Saturday, December 24, 2011

முல்லை பெரியாறு- பாகம் 12

பாகம் பதினொன்று படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம், 


வலுபடுத்த பட்ட அணை
=======================
1980-1994 ஆம் ஆண்டு

 14 ஆண்டு காலம் அணையை வலுபடுத்து பணிகளை தமிழகம் மேற்கொண்டது, வலுபடுத்துவது என்றால் வெறும் பூச்சு வேலைகளும் வர்ணமும் திட்டுவதல்ல ,

மேலே உள்ள படம் தான் பென்னி குக் கட்டிய அணையில் வலுபடித்திய பின் அணையின் குறுக்கு வெட்டு தோற்றம் , 999 ஆண்டுகள் என்பது அணையின்  ஆயுட்காலம் அல்ல , அணை இருக்கும் பகுதியை குத்தகைக்கு எடுக்க பட்ட காலம் , ஒரு வேளை அணை இந்த 999 ஆண்டுகள் தாண்டியும் நிலைத்து இருக்க வாய்ப்பு இருக்கிறது ,

போதுமான பலபடுத்து பணிகளை அவ்வபோது செய்தால் , அணை பல நூற்று ஆண்டுகளை கடந்து கம்பீரமாக இருக்கும் என்பது நிருபிக்க பட்ட உண்மையாக, இன்று ஆயிரம் வருடங்களுக்கு முன் கரிகாலன் கட்டிய கல்லானை இருக்கிறது

அணையில் பலபடுத்த பட்ட விவரங்கள்

நீருக்கு எதிர் திசையில் இருக்கும் சரிந்த அணை பகுதியை எடையை கூட்டுதல் ,இதன் மூலம் நீர் அழுத்தத்திற்கு அணை ஈடு கொடுக்கும்

ஒரு பக்கம் மட்டும் வலுபடித்தினால் போதுமா , நீர் பகுதியிலும் வலுபடுத்தும் வண்ணம் , அணையை பூமியோடு இழுத்து கட்டுதல் , இந்த மூலம் அணையை கீழ் நோக்கி இழுத்து பிடுத்து கொள்ளும் ,

மேலும் அணையின் மேல் பக்கத்தில் பளுவை ஏற்றுவதால் அணையை பூமியின் பரப்போடு அழுத்தத்தை கொடுப்பது

இந்த மூன்று முறைகளை செய்வதால் மேலும் அணை வலுவாக இருக்கும் , நீரின் அளவு கூடும் பொது சரியான எதிர்ப்பு சக்தி கொண்டு தங்கி நிற்கும் , இது போல தேவை ஏற்படும் ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அணையை வலுபடித்தி கொண்டே இருக்கலாம்

பென்னி குக் கட்டிய அணை

பழைய (வலுபடுத்தும் முன் இருந்த அணை )அணை, பென்னி குக் கட்டி கொடுத்த அணை , அணையின் நீர் தொடும் முகப்பும் , அதற்கு எதிர் திசையில் நீரின் அழுத்தத்தை எதிர்த்து நிற்கும் சாய்ந்த பகுதியும் , சுண்ணாம்பு சுரக்கி கலவையால் கருங்கல் கற்கள் கொண்டு கட்டப்பட்டது (Stone masonry with lime surkhi mortar)

இந்த இரண்டுக்கும் உட்பட்ட நடுப்பகுதியில் சுண்ணாம்பு சுரக்கி, சிறு கற்களால் ஆன  திண்காரையால் இடைவெளி இல்லாமல் நிரப்ப பட்டுள்ளது (lime surkhi  concrete)

வலுபடுத்த பட்ட அணை

அணை, குறிகிய , நடுத்தர , நீண்ட கால அடிப்படியில்  மூன்று கட்ட பணிகளாக வலுபடுத்த பட்டது

குறிகிய கால பணி
அணையின் எடையை அதிகரிக்கும் விதமாக , அணையின் மேற்பரப்பில் படத்தில் உள்ளபடி 21 அடி அகலத்திற்கு 3 பருமன் கொண்ட ஆர்.சி.சி கட்டுமானப் பணி அணையின் மொத்த நீளத்திற்கும் மேற்கொள்ள பட்டது , இந்த புதிய ஆர்.சி.சி கட்டுமானத்தால் அணையின் எடையில் ஒரு மீட்டருக்கு 35 டன்னும் மொத்த அணையின் பரப்பில் 12,000 டன் எடை கூட்டப்பட்டுள்ளது

நடுத்தர கால பணி

அணையை பூமியோடு இழுத்து கட்டும் விதமாக , இறுக்கி விசை தொழில்நுட்ப அடிப்படையில் அணையை பூமியின் அடித்தளத்துடன் எஃகு கம்பி கட்டுகளால் இழுத்து கட்டப்பட்டுள்ளது படத்தில் காட்ட பட்டுள்ள மாதிரி அணையின் முன் பகுதியில் இருந்து 5 அடி தொலையில் , அணையின் மேற்பரப்பில் இருந்து , அடித்தளப் பாறையில் 30 அடி ஆழம் வரை 9 அடி இடைவெளியில் 4 அங்குலம் விட்டம் கொண்ட துளைகள்,அணையின் மொத்த நீளத்தில் 95 இடங்களில்  போடப்பட்டது

இந்த 4 அங்குலம் துளைகளில் 7 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட  34 எஃகு கம்பிகளை ஒரு சேர கட்டி செலுத்தி , முதலில் 20 அடி உயரத்திற்கு கான்கிரிட் கலவையால் நிரப்ப்ப்பட்டு , பின் அணையின் மேல் பரப்பி இருந்து 120 டன் சக்தி கொண்டு இந்த கம்பி கட்டை இழுத்து பிடித்து கொண்டே  அணையின் மேல் பரப்பு வரை கான்கிரிட் கலவையால் நிரப்ப பட்டு உள்ளது.

நீண்ட கால பணி

நீருக்கு எதிர் திசையில் இருக்கும் சரிந்த அணை பகுதியை எடையை கூட்டும் விதமாக , படத்தில் உள்ளபடி  32 அடி பருமன் கொண்ட கான்கிரிட் கட்டுமானம்  பூமியிலிருந்து 10 ஆழத்தில்  ஆரமித்து அணையின் உச்சி வரை அணையின் மொத்த நீளத்திற்கும் கட்டப்பட்டுள்ளது

இந்த புதிய கட்டுமானமும் பழைய அணையும் ஒருசேர இணையும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது , மேலும் அணையின் நீர் கசிவை கண்காணிக்க இந்த புதிய அணை பகுதியில் இரண்டு வடிகால் மாடங்கள் , 10 அடி உயரத்தில் ஒன்றும் 45 அடி உயரத்தில் ஓன்று அமைக்கப்பட்டுள்ளது

மேலும் சில கட்டுமான பணிகளும் , புதிய அமைப்புகளும் ஏற்படுத்த பட்டது இதை அடுத்த பதிவில் பார்ப்போம்                                        
                                                            தொடரும்...............................
பின் குறிப்பு
அன்பான வேண்டுகோள் , இந்த பதிவுகளை தொடர்ந்து படிக்கும் நண்பர்கள் , மற்ற உங்களின் நண்பர்களுக்கும் இந்த பதிவுகளை அறிமுகம் செய்ய வேண்டுகிறோம், செய்தியின் அவசியம் அனைவரையும் சென்று சேரவேண்டும் , இதில் எந்த வியாபார நோக்கமுமில்லை

No comments:

Post a Comment