Wednesday, December 7, 2011

முல்லை பெரியாறு- பாகம் 1

முல்லை பெரியாறு-கேரளா பக்கம் 
==================================

முல்லையில் தொல்லை தருகிறது கேரளா , உண்மையில் இந்த அணையால் கேரளாவிற்கு என்ன பதிப்பு ,

ஒருவேளை உடைத்தால் கேரளாவிற்கு என்ன நன்மை , தமிழகத்திற்கு என்ன பதிப்பு



மேலே உள்ள படம் தான் தேக்கடி நீர்த்தேக்கம் , அதாவது தமிழக எல்லையை ஒட்டி உள்ள முல்லை பெரியாறு அணைக்கட்டின் நீர்பிடி பரப்பு

இதன் மொத்த பரப்பு - 8000 முதல் 8300 ஏக்கர்  வரை

மலைகளுக்கு  நடுவில் கடல் மட்டத்திலிருந்து 2850 அடி உயரத்தில் உள்ளது


இந்த அணையின் ஒரு பக்க வாட்டில் இருந்து வரும் நீர்தான் தமிழகத்திற்கு வருகிறது




மேலே உள்ள படம் தான் முல்லை பெரியாறு அணையின் முன் தோற்றம் ,

அணையின் மொத்த உயரம் -155  அடி

மொத்த நீர் தேக்க உயரம்      - 152  அடி

தலைமை மதகின் தரை மட்டம்    - 109  அடி

தமிழகத்திற்கு தண்ணீர் அனுப்பும் மலை குகையின் உயரம் -104  அடி

இப்போது அணையின் நீர் மட்டம் - 136  அடி

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி நீர் மட்டம் -144  அடியாக இருக்கலாம்

அணை முழுமையாக திறந்தால் 109 அடி வரை நீர் தேங்கும் , இந்த நீர் 104  அடி உயரத்திலுள்ள மலைகுகை மூலம் கிழக்குபக்கமாக தமிழகத்திற்கு தண்ணீர் வரும்


அணையின் முன்பக்கமாக வரும் நீர் மலை இடுக்குகளுக்கு இடையே இடுக்கி நீர்தேக்கத்திற்கு வந்தடைகிறது




மேலே உள்ள படத்தில் சிகப்பு வழித்தடம் வழியாக வண்டிபெரியார் என்ற ஒரே ஒரு மலை கிராமத்தை கடந்து இடுக்கி நீர் தேக்கத்தை அடையும் முல்லை பெரியாறு அணையின் நீர் , இந்த இடைப்பட்ட பகுதி முழுக்க வனபகுதி மலைகள் சூழ்ந்த பரப்பு


வண்டி பெரியார் கிராமத்து மக்களிடம் தான் கேரளா அரசு அணை உடைந்த அழிந்து போவர்கள் என பிதீயை கிளப்பிளுள்ளது

முல்லை அணைக்கும் வண்டி பெரியார் கிராமத்திற்கும் தண்ணீர் கடந்து வரும் பாதையின் நீளம் சுமார் - 12 ,430 மீட்டர்

வண்டி பெரியார் கிராமத்திலிருந்து இடுக்கி நீர் தேக்கம் வரை தண்ணீர்  செல்லும் பாதையின் நீளம் சுமார் - 24 ,358  மீட்டர்

முல்லை அணைக்கும் இடுக்கி நீர் தேக்கம் வரை தண்ணீர்  செல்லும் பாதையின் நீளம் சுமார் - 36 ,788  மீட்டர்

சுமாராக 38  கிலோ மீட்டர் மலைகளின் நடுவே வனபகுதில் பயணிக்கும் நீர் இடுக்கி நீர் தேக்கத்தை அடைகிறது



மேலே உள்ள படம் இடுக்கி நீர் தேக்கம் இந்த நீர் தேக்கத்தில்
அருகருகே இரண்டு அணைகளையும் , மறுபக்கம் ஒரு அணையையும் மொத்தம்  மூன்று அணைகளை கட்டியுள்ளனர்

1 .இடுக்கி வளைவு அணை , 2 .செறுதோணி அணை 3 .குளமாவு அணை  


இதன் மொத்த பரப்பு - 33 ,300 முதல் 33 ,600 ஏக்கர்  வரை

மலைகளுக்கு  நடுவில் கடல் மட்டத்திலிருந்து 2380 அடி உயரத்தில் உள்ளது

இதிலிருந்து இரண்டு பகுதிகளாக நீர் போக்குவரத்து பிரிகிறது 

குளமாவு அணையில் இருந்து ஒரு பிரிவும் 

இடுக்கி வளைவு அணை ,செறுதோணி அணையில் இருந்து ஒரு பிரிவும் 

                                                                                                           தொடரும் ...............

2 comments:

  1. i am waiting for the full story, good start, best of luck

    ReplyDelete
  2. அபு சனா, வாழ்த்துக்கு நன்றி , தொடர்ந்து வரும்

    ReplyDelete