Wednesday, December 28, 2011

முல்லை பெரியாறு- பாகம் 16

பாகம்-15  படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம் 


போராட்ட காலம் தொடர்ச்சி 
================================

2007ஆம் ஆண்டு

பேரணி , மாநாடு , மனு கொடுத்தல் , மறியல் , என செய்து பார்த்த வைகோ , இப்போது உண்ணாவிரதம் என டிசம்பர் 7 , மதுரையில் பல அமைப்புகளை சேர்த்துக் கொண்டு , ஒரு உண்ணாநிலை அறப்போராட்டத்தை நடத்தினார்

2007ஆம் ஆண்டு

டிசம்பர் மாதம் 19ம் தேதி அன்று டெல்லிக்கு முதல் அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருந்த இரண்டு மாநில முதல்வர்களும் மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தும்படி,பிரதமர் மன்மோகன் சிங் யோசனை கூறினார்.

இதன்படி கருணாநிதியும் ,அச்சுதானந்தனும், இரண்டு மாநில பாசனத் துறை அமைச்சர்களும் கலந்து பேசினார்கள்

அப்போது,முல்லைப் பெரியாறு அணையில் நீர்க்கசிவு ஏற்படுவதாக கூறப்படுவது குறித்து உண்மையைக் கண்டறிந்திட, இரு தரப்பினருக்கும் பொதுவாக மத்திய அரசே இரு மாநிலத்தையும் சேராத பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு கணக்கெடுத்துக் கூறட்டும், தமிழ்நாட்டிற்கு அதிலே ஆட்சேபணை இல்லை என்று கருணாநிதி தெரிவிக்க

ஆனால் கேரள முதல்வர், அது குறித்து பரிசீலிப்பதாகவும், அதிகாரிகளை கலந்து கொண்டு முடிவினை தெரிவிப்பதாகவும் கூறினார். ஆனால் எந்த பரிசீலனையும் கேரள அரசினால் நடத்தப்படவில்லை;

2007ஆம் ஆண்டு

இதுவரை செலவு கணக்கு

முல்லைப் பெரியாறு அணைக்காக தமிழக அரசு இதுவரை ரூ.48.82 கோடி செலவிட்டுள்ளது

1990 முதல் 2007ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், வழக்கு தொடர்பான வக்கீல் கட்டணமாக மட்டும் ரூ.22.33 கோடி செலவாகியுள்ளது.

1980-2007 காலகட்டத்தில் அணையை பலப்படுத்துவதற்காக ரூ.18.02 கோடி செலவானது.

அணை பாதுகாப்புக்காக இதுவரை கேரள போலீசாருக்கு தமிழக அரசு ரூ.85 லட்சம் வழங்கியுள்ளது.

குத்தகைப் பணமாக 2007ம் ஆண்டு வரை ரூ.72.18 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

அணை பாதுகாப்புக்காக கடந்த 1979ல் கேரள போலீசுக்கு அளித்த தொகை ரூ.22 ஆயிரத்து 951ஆக இருந்தது. இந்த தொகை 2005ம் ஆண்டில் 22.51 லட்சமானது

2008 ஆம் ஆண்டு

இந்த ஆண்டும் முழுவது அவ்வபோது வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது , தமிழகமும் வாய்த்த மேல் வாய்த்த வாங்குகிறது , கேரளாவும் தமிழகமும் வாய்த்த மேல் வாய்த்த வாங்குகிறது ,இந்த ஆண்டும் சிறப்ப இந்த முன்னேற்றமும் இல்லை

ஒருவேளை ஈழ பிரச்சனை இருந்தால் இதை ஒத்திவைத்து விட்டார்களோ , ஈழ பிரச்சனையை தமிழக அரசு எப்படி எல்லாம் உதவியது என அனைவருக்கும் தெரியும் ,

2009 ஆம் ஆண்டு

ஜூலை 4,தமிழக, கேரள முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்தி முல்லைப் பெரியாறு அணைக்கு தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம், கேரள முதல்வர் அச்சுதானந்தன் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

(இந்த காலகட்டத்தில் தமிழக முதல்வர் என்ன செய்தார் என அனைவரும் தெரியும்.தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லாம் )

2009 ஆம் ஆண்டு

செப்டம்பர் 20,மத்திய அரசிடம் இருந்து கேரள அரசுக்கு , புதிய அணை கட்ட ஆய்வு நடத்த அனுமதி கொடுத்திருப்பதாக ஒரு செய்தி பரவுகிறது.

இதற்கு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி , அதிகார பூர்வமாக இதுவரை எந்தவிதமான கடிதமும் தரவில்லை என மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்கினார்.

உண்மை ஆய்வு நடத்த அனுமதியை கேரளா வாங்கி விட்டது.

2009 ஆம் ஆண்டு

செப்டம்பர் 30 , அன்று முல்லை பெரியாறு அணையில்  மத்திய அரசின் ஒரு தலை பட்ச போக்கை கண்டித்தும் ,புதிய அணைக்கு ஆய்வு நடத்த அனுமதி தந்த்தை கண்டித்தும் ,சென்னையில் , வைகோ ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
  
2009 ஆம் ஆண்டு

அக்டோபர் 21,முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு காங். துரோகம் செய்யாது. இதில் தமிழக விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டால் அதை எதிர்ப்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.

இதே அக்டோபர் 21, உச்ச நீதி மன்றத்தில் தமிழகம் சார்பாக புதிய அணைக்கான ஆய்வு பணியை தடை விதிக்க மனு செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம் கேரள அரசுக்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் ஆய்வுப்பணி மேற் கொள்ள அனுமதி அளித்துள்ளதை வைத்து கேரளத்தில் புதிதாக அணை கட்டப்படும் என தமிழக அரசு பயப்பட தேவையில்லை. எனவே தமிழக அரசின் கோரிக்கைப்படி கேரளாவின் ஆய்வுப் பணிக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சொல்லிவிட்டது
  
2009 ஆம் ஆண்டு

அக்டோபர் 23,அன்று ,ஏற்கனவே கேரளாவின்  சட்டத்திருத்தத்தை எதிர்த்து  நடக்கும் வழக்கு விசாரணைக்கு வந்தது,அன்று கேரளாவின் மீது கேள்விகளை வைத்த நீதிபதி

கோர்ட் அணையின் உயரம் குறித்து ஒரு நிர்ணயம் செய்தது. ஆனால் நீங்கள் 136 அடிதான் என்றீர்கள். அவர்கள் (தமிழ்நாடு) 152 அடி கேட்டார்கள். இரண்டுக்கும் இல்லாமல் 142 அடி என்று நாங்கள் சொன்னோம். ஆனால் நீங்கள் 136 அடிதான் என்று கூறி சட்டத்தை இயற்றி விட்டீர்கள். சட்லெஜ் யமுனை இணைப்புக் கால்வாய் குறித்த பஞ்சாபின் சட்டத்தைப் பார்த்தீர்களா. பிறகு கோர்ட்டின் புனிதத் தன்மை என்ன ஆவது..

                                         
                                             தொடரும்..................................

1 comment: