Thursday, December 29, 2011

முல்லை பெரியாறு- பாகம் 17

பாகம்-16  படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம் 


போராட்ட காலம் தொடர்ச்சி 
==================================

2009 ஆம் ஆண்டு

அக்டோபர் 24,கேரளாவிற்கு புதிய அணைக்கு ஆய்வு செய்ய அனுமதி தந்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்குக் கண்டனம் தெரிவித்து நவம்பர் 1ம் தேதி மதுரையில் திமுக சார்பில் மாபெரும் கூட்டம் நடைபெறும் எனவும் திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.இவர்களும் மத்திய அமைச்சரவையில் தான் இருந்தார்கள்

2009 ஆம் ஆண்டு

அக்டோபர் 24, கேரளத்தில் ஆட்சிக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அச்சுதானந்தன் இந்திய பிரமதரை 5 முறை சந்தித்து அணை உடைந்துவிடும் என்று இதனால் லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பச்சைப் பொய்யை கூறினார். அதற்காக அவர் கொடுத்த ஆதாரங்கள் எதுவும் இல்லை. என வைகோ குற்றம் சாட்டுகிறார்,

2009 ஆம் ஆண்டு
அக்டோபர் 26,பெரியாறு அணை விஷயத்தில் கருணாநிதி மத்திய அமைச்சரை எதிர்த்து மதுரையில் தி.மு.. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

ஆனால் 2 தினங்களில் அந்தர்பல்டி அடித்து தற்போது முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெறும் என்று அறிவித்தார்.

2009 ஆம் ஆண்டு

அக்டோபர் 27,முல்லைப் பெரியாறு பிரச்னை குறித்து மத்தியில் உள்ள திமுக அமைச்சர்கள் போராடவில்லை. மதுரையில் வந்து கூட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பது வேடிக்கை.

கேரளாவில் பிரபுக்கள் ஆட்சி நடக்கவில்லை. கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது. இந்தியாவுக்கே வழிகாட்டியாக நீங்கள் இருக்க வேண்டும். தண்ணீருக்காகவும், நிலத்துக்காகவும் நில பிரபுக்கள்தான் போராடுவர். நீங்கள் அப்படி இருக்க வேண்டாம் என்றார்.தா.பாண்டியன்

2009 ஆம் ஆண்டு

நவம்பர் 5,கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து இடையூறு செய்து வருவதால் அணையின் பாதுகாப்புக்கு சிஐஎஸ்எப் படையினரை நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு  கருணாநிதி கோரிக்கை விடுத்துதார்.

2009 ஆம் ஆண்டு

நவம்பர் 8,அன்று ,முல்லை பெரியாறு விவகாரத்தில் மத்திய , கேரளா , தமிழக அரசுகளின் நடவடிக்கைகளை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாகவும் , கேரளா அரசின் போக்கை கண்டித்து மதிமுக பொது செயலாளர் வைகோ , தேனியில் கண்டன பொது கூட்டம் ஓன்று நடத்து கிறார்.

2009 ஆம் ஆண்டு

நவம்பர் 14,அன்று ,முல்லை பெரியாறு அணை காக்க  மதிமுக பொது செயலாளர் வைகோ , மதுரையில் உண்ணாவிரதம்  நடத்து கிறார்.

2009 ஆம் ஆண்டு

நவம்பர் 19,அணையின் 9, 10, 17, 18வது பிளாக்குகளில் நீர்க்கசிவு இருக்கிறதாம். சுர்க்கி எனப்படும் பூச்சு இந்த இடங்களில் பெயர்ந்திருப்பதாக கேரள குழு கூறுகிறது.

இதை வைத்து அணையில் தற்போது 135.1 அடி நீர் இருப்பு இருந்தது .இந்த நிலையில் நீர்க்கசிவு ஏற்பட்டு விட்டதாக கூறி அணையின் நீர்த்தேக்க அளவை 136 அடியிலிருந்து 130 அடியாகக் குறைக்க கேரளா சதி செய்ய ஆரமித்த்து

2009 ஆம் ஆண்டு

நவம்பர் 20,இதையடுத்து உண்மை நிலை என்ன என்பதைக் கண்டறிய பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதி, நீர்க்கசிவு அளவிடும் காலரி பகுதி ஆகியவற்றை தமிழக குழு பார்வையிட்டது.

குறிப்பாக நீர்க்கசிவு அதிகம் இருப்பதாக கேரள குழு கூறிய மெயின் அணையில் உள்ள 17, 18 பிளாக்குகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பின்னர் பொதுப்பணித்துறை பொறியாளர் குழுத் தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், கேரள நிபுணர் குழு கூறுவது போல் அணைப்பகுதியில் எங்கும் நீர்க்கசிவு இல்லை. வழக்கமாக கசிவு நீர் எந்த அளவு வெளியேற வேண்டுமோ அதைவிட குறைவாகத்தான் உள்ளது.

2009 ஆம் ஆண்டு

நவம்பர் 21,கேரளா சட்ட திருத்தத்தை  செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் தமிழக அரசு வழக்கு , உச்சநீதிமன்றத்தில்  விசாரணையில் இருந்து வந்த நிலையில், திடீரென இதை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்தது. இதை ஏற்ற உச்சநீதிமன்றம் அரசியல் சாசன பெஞ்சுக்கு இந்த வழக்கை அனுப்ப தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்தது.

இதற்கு எந்த எதிர்ப்பையும் தமிழக அரசு காட்டவில்லை, இதுவரை  33 முறை திமுக அரசு வாய்தா வாங்கியது , உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு காட்டிய மெத்தனத்தால்தான் முல்லைப்பெரியாறு அணை வழக்கு 5 நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.

அரசியல் சாசன அமர்வு

இந்த நிலையில் அரசியல் சாசன பெஞ்ச்சை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தார் , நீதிபதிகள் டி.கே.ஜெயின், சுதர்சன் ரெட்டி, முகுந்தகம் சர்மா, ஆர்.எம்.லோதா, தீபக் வர்மா ஆகியோர் இந்த பெஞ்சில் இடம் பெறுவார்கள்.  இந்த பெஞ்ச் தனது முதல் விசாரணையை நவம்பர் 23ம் தேதியன்று நடத்தவும் அன்றைய தினம் விசாரணை நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யப்படும்.

2009 ஆம் ஆண்டு

 நவம்பர் 22, ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்பு அமர்வு வழக்கு ஒருகினைந்து பணிகளை செய்ய ,அப்பாதைய தமிழக  அமைச்சர் .பொன்முடி மேற்கொள்வார் என்று தமிழக அரசு தெரிவித்து.

2009 ஆம் ஆண்டு

நவம்பர் 23,அன்று முல்லை பெரியாறு வழக்குஅரசியல் சாசன அமர்வு முன்பாக வந்தது. ஆனால், வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்துவைத்து உத்தரவிட்டது.

                                               தொடரும் .............................

No comments:

Post a Comment