Saturday, December 3, 2011

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 


ஆரம்பத்தில் திமுகவில் இருந்த வை. கோபால்சாமி , பிறகு வைகோ என்ற  பெயரால்  அழைக்க , இவர் 1989  காலகட்டத்தில் ஈழத்திற்கு எந்த வித அரசாங்க அனுமதியுமில்லாமல் சென்று விடுதலை புலிகளுடன் பல நாள் தங்கி போராட்ட தன்மையை நேரில் அறிந்து வந்தார் , எம் ஜி ஆர் இல்லாத இடைவெளியை நிரப்புவார் என கருணாநிதி புரிந்து கொண்டார் , எம் ஜி ஆர் யை வெளியேற்றிய கருணாநிதி இவரை விட்டுவைப்பரோ , 


1991 நவம்பர் - 1993 அக்டோபர் மாதம் வரை கருணாநிதி பல நெருக்கடிகளை வைகோவிற்கு கொடுத்து  பார்த்தார் , அப்படியாவது வெளியேறுவர் என நினைத்தார் , ஆனால் கடைசிவரை வெளியேற மாட்டேன்  என்று இருந்த வைகோவை ,கடைசியில் கொலைபழி சுமத்தி கட்சியை விட்டு வெளியேற்றி விட்டார் , வைகோவும் போட்டி திமுக , பொதுகுழு என செய்துபார்த்தார் கருணாநிதி இடம் எடுபடவில்லை , தனது ஆதரவலரோடு . 1994 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் நாள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக ) என தனிகட்சி தொடங்கினார் ,  , திமுகவிற்கும் , இவர்களுக்கும் கொள்ளை அளவில் வேறுபாடில்லை , வாரிசு அரசியலை எதிர்ப்பது என திமுகவில்  சில எழுத படாத கொள்ளைகளை மாற்றி அமைத்தார்கள் என சொல்லலாம் , நல்ல படித்தவர் , நல்ல பேச்சாளர் , நல்ல மனிதர் என பெயரை  பெற்றவர் வைகோ என அறிய படுகிறார் 


 1996 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் , மதிமுக , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மூன்றாவது அணி  அமைத்து போட்டியிட்டது, இந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது 


1996 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்ற  நாடாளுமன்றத் தேர்தல் மதிமுக , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மூன்றாவது அணி  அமைத்து போட்டியிட்டது, இந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது 


1998 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜகமதிமுகபாமகசுப்பிரமணியன் சாமியின் ஜனதா கட்சி,வாழப்பாடி ராமமூர்த்தியின்,தமிழக ராஜீவ் காங்கிரசு ,போட்டியிட்டது ,மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது 


1999 ஆம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில்  தேசிய ஜனநாயக கூட்டணியில் திமுக,பாஜகமதிமுகபாமக, தமிழக ராஜீவ் காங்கிரசு போட்டியிட்டது இந்த முறை நான்கு தொகுதியில் வெற்றி பெற்றது ,மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றது 


2001 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ,மதிமுக  மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தாலும் , திமுக , மதிமுக தொகுதி பங்கீட்டு பிரச்சனையால் மாநிலத்தில் கூட்டணியில் வெளியேறி தனித்து போட்டியிட்டது , இந்தமுறையும் தோல்வியை தழுவியது 


2002  ஆம் ஆண்டு இந்த கட்சியின் பொது செயலாளர் விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதால் ,பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையிலிருந்தார்.


2004 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடை பெற்ற  நாடாளுமன்றத் தேர்தல் ,திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு போகும் பொது இவர்களையும் (மதிமுக ) சேர்த்து கொண்டு , காங்கிரஸ் கூட்டணியில் திமுக , மதிமுக , பாமக ,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய கம்யூனிஸ்ட் , போன்ற கட்சிகளுடன் இருந்த கூட்டணியில் போட்டியிட்ட நான்கு  தொகுதியில் வெற்றி பெற்றது , இந்த முறை அமைச்சரவையில் பங்கேற்கவில்லை , 


2006 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் , மீண்டும் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பிரச்சனையால் வெளியேறிய மதிமுக , இந்தமுறை தனித்து போட்டியிடவில்லை , மாறாக அதிமுக உடன் கூட்டணி வைத்தது , மிக பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை 


2009 ஆம் ஆண்டு மே மாதம்  நடை பெற்ற  நாடாளுமன்றத் தேர்தல்  இந்தமுறை அதிமுக கூட்டணியிலே தொடர்ந்த மதிமுக , இந்த கூட்டணியில் மேலும் பாமக , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் போட்டியிட்டு ஒரே  ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது , ஈழ பிரச்சனை இவர்களுக்கு கைகுடுக்கும் என நினைத்த பொது அது பொய்த்து போனது 


2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 13   நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் , கடைசிவரை அதிமுக கூட்டணியில் இருந்த இவர்களுக்கு தொகுதி பங்கீடு செய்யவில்லை , மறைமுகமாக் மதிமுகவை அதிமுக வெளியேற்றிவிட்டது , இந்த முறை தனித்து , அல்லது வேறு கூட்டணி அமைத்து போட்டியிட போதுமான காலம் இல்லை என்பதை தெரிந்து கொண்டு தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்தது மதிமுக , ஒரு அரசியல் கட்சி தேர்தலை புறக்கணித்தது தமிழகத்தில் இது இரண்டாவது முறை , முதல் முறை அண்ணா தலைமையில் திமுக 1952  ல் தேர்தலை புறக்கணித்தது 


18 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கட்சி தமிழகத்தில் இருந்தாலும் , எந்த ஒரு ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றவில்லை , ஆனாலும் தொடர்ந்து இயங்குகிறது , ஒரு மாற்று சக்தியாக வரும் என நினைத்த பொது அரசியல் கூட்டணி குழப்பங்களின் நடுவிலே மாட்டி கொண்டு தவித்தவர்கள் இவர்கள் தான் , பெரிய சினிமா பின்னணியோ , பணபலமோ , ஏன் ஊடக பலமோ இல்லாமல் கட்சி ஓடுகிறது , பெரிய கட்சிகளே  கூட்டணியை நம்பி களம் காணும் பொது இவர்கள் தான் என்ன செய்வார்கள் , என்ன நடந்தாலும் சரி ஈழ பிரச்சனையில் மாறவே மாட்டோம் என இருப்பவர்கள் இவர்கள் 


 இப்போது தனித்து செயல்பட போவதாக மதிமுக அறிவித்துள்ளது , நடப்பு அரசியல் நிலவரங்களை பார்க்கும் பொது விரிவாக பார்ப்போமே , 


பின் குறிப்பு:- சில கேட்டுள்ளனர் , ஏன் காங்கிரஸ் ,  கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றி எழுதவில்லை என , முதலில் மாநிலகட்சிகளை  பார்ப்போம்  , பின் தேசிய கட்சிகளை பார்க்கும் பொது இவர்கள் வருவார்கள்











No comments:

Post a Comment