Tuesday, December 27, 2011

முல்லை பெரியாறு- பாகம் 15

பாகம்-14  படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்


போராட்ட காலம் ஆரம்பம் 
===============================
2006ஆம் ஆண்டு

27/ 02 / 2006 அன்று வந்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காத கேரளா , மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்த , அப்போது ஆண்ட இதே உம்மன்சண்டி , காங்கிரஸ் அரசு கேரளா சட்டமன்றத்தில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வருகிறது , இந்த சட்டதிருத்த்த்தை அனைத்து கட்சிகளும் ஆதரித்தது.

கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு சட்டத்தில் செய்ய பட்ட திருத்தம் , திருத்தம் என சொல்லுவதை விட புதிதாக சேர்க்கப்பட்ட சில அம்சங்கள் என சொல்லுவதே சரி , அதாவது

இந்த சட்டதிருத்த படி கேரளாவில் உள்ள அணைகளை பராமரிக்கவும் , தேவையான முடிவுகளை எடுக்கவும் (அதாவது உடைக்கவும் ) கேரளா அரசுக்கே உரிமை , இதில் எந்த நீதி மன்றமும் தலையிட முடியாது எனவும்

அணைகளின் நீர் மட்டத்தை கேரளா அரசே தீர்மானிக்கும் என சொல்லி ஒவ்வொரு அணையின் நீர்மட்டத்தை யும் பட்டியல் போட்டது , அதில் முதல் முறையாக முல்லை பெரியாறு அணையின் பெயரை சேர்த்து , அதற்கு 136 அடி நீர் மட்டம் என சட்ட திருத்தத்தை  கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, 2006ம் ஆண்டு மார்ச் 18 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது,

இதுவரை முல்லை பெரியாறு அணையின் கேரளா அரசில் எந்த சட்ட பிரிவிலும் இடம் பெறவில்லை முதல் முறையாக தமிழகத்திற்கு சொந்தமான அணையை கேரளா சேர்த்து கொண்டது (ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என கிராமத்து பழமொழி தான் நேபகம் வருகிறது )

மேலும் முல்லை பெரியாறில் புதிய அணை கட்டவும் தீர்மானம் நிறைவேற்ற பட்டது

இந்த ஆண்டு தமிழக , கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடந்தது , இந்த தேர்தல் களத்தில் இதை இருவரும் மறந்து விட்டார்கள்

மீண்டும் இங்கே திமுக ஆட்சி , அங்கே கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி வந்த்து

இந்த காலகட்டத்தில் மீண்டும் உச்ச நீதிமன்றம் நோக்கி பயணித்து பிரச்சனை.

உரிமை காப்புப் பேரணி

நீதி மன்ற தீர்ப்பை மதிக்கவில்லை , மத்திய அரசும் என்ன எது என கேட்கவில்லை மாநில அரசும் விழா கோலங்களில் மூழ்கி போனது , இந்த நேரத்தில் மக்கள் மன்றத்தில் பிரச்சனையின் தீவிரத்தை எடுத்து போக வேண்டிய எதிர் கட்சிகளில் ஒரே ஒருவர் மட்டும் எடுத்து போனார் ,
  
ஏற்கனவே பல போராட்டங்களை நடத்திய ஐந்து மாவட்ட விவசாய சங்கம் , பழ.நெடுமாறன் அவர்களின் அமைப்புகளை சேர்த்து கொண்டு , மதிமுக கட்சியின் பொது செயலாளர் வைகோ , 19.09.2006 அன்று மதுரையில் முல்லை பெரியாறு உரிமை காப்புப் பேரணியை நடத்தினார் , முல்லை பெரியாறு அணைக்கு அரசியல் கட்சி நடத்திய முதல் போராட்டம் இதுவாக இருக்கும், போராட்டம் வலுவாக இருந்திருந்தால் (அனைவரும் ஒத்துழைத்து இருந்தால் ) புறசூழல் தன்மையையும் நீதிமன்றங்கள் தீர்ப்பு எழுதும் பொது கணக்கில் கொள்ளும் என நினைத்திருப்பார் போல வைகோ (சட்டம் படித்தவர் அல்லவா )

2006ஆம் ஆண்டு

25.9.2006 அன்று உச்சநீதிமன்ற ஒரு ஆணை பிறபித்தது, அதில் , மத்திய நீர்வள ஆதார அமைச்சர், தமிழக-கேரள அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை பிரச்சனையை தீர்த்து கொள்ள வேண்டும் என சொன்னது

2006ஆம் ஆண்டு

24.11.2006 அன்று வைகோ ஒரு மனுவை கொண்டு சென்று இந்தியா பிரதமரிடம் தருகிறார் , மனுவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த கேரளா அரசை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என கேட்டு இருக்கிறார் ,

2006ஆம் ஆண்டு

மத்திய நீர்வள ஆதார அமைச்சர் சைபுதீன் சோஸ் முன்னிலையில் 29.11.2006 அன்று டெல்லியில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் அன்றைய முதல்வர் கருணாநிதி ,அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், தலைமைச் செயலாளரும் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 கேரளா அரசு சார்பிலும் அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டானர் , இதில் என்ன பேசினார்கள் , என்ன முடிவு எடுக்க பட்டது என தெரியவில்லை

2006ஆம் ஆண்டு

ஒரு பக்கம் மனுவை தந்து விட்டு , மறுபக்கம் போராட்டத்தை தொடங்குகிறார் வைகோ, 18.12.2006 முதல் 23.12.2006 வரை 6 நாள் நடைபயணம் போடுகிறார்,

இந்த நடைபயணத்தை மதுரையில் தொடங்கி கூடலூர் வரை நடந்தே சென்று மக்களிடம் அணையின் அவசியம் கேரளாவின் சதிகளை எடுத்து வைக்கிறார்.

2007ஆம் ஆண்டு

நடைபயணத்தை முடித்தது , ஒருவேளை அணையை கேரளா உடைத்து விட்டால் என்ன செய்வது , பாதுகாப்புக்கு இருப்பதும் கேரளா காவல் துறைதனே , ஜனவரி 2 தேதி வைகோ , இந்தியா பிரதமருக்கு ஒரு கடிதம் எழுத்துகிறார் , முல்லை பெரியாறு அணைக்கும் மத்திய தொழில் பாதுக்காப்பு படையை அனுப்பி , அணையை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் ,(கூட்டனி கட்சியாக இருத்தலே கண்டுக்க மாட்டார்கள்)

2007ஆம் ஆண்டு

மார்ச் மாதம் 31 தேதி பல விவசாய சங்கங்கள் சேர்ந்து, வைகை-முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு நடத்த பட்டது , அதிலும் சிறப்பு பேச்சாளராக வைகோ விற்கும் ஒரு அழைப்பு

2007ஆம் ஆண்டு

மே மாதம் 09 தேதி , இதுவரை பேரணி , மேடையில் பேசிக்கொண்டு இருந்தவர்கள் வைகோ தலைமையில் மதுரை , பரமகுடி , உத்தமபாளையம் இன்னும் சில இடங்களில் அணைக்காக மறியல் போராட்டத்தை தொடங்கி விட்டார்கள்.

                                              தொடரும் ........................

No comments:

Post a Comment