Wednesday, December 7, 2011

முல்லை பெரியாறு- பாகம் 2

முல்லை பெரியாறு-கேரளா பக்கம் 
================================
பாகம் ஓன்று படிக்காதவர்கள் படிக்க இங்கே அழுத்தவும்  , தொடச்சியை பார்ப்போம் .


இடுக்கி நீர் தேக்கம் வரை பார்த்தோம் , மூன்று அணைகளில் வெளியேறும் நீரின் போக்கை பற்றி பார்ப்போம்  


1 . குளமாவு அணை 






மேலே உள்ள படம் தான் குளமாவு அணை அணையின் முன் தோற்றம் 
இந்த அணியிலிருந்து நேரடிய தண்ணீர் வெளியேற்றம் இல்லை , ஆனால் மலை குகை வழியாக தண்ணீர் எடுத்து சென்று மூலமட்டம் மின் உற்பத்தி நிலையத்திற்கு பயன்படுத்துகிறார்கள் 
இந்த அணை கடல் மட்டத்திலிருந்து 2380  அடி உயரத்தில் உள்ளது 
இங்கு உள்ள மலை குகையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 2195  அடி 




மேலே உள்ள படத்தில் சிகப்பு வட்டமிட்ட பகுதிதான் மூலமட்டம் மின்சாரம் நிலையம் 
இது இந்தியா-கனடா நாட்டின் கூட்டு முயற்சியில் நிறுவப்பட்டது , இந்த மொத்த மின் உற்பத்தி திறன் 780  Mw  ஆகும், இது கடல் மட்டத்திலிருந்து 541  அடி உயரத்தில் உள்ளது , போதிய தண்ணீர் அளவு இல்லாததால் இந்த செயல்படும் திறன் குறைந்துள்ளது 
இதற்க தண்ணீரை கொண்டுவர கேரளா இந்த தகடுதத்த வேலைகளை செய்கிறது 





இந்த மாதிரி தான் மூலமட்டம் மின் நிலையத்திற்கு தண்ணீர் வருகிறது மேலே இருப்பதில் 


எண் :- 3   -- மின் உற்பத்தி செய்யும் நிலையம் 


எண் :- 6 முதல் 10 வரை  --  மலை குகை 


எண் :- 12  இடுக்கி நீர் தேக்கத்தின் ஒரு பகுதி 


எண் :- 13 செறுதோணி அணை 


எண் :- 14  இடுக்கி வளைவு அணை      


நீர் தேக்கத்திற்கும் மின் நிலையத்திற்கும் உள்ள தூரம் 3375  மீட்டர் 


உயர வித்தியாசம் -     1654   மீட்டர் 


எவ்வளவு வேகமாக தண்ணீர் வரும் என யோசித்து பாருங்கள் 


சரி இந்த மின் உற்பத்திற்கு பிறகு தண்ணீர் எங்கே போகிறது 





மேலே உள்ள வழி தடம் வழியாக , தொடுபுழ நீர் தேக்கத்திற்கு வந்து சேர்கிறது , இதுவரை முல்லை ஆறு மலைகளுக்கு நடுவி பயணித்து , இந்த தொடுபுழ பள்ளத்தாக்கு வந்து சேர்கிறது,மூலமட்டம் மின் நிலையத்திற்கும் இந்த தொடுபுழ நீர்தேக்கத்திற்க்கும் உள்ள தூரம் சுமார் 8230  மீட்டார் 


மேலே உள்ள படம் தொடுபுழ நீர்தேக்கமும் அதிலுள்ள மலங்கர அணைகட்டும் 


இந்த மலங்கர அணைக்கட்டு கடல் மட்டத்திலிருந்து 125  அடி உயரத்திளுள்ளது , இதன் பரப்பு சுமார் 1660 ஏக்கர் 


இந்த தொடுபுழ நீர் தேக்கத்தில் இருந்து  வெளியேறும்  நீர்  பல பிரிவுகளாக சமவெளி பகுதிகளுக்குசெல்கிறது ,


முல்லை பெரியாறு அணையிலிருந்து வெளியேறும் நீர் மலை பகுதிகளில் வனப்பகுதிகளின் நடுவே சுமார் 67 ,505 மீட்டர் தூரம் பாய்ந்தோடி சமவெளி பகுதியை அடைகிறது , 


இந்த தொடுபுழ நீர் தேக்கதிலிருந்து வெளியேறும் முல்லை ஆறு , சமவெளி பகுதிகளில் பல ஊர்களை கடந்து மிக குறைந்த விவசாய தேவைகளை பூர்த்தி செய்து வளைந்து நெளிந்து      32,௦௦௦000 ௦௦௦  மீட்டர் கடந்து  கச்சேரிதழம் என்ற  இடத்தில் மற்றொரு கிளை ஆற்றுடன் கலந்து மீண்டும் ,வளைந்து நெளிந்து 70,917  மீட்டர் தூரம் கடந்து வைக்கம் பக்கத்திலுள்ள  கைதபுழ என்ற நீர்நிலையை  அடைகிறது , இங்கிருந்து மீண்டும் பயணிக்கும் முல்லையாறு சுமார் 8019 மீட்டர் பயணத்திற்கு பிறகு  கொச்சி வழிய அரபி கடலில் ஒரு பகுதி முல்லையாறு சங்கமிக்கிறது 


சமவெளியில் வரும் நீர் பெரும்பாலும் குடிநீர் தேவையை தவிர வேறு எதுக்கும் பயன்படாமல்  வினக கடலில் கலக்கிறது 


மற்றும் ஒரு  பிரிவாக இடுக்கி அணையில் இருந்து வெளியேறும் நீரின் போக்கை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் 


                                                                                                        தொடரும்..................................

No comments:

Post a Comment