Tuesday, December 20, 2011

முல்லை பெரியாறு- பாகம் 9

பாகம்  எட்டு படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்,



1796 ஆம் ஆண்டு

           கடும் பஞ்சத்தில் வாடியது தமிழகத்தின் தென் பகுதிகளான மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள். 1840ஆம் வருடம் வரை தொடர்ந்தது சுமார் ஆண்டுகள் நீடித்த்து பஞ்சம்
  
1798ஆம் ஆண்டு

           இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிக்கு கொண்டு வர திட்டமிட்டார்.இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி காடுகளை அழித்து, அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை

1807 ஆம் ஆண்டு

           ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மதுரை கலெக்டர் , ஜார்ஸ்பேரிஸ், மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று பெரியாறு அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்ய மாவட்ட பொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார்

1808 ஆம் ஆண்டு

           பல மாதங்கள் ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு , நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என கார்டுவெல் அறிக்கை தந்தார்

1837 ஆம் ஆண்டு

கர்னல் பேபர் என்பவர் அணை கட்டு திட்டத்தை கையில் எடுக்கிறார் , இவர் ஆய்வு எல்லா செய்தல் வேலைக்கு ஆகாது என நினைத்து ,தண்ணீரை மண் அணை மூலம் திருப்பும்  பணிகளை தொடங்கினார் ,பணிகள் நடக்க ஆரமித்த்தும் வேலையாட்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாலும், கூலி அதிகம் கேட்டதாலும் பணி நடக்கவில்லை , இந்த முறையும் கைவிடப்பட்டது

1867 ஆம் ஆண்டு

  பெரியாற்றின் குறுக்கே மீண்டும் மண் அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான 17.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டாலான வரைவுத் திட்டம்  ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். இந்தத் திட்டத்திற்கு தலைமைப் பொறியாளராக இருந்த வாக்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இந்த அணைத் திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது

1876 ஆம் ஆண்டு

சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால், நிதி நெருக்கடியால்  இந்த அணைத்திட்டம் மேலும் காலதாமதம் ஆனது.

1882ஆம் ஆண்டு

ஆங்கிலேய அரசின் ஆணைப்படி மேஜர் ஜான் பென்னிகுயிக் என்பவர் 1882-ல் அணையைக் கட்டுவதற்கான திட்டத்தைத் தயாரித்தார்,இந்த திட்டம் தான் நிறைவேற்ற பட்டது , இத்திட்டத்தின்படி

ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும்

ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும்

அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது.

அணையை அடைத்துத் தேங்கியிருக்கும் தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும்

இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும் இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம் 109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது

மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி வரை சுரங்கம் அமைத்து

இதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.


1885ஆம் ஆண்டு

அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது.

1886ஆம் ஆண்டு

அணை கட்டப்படும் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்ததால் அதனுடன் இடம், லாபப்பங்கீடு போன்றவைகளுக்கான பேச்சு வார்த்தை நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது

இந்த அணை கட்டும் இடம் உண்மையிலே இந்த இடம் உண்மையிலே , சேரநாட்டின் ஒரு பகுதியாக இருந்த  பூன்சாரு (தமிழ் )சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதியாகும் , இதனாலே குழம்பி போன திருவாங்கூர் சமஸ்தானம் பின் பணம் கிடைகிறேதே யார் இடமாக இருந்தால் என்ன என ஒப்பந்தத்திற்கு வந்துள்ளது

இந்த ஒப்பந்த்த்தில் இருந்த அம்சங்கள்

ஒப்பந்தகாலம் 999 வருடம்

அணையின் 155 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கும் பகுதியான 8000 ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் அணைகட்டுவதற்கும் பிற பணிகளுக்குமாக 100 ஏக்கர் சேர்த்து 8100 ஏக்கருக்கு உரிமை

இந்த நிலபரப்பின் வழியாக வரக்கூடிய அனைத்து நீருக்கும் உரிமை


அணை மற்றும் அதை சார்ந்த பராமரிப்பு வேலைகள் செய்ய உரிமை

இந்த நீர் தேக்க பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை


நீர்தேக்கத்தில் உள்ள கல் , மரம் , செடி , கொடிகள், மற்றும் இங்கு கிடைக்கும் தாது பொருள்களை பயன்படித்தி கொள்ளும் உரிமை

வேலை ஆட்கள் , அதிகாரிகள் , அவர்களை சார்ந்த பெருள்கள் எடுத்து செல்லவும் சென்று வரவும் உரிமை

இந்த ஏழு அம்சத்திற்கு ஒப்பந்தத்திற்கு  பலனாக  8100 ஏக்கருக்கு குத்தகைப் பணம்,ஏக்கருக்கு ரூபாய் 5 விதம் சென்னை மாகாண அரசு வருட வருடம்   செலுத்த வேண்டும்

1887ஆம் ஆண்டு

 செப்டம்பர் மாதத்தில் அணை கட்டுமான பணிகள்  பணி துவங்கப்பட்டது.

1893ஆம் ஆண்டு 

60 அடி உயரத்திற்கு கட்டப்பட்டது , இந்த காலகட்டத்தில் நீதி நெருக்கடியால் அணை கட்டுவதை இருத்துவதாக அரசு சொன்னது , ஆனால் கர்னல் பென்னி குக் தனது சொந்த பணத்தால் அணை கட்டு பணியை தொடர்ந்தார்

1894ஆம் ஆண்டு

 94 அடி உயரத்திற்கும் கட்டப்பட்டது

1895ஆம் ஆண்டு

155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையை சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் பிரபு  10.10.1895   திறந்து வைத்தார்

1895ஆம் ஆண்டு

சென்னை மாகாண அரசு குத்தகைத் தொகை கொடுக்க ஆரமித்தது

இப்படியாக வெள்ளையார்களின் உதவியாலும் தமிழனின் உழைப்பாலும் உயிர்களும் கொடுத்து உருவானது இந்த அணை 






                                                                                                      தொடரும் ....................................

No comments:

Post a Comment