு குழப்பி கொள்கிறார்கள் , இதைதான் அரசாங்களும் எதிர்பார்த்தது , பல பிரச்சனைகளை போட்டு மக்கள் குழம்பி பொய் இருந்தால் தான் எதாவது ஒன்றை செய்யமுடியும் . அல்லது அரசாங்கம் பக்கம் மக்களின் கவனம் திரும்பாது
ஆனால் தமிழகத்தில் இரு வேறு இடங்களில் நடக்கும் போராட்டத்தில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் ஒரு போராட்டம் மேற்கு எல்லையில் இரு மாநிலம் சம்மந்தப்பட்ட பிரச்னையான முல்லை பெரியாறு அணை பிரச்சனை , மற்றொன்று கிழக்கு எல்லையில் தெற்கு தமிழகத்தில் கூடங்குளத்தில் தமிழக மாநிலத்திற்கு உட்பட்ட பிரச்சனை
இரண்டையும் சம்மந்தபடுத்தும் கேள்வி
அணை நிலநடுக்கத்தால் பாதிக்காது என்றால் அணு உலையும் பாதிக்காதுதனே , பிறகு ஏன் அணுஉலையை எதிர்க்கிறேர்கள் , அணையை வேண்டும் என்கிறார்கள் ?
நிலநடுக்கம் எங்கும் வரலாம் அதை யாரும் தடுக்கமுடியாது
, ஆனால் இரண்டு கட்டுமானங்களில் ஏற்பட்டு பதிப்பை கணக்கிட்டு பார்க்கவேண்டும்
அணு உலை உடைந்தால் என்ன பாதிப்பு உண்டாகும் , ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகளுக்கு அணு கதிர் வீச்சு
பாதிப்பு இருக்கும்
அணை தண்ணீரால் எத்தனை ஆண்டுகள் பாதிப்பு இருக்கும் என யோசித்து பார்த்த இந்த கேள்விற்கு இடமில்லை தானே
அணு உலை ஒரு குறிப்பிட்ட அளவு நிலநடுக்கத்தை
தாங்கும் வண்ணம் தான் கட்டப்படும் இது உலை பகுதி மட்டுமே ,மற்ற பகுதிகள்
அனைத்து சாதாரண கட்டிட அமைப்புதனே , இந்த மற்ற கட்டிட அமைப்பில் உள்ள எதாவது ஒரு பகுதி பாதித்தாலும் அணு உலையை பாதிக்கும் தானே எடுத்துகாட்டாக குளிரூட்டும் உபகாரனங்கள் பதித்தால் மொத்த அணு உலையும் பாதிக்கும்
அணு உலை ஒரு குறிப்பிட்ட அளவு நிலநடுக்கத்தை
தாங்கும் வண்ணம் தான் கட்டப்படும் இந்த ஒன்றை வரியை வைத்து ,ஒட்டு மொத்த
அணு உலையும் நல்லது என சொல்ல முடியாது
மேலும் அணு உலைகளுக்கு ஒரு சதவித பாதிப்பு
ஏற்பட்டாலும் அதன் வேகம் எப்படி இருக்கும் என அறிவார்ந்த மக்கள் ,இளைஞர்கள்
சிந்திக்க வேண்டும்
அணு உலைக்கு நிலநடுக்கத்தை தவிர்த்து என்ன என்ன
பதிப்புகள் வரும் என பார்த்தால்
மனித
தவறுகளால் ஏற்படும் பாதிப்பு
அணுஉலை நிலையத்தில் வேலை செய்யும் அனைவரும் அணு
வித்தகர்கள் அல்லவே , ஆரம்பத்தில் கட்டுமான பணிகள் நடப்பதில் இருந்து அணு உலை செயல் பாட்டுகள் கண்காணிக்கும் அதிகாரிகள் வரை தங்களின் வேளையில் சிறு மறதி யால்
மனித தவறுகள் நடக்க வைப்பு உண்டு , இதனால் பின் நாள்களில் பாதிப்பு கணக்கிடமுடியதாக
இருக்கும் .
காலத்தால் எடுக்க படாத நடவடிக்கைகளால் ஏற்படும்
பாதிப்பு
எதாவது ஒரு பகுதியோ ,உபகரணமோ பாதிக்கும் போதும் விபத்திற்கு உள்ளாகும் பொது அதை சரி செய்யமையாலும் , கட்டுபாட்டு அறையில் வரும் ஆபய எச்சரிக்கைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்காமல் விட்டாலும் அணு உலை பாதிக்கும்
வெளி புறத்தில் வரும் ஆபத்துகள்
எதிரிநாட்டு படைகள் இன்றைய காலகட்டத்தில்
முதலில் குறிவைப்பது அணு உலை களை தான் , இங்கே கடல் பகுதில் மீனவனுக்கும் இருக்கும் பாதுகாப்பு தானே அணு உலைக்கும்
இருக்கும் , மேலும் கடந்த மாதம் படகு மூலம் முற்றுகை போராட்டம் செய்தவர்கள் அணு உலை பகுதி வரை சென்று வந்துள்ளார் , ஏழு அடுக்கு
பாதுகாப்பு எங்கே போனது என தெரியவில்லை , இப்பொது சீனா அங்கே கடல் தளம் அமைக்க போகிறதாம் , இங்கே கடல் தளம் அமைக்க போகிறதாம் என தினமும் அச்சுறுத்தல் செய்திதான் வருகிறது ,
இதற்கு பிறகு தான் நிலநடுக்கத்தால்
வரும் பதிப்பை பற்றி பேசுகிறோம்,
கடலில் வரும் நிலநடுக்கம் கடலோடு போவதில்லை , கடல் நீரின் அழுத்த்த்தி அதிகரித்து சுனாமி அலைகள் உருவாக்கி மிக பெரிய பாதிப்புகளை உருவாக்கும் , கடலில் ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அந்த பக்கம் நிலநடுக்கம் வந்தாலும் தண்ணீரால் பாதிப்பு இங்கே இருக்கும் , கடந்த சுனாமி இந்தோனேசியாவில்
ஏற்பட்ட பூகம்பத்தின் பாதிப்பு சென்னையிலும் தமிழக கடல் கரை ஓரத்திலும் பாதித்தது அல்லவா
நிலத்தில் ஏற்படும் நிலநடுக்கம் , கடலில் ஏற்படும் நிலநடுக்கத்தை பார்க்கும் பொது , இந்த பாதிப்பு ஏற்படும் இடத்தை தவிர வேறு எங்கும் பாதிப்பதில்லை , குஜராத்தில்
நிலநடுக்கம் வந்தால் தமிழகத்தை பாதிப்பதில்லையே , ஏன் தமிழகத்தில் சேலத்தில் நிலநடுக்கம் வந்தால் திருச்சியில் பாதிக்கிறதா என்ன , ஆக கடலில் ஏற்பட்டு நிலநடுகத்திற்க்கும்
,நிலத்தில் வரும் நிலநடுகத்திற்க்கும் பாதிப்புகள் வேறு வேரு தானே
இதை போல மலை பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கம் ஏற்படுத்து பாதிப்புகள் என்ன
, மலை சரிவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அந்த பகுதி மண்ணின் தன்மை இழந்த பகுதிய இருக்கும் பட்சத்தில் மண் சரிவை
உண்டாக்கி பாதிப்பை தரும் , இன்று தமிழகத்தில் ஊட்டி பகுதிகளில் இது ஏற்பட சாத்தியம் உண்டு
,மாறாக கல் மலையின் மீது ஏற்பட்டு நிலநடுக்கும் எந்த
பாதிப்பையும் ஏற்படுத்தாது ,
முல்லை பெரியாறு அணை கட்டு இருப்பது
உறுதியான மலை பகுதிகளின் நடுவே ,மேலும் அணை மிக வலுவாக கட்டமைக்க பட்டுயுள்ளது
அணையின் விவரங்கள் பார்க்கும் போது இது தெரிய வரும் ,
மேலும் அணை இடிந்தலும் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதையும் "முல்லை
பெரியாறு " தொடரில் தெரியவரும்
இறுதியாக ஓன்று அணை நீரின் பாதிப்பும் , அணு உலை யால் வரும் பாதிப்பும் ஒன்றாகுமா ,
ஒரு சிறு எடுத்துகாட்டு
, வீட்டில் இருக்கும் தண்ணீர் தொட்டில் ஏற்படும் உடைப்பும் , எரிவாயு உருளையில் ஏற்படும் உடைப்பும் ஒன்றாகுமா ,
அணை உடையது வலுவாக இருக்கிறது , அணு உலை ஆபத்தானது
அணை வேண்டும் , ஆயுசுக்கும்
பாதிப்பை ஏற்படுத்து அணு உலை வேண்டாம்
அணு உலை எங்கும் வேண்டாம் , கூடங்குளத்தை மூடு , முல்லை பெரியாறு அணைகட்டில் உள்ள மதகுகளின் கதவுகளையும் மூடு அணையில்
நீர் பெருகட்டும் , அணு உலை அகற்றபடட்டும்
அருமை ஒரு நல்ல செய்தி.
ReplyDeleteஅருமை
ReplyDeleteநன்றி
ReplyDeleteநன்று
ReplyDeleteLittle Boy
ReplyDeleteவருக , நன்றி