Sunday, December 25, 2011

முல்லை பெரியாறு- பாகம் 13

பாகம்-12   படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்,  


மேலும் பூர்வாங்க பணிகள் 
===========================
அணையை வலுபடித்தியது மட்டுமல்ல இன்னும் சில கட்டுமான பகுதிகளை கட்டி மேலும் அணைக்கு வலுசேர்க்கும் இதமாக தமிழகம் மேற்கொண்டது

வடிகால் மாடங்கள் அமைத்து அணையின் தினசரி நீர் கசிவை அளவிடபடுகிறது , பாதுகாப்பான அணையில் இருந்து எவ்வளவு நீர் கசிவு ஏற்படவேண்டுமோ அதைவிட முல்லை பெரியாறு அணையில் நீர் கசிவு குறைவாக இருக்கிறது

அணையில் குறிப்பிட்ட அளவு நீர் கசிவுகள் இருந்தால் தான் அணையின் பலம் ஒருவகையில் கூடும் என்பது நிருபண உண்மையும் கூட , அதாவது ஒரு பக்கம் தண்ணீர் வந்து அலைகளால் மோதும் பொது அணை மீது அழுத்தத்தை உண்டாக்கும்,இந்த நேரத்தில் சிறுது கசிவு இருந்தால் அணையின் மீது நீரின் அழுத்தம் குறையும்

புதிய நீர் போக்கிகள்

அணையில் அதிகபடியாக நீர் வரத்து இருக்கும் பொது , அணையை காக்கும் பொருட்டும் நீர் போக்கிகள் (மதகுகள் ) இருக்கும்

பழைய பென்னி குக் கட்டிட அணையில் 36 அடி அகலமும் , 16 அடி உயரமும் அளவு கொண்ட  10 மதகுகள் இருந்த்து , இதன்மூலம் அணையில் இருந்து ஒரு வினாடிக்கு 86,000 தண்ணீர் வெளியேற்றலாம் , ஒருவேளை அணையின் நீர் மட்டம் உயரும் பொது கண்காணிக்க பட்டும் தேவை யான அளவு நீரை வெளியேற்ற இந்த மதகுகளை பயன்படுத்துவார்கள்

ஏற்கனவே இருந்த 10 மதகுகள் உடன் மேலும்  40 அடி அகலம் 16 அடி உயர அளவு கொண்ட மேலும் புதிய  3 மதகுகள் கட்டப்பட்டது , இந்த புதிய அமைப்பின் மூலம் மட்டும் வினாடிக்கு 36,000 கனஅடி நீர் வெளியேற்றலாம்  மொத்த்த்தில் இப்போது வினாடிக்கு 1,22,000 கனஅடி  வெளியேற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

பெரியாறு நீர் தேக்கத்தில் உள்ள அமைப்புகள்

இந்த முல்லைபெரியாறு நீர்த்தேக்கத்தில் ஐந்து பகுதிகளின் உதவியோடு தமிழகம் பக்கம் நீர் திருபப்படுகிறது , பிரதான அணை , மதகுகள் இருக்கும் நீர் வழிந்தோடும் பகுதி , பேபி அணை , மேலும் ஒரு மண்ணால் ஆன அணை , தேக்கடியில் உள்ள தமிழகத்திற்கு நீரை தரும் ஒரு மதகும் சிறிய அணை போன்ற அமைப்பும் 

இதில் பிரதான அணையை வலுபடித்தி விட்டோம் , மதகுகளின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டோம்

பேபி அணையை வலுபடுத்துதால்

இந்த அணை 240 அடி நீளத்திற்கு பிரதான அணையின் தரைமட்டத்தில் இருந்து 112 அடி உயரத்தில் அமைக்க பட்டுள்ளது  , அதாவது அணையில் 112 நீர் தேக்கினால் தான் இந்த அணைபகுதிக்கும் நீர் வந்து சேரும் ,  அணையில் 152 நீர் தேக்கினாலே , இந்த அணையில் நீரும் அழுத்தம் 40 அடி உயரத்திற்கு தான் இருக்கும்

இந்த சிறிய அணை நல்ல நிலையில் இருந்தாலும் , பிரதான அணையில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணிகள் போல , இந்த அணையிலும் செய்து விட தமிழகம் திட்டமிட்டது , பிரதான அணை வலுவாகிவிட்டது , இதையும் வலுபடித்தி விட்டால் , அணையின் நீர் மட்டம் 152 அடிக்கு உயர்த்தி விடலாம் என நினைத்த தமிழகத்தின் எண்ணத்தை கேரளா சம்மதிக்குமா என்ன

கேரளா அரசு வனத்துறை யை ஏவிவிட்டு, அடாவடியாக , இந்த அணையில் புதிய கட்டுமான பணிகளை செய்ய விடாமல் தடுத்தது , இந்த பணிகளை செய்ய வந்த ஒப்பந்த காரர்கள் , பெறியாளர்கள் மீது பொய் வழக்கு களை போட்டது கேரளா அரசு

எத்தனை மூட்டுகட்டைகளை போட்டுள்ளது கேரளா என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளவேண்டும் , இனியும் இவர்களுடன் கெஞ்சி தண்ணீர் பெறமுடியுமா என்ன , அணை வலுவாக உள்ளது ,

ஐந்து மாவட்ட விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தி பார்த்தார்கள் , இதற்கும் செவி சாய்க்க வில்லை கேரளா அரசு ,இதை கண்டிக்க வேண்டிய மத்திய அரசும் கண்டும் காணமல் இருந்தது, நல்ல தீர்வுக்கு முன் நகர்வுகளை செய்ய வேண்டிய அரசு விழா களில் மூழ்கி இருந்தது, மக்களும் விவசாய சங்கங்களும் செய்வது அறியாது நீதி மன்றங்களை நோக்கி பயணித்தார்கள்

1997ஆம் ஆண்டு
           பிரச்சனைகள் ஒருபக்கம் இருந்தாலும் இயற்கையே யாராலும் கட்டுபடுத்த முடியாது அல்லவே , மழை அதிகமாக பொழிந்து மீண்டும் அணையின் நீர் மட்டம் தற்காலிக அளவான 136 அடியை எட்டியது , அணை வலுவாக இருந்த்து

இதன் பின் ஐந்து மாவட்ட விவசாயிகள் , அரசியல் கட்சிகள் போராட்டம் , நீருக்கு நீதி மன்றம் நோக்கி பயணம் என பயணித்து நிற்கிறது முல்லை பெரியாறு அணை விவகாரம்

                                               தொடரும்...............................

பின் குறிப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் நீரை தமிழகம் பக்கம் கொண்டுவர ஏதுவான வழிகள் இருந்தால் அது பற்றி எழுத சொல்லி பல நண்பர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் , உங்களின் விருப்பத்திற்கும் , எதிர்கால சிந்தனைக்கும் , ஆலோசனைகள் அனைத்திற்கும் நன்றி , இந்த விவகாரம் இதோடு முடிப்பது மக்களாட்சியின் நோக்கமல்ல , மேலும் தமிழகத்தை சிறக்க வைக்க ,அரசியல் தெளிவை இளையவர்களுக்கு ஏற்படுத்த தொடர்ந்து எழுதுவோம் , உங்களின் விருப்பங்கள் அடுத்த அடுத்த பதிவுகளில் வரும் , மக்களாட்சியை தொடர்ந்து படியுங்கள் , ஆதரியுங்கள்


9 comments:

  1. நன்றி இளையான்குடி

    ReplyDelete
  2. உங்களை எப்படிப் பாராட்டுவதென்று தெரியவில்லை. மிகச்சிறப்பான பணி வாழ்த்துக்கள் தொடருங்கள்

    http://jamewils.blogspot.com/
    http://tamilmalarnews.blogspot.com/

    இவ்விரண்டு தளங்களிலும் உள்ள கருத்துக்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. ஒருவேளை உண்மையிலேயே ஆணை வலுவிழந்து இருந்தால் என்ன செய்வது ?

    http://jamewils.blogspot.com/2010/11/mullaperiyar-dam-permanent-threat-to.html

    இந்த இடுகையில் "Strengthening carried out during 1980s" என்ற தலைப்பின் கீழ் வரும் கடைசிப் பத்தியில் கேரளம் கேட்டுக் கொண்ட போதும் தமிழக அரசு ஆணை கட்டாமல் பழைய அணையை புதுப்பிக்கும் பணியைத் துவங்கியது என்று கூறுகிறார் ஆசிரியர்.

    ReplyDelete
  3. இது குறித்து முந்தைய பதிவில் நீங்கள் எழுதியிருந்திர்கள்

    ReplyDelete
  4. //தமிழானவன் said...
    உங்களை எப்படிப் பாராட்டுவதென்று தெரியவில்லை. மிகச்சிறப்பான பணி வாழ்த்துக்கள் தொடருங்கள் //

    உங்களின் வரிகளே எனக்கு மிக பெரிய பாராட்டுத்தான், உங்களின் வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  5. //தமிழானவன் said...
    http://jamewils.blogspot.com/
    http://tamilmalarnews.blogspot.com/

    இவ்விரண்டு தளங்களிலும் உள்ள கருத்துக்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. ஒருவேளை உண்மையிலேயே ஆணை வலுவிழந்து இருந்தால் என்ன செய்வது ?// பொய்மை என்றும் நிலைக்காது , கேரளா அரசு இதுவரை , எத்தனை பொய்யான செய்திகளை பரப்பியுள்ளது

    ReplyDelete
  6. //http://jamewils.blogspot.com/2010/11/mullaperiyar-dam-permanent-threat-to.html

    இந்த இடுகையில் "Strengthening carried out during 1980s" என்ற தலைப்பின் கீழ் வரும் கடைசிப் பத்தியில் கேரளம் கேட்டுக் கொண்ட போதும் தமிழக அரசு ஆணை கட்டாமல் பழைய அணையை புதுப்பிக்கும் பணியைத் துவங்கியது என்று கூறுகிறார் ஆசிரியர்.// புதுபித்தால் பொது என்பதை கேரளா அரசும் ஏற்றுக்கொண்டது , புதிய அணை என்ற பேச்சுக்கே இடமில்லை , அணை வலுவாக இருக்கிறது

    ReplyDelete
  7. //தமிழானவன் said...
    இது குறித்து முந்தைய பதிவில் நீங்கள் எழுதியிருந்திர்கள்//

    நன்றி, தொடர்ந்து படியுங்கள் , உங்களின் நட்பு வட்டத்தில் இந்த தளத்தை பகிருங்கள் ,

    ReplyDelete
  8. முதலில் தமிழனுக்கே பல விடயம் தெரியவில்லை , இதை தெரிந்து கொண்டு , மலையாள நண்பர்களோடு வாதிடலாம்

    ReplyDelete