Tuesday, February 28, 2012

நாம் யார் -19

பாகம்-18 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

தொழிற்குலங்களும் தொழில்களும்

தொல்காப்பியம் சொல்லும் தொழில்கள் சார்ந்த குலங்களும்.

அடியோர் -அடித்தொழில் செய்பவர், அடிமைகள்

அந்தணர் -துறவி வாழ்க்கை வாழ்வார்.

அரசர் -நாட்டை ஆழ்பவர்

அறிவர் -முக்கால அறிவினர், முற்காணியர் (Prophets)

ஆயர் -ஆநிரை மேய்ப்போர், ஆடுமாடு மேய்க்கும் இடையர்.

இளையர்-வேலைக்காரர்.

ஏரோர் -உழவர்.

ஐயர் -முனிவர்.

செவிலி-அரசர் ,செல்வர் முதலிய பெருமக்கள் பிள்ளைகளின் வளர்ப்புத்தாய்.

கூத்தர் -கூத்தாடுபவர், நடஞ்செய்பவர், நாடக நடிகர்.

துடியர் -உடுக்கை யடிப்பவர்.

தேரோர்-தேர்ப்பாகர்.

படைஞர்-படைமறவர்.

பரத்தையர்-விலைமகளிர், பொதுமகளிர்.

பாகர் -குதிரைப்பாகர் (வாதுவர்), யானைப் பாகர்.

பாங்கன் -அரசரின் அகப்பொருளொழுக்கத் தோழன்.

பாங்கி -அரசியரின் அகப்பொருளொழுக்கத் தோழி.

பாணர்-  இசைப்பாணர், குழற்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் ஆகிய            இசைத் தொழிலார்

பார்ப்பார்-ஆசிரியர், புலவர், உவச்சர், குருக்கள் முதலிய இல்லறத்தாரான கல்வித் தொழிலார்.

பொருநர்-ஏர்க்களம் பாடுநரும் போர்க்களம் பாடுநரும்.

மறவர்-போருங் கொள்ளையுமாகிய மறத்தொழில் புரியும் பாலைவாணர், படைமறவர்.

வாணிகர்-சில்லறையாகவும் மொத்தமாகவும் பண்ட மாற்றுச் செய்யும் நிலவாணிகரும், கடல் கடந்து வெளிநாட்டொடு வணிகஞ் செய்யும் நீர்வாணிகரும்.

விரிச்சி -விரிச்சி (oracle) கூறுபவர். விள்- விடு - விடிச்சி - விரிச்சி = தெய்வத்தினிடமிருந்து மறைவான செய்திகளை அறிந்து வெளிப்படுத்துதல்.

வினைவலர்-ஏவிய தொழில் செய்வதில் வல்லவர்.

விறலி-விறல்(சத்துவம்)பட ஆடும் பாண்மகள்.

வேட்டுவர்-வேட்டைத் தொழில் செய்யும் குறிஞ்சி, முல்லை பாலைவாணர்.

வேந்தர் -சேரசோழபாண்டியர்.

வேயர் -ஒற்றர்.

வேலன்- முருகன் என்னும் தெய்வமேறி யாடுபவன்.

வேளாளர்-உழுதுண்போரும் உழுவித்துண்போரும்.

இந்த மாதிரி பிரிவுகளாக தொல்காப்பியார் சொல்லிவைக்க நம்மவர்கள் பிற்காலத்தில் சாதி பெயர்களாக மாற்றி விட்டானார்.

தொல்காப்பியர் காலத் தமிழக எல்லை

வடக்கில் வேங்கட மலையும்(இன்றைய திருப்பதி மலை அல்ல, ஆந்திராவின் வட எல்லையில் உள்ள விந்திய மலைத்தொடர் தான் இந்த வேங்கடம் , ஏன்னெனில் எல்லை என்பது ஒரு தொடராக இருந்திருக்க வேண்டும்) தெற்கில்குமரியாறும் கிழக்கில் வங்கக் கடலும்தெளிவாய்த் தெரிந்த எல்லைகளாம். மேற்கில் எதுஎல்லையெனின், அது குடமலைத் தொடரே.அக்காலத்தில் சேரநாடு திருச்சிராப்பள்ளிமாவட்டக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு,பெரும்பாலும் குடமலைக்குக் கிழக்கேயே இருந்தது.அம் மலைத்தொடருக்கு மேற்கில் இருந்த நிலம், மிகவொடுங்கித் துறைநகர்களுக்கன்றி ஒரு நாட்டுமக்கள் அனைவரும் வசிக்கத்தக்க பரப்புள்ளதாயிருந்த தில்லை. பிற்காலத்திலேயேமேல்கரை நிலப்பகுதி விரிவடைந்ததாகத்தெரிகின்றது.(இப்படிதான் இன்றைய கேரளா வந்திருக்கும் போல )

மூன்று ஐந்தானது 

சேர, சோழ , பாண்டியர் என இருந்த மூவேந்தர்கள் , தொல்காப்பியருக்குப்பின் ஆரியச் சூழ்ச்சியாலும் தன்னலப் பற்றாலும்மூவேந்தரிடையும் அடிக்கடி போர் மூண்டதனாலும்,துணையரசரும் குறுநிலமன்னரும் தம் வேந்தர்க்கடங்காது முடிசூடி முழுவுரிமை யரசரானதனாலும்,சோழநாட்டின் வடபகுதி தொண்டை நாடென்றும்,சேரநாட்டின் கீழ்ப்பகுதி கொங்கு நாடென்றும் பிரிந்து போயின.

தொண்டைநாடு

தொண்டைநாடுஆர்க்காடுபோல் நிலைத்திணையாற் பெயர்பெற்றதாகத் தெரிகின்றது. தொண்டை என்பதுகோவைக் கொடியையும் ஆதொண்டையையும் குறிக்கும்.ஆதொண்டை என்பது காற்றோட்டிச் செடிக்கும்காற்றோட்டிக் கொடிக்கும் பொதுப்பெயர். இம்மூன்றனுள் ஒன்று மிகுந்திருந்த நிலப்பகுதிதொண்டைநாடெனப் பெயர் பெற்றது.

திரையன் என்பதுநெய்தல்நிலத் தலைவன் பெயர். ஆர்க்காடு, செங்கழுநீர்ப்பட்டு,  நெல்லூர் ஆகிய மும்மாவட்டப் பகுதிகளைக் கொண்டது தொண்டைநாடு.ஒருகால் நெய்தல் நிலச் சிறப்புப்பற்றி, அந்நாட்டரசன் திரையன் எனப் பெயர்கொண்டிருக்கலாம்.

கொங்குநாடு

கொங்கு என்பது மணம், பூந்தாது, தேன்,கள், கருஞ்சுரை, சொங்கு (உமி அல்லது புறத்தோல்),குவிவு என எண் பொருள்படும் பலபொரு ளொருசொல்.கொங்குநாட்டில் தேன் மிகுதியாக அல்லதுசிறந்ததாகக் கிடைப்பதால், அந் நாடுகொங்குநாடெனப்பட்டது என்று பலர் கூறுவர். தேன்கொங்குநாட்டிற்கே சிறப்பாக வுரிய தன்று.சோலைகள், சிறப்பாக இயற்கைச் சோலைகள் உள்ளஇடமெல்லாம் தேன்கூடு கட்டப்படும். அத்தகையசோலைகளாற் போர்க்கப் பட்டிருப்பவைபெருமலைகள் அல்லது உயர்மலைத்தொடர்கள்.கொங்குநாட்டு மலைகளிற் போன்றே பிறநாட்டுமலைகளிலும் தேன் கூடு கட்டும்.

கொங்குநாட்டின் பண்டைக் காலப்பரப்பைப் பலர் சரியாக அறியவில்லை. குடகமும்எருமையூர் (மைசூர்) நாடும் சேலங் கோவைமாவட்டங்களும் சேர்ந்ததே முதற்காலக்கொங்குநாடாம். அதில் உடல்போல் மிகுந்திருந்தது எருமையூர் நாடே. மூவேந்தர் நாடுகளுள்ளும் உயர்ந்துகுவிந்திருக்கும் நிலப்பகுதி எருமையூர் நாடென்பதை,புறணிப் படத்தையும் (relief map) மட்டக்கோட்டுப் படத்தையும் (contourmap) பார்த்துத் தெளிக. சேரநாட்டின் கீழைப் பகுதி, மலைகளாலும் உயர்நிலமட்டத்தாலும் குவிந்திருப் பதனாலேயே கொங்குநாடெனப்பட்டது.

கொங்குநாடு பிற்காலத்திற்குடகொங்கு குணகொங்கு என இரண்டாகப் பிரிந்தது.பின்னர்க் குணகொங்கும் வடகொங்கு தென்கொங்குஎன இரண்டாகப் பிரிந்தது. எருமையூர் நாட்டின்மேற்பகுதி குடகொங்கு; குடகப் பகுதியே முதற்காலக்குடகொங்காகும். அதன் கீழ்ப்பகுதியும் சேலங் கோவை மாவட்டங்களும் குணகொங்கு, அது இரண்டாகப்பிரிந்தபின், எருமையூர் நாட்டின் கீழ்ப்பகுதிவடகொங்கு; சேலங் கோவை மாவட்டங்கள்தென்கொங்கு. வடகொங்கின் தென்பகுதி கங்கநாடெனமாறிற்று.

இன்று கொங்கு நாடெனப்படுவது சேலங்கோவை மாவட்ட நிலப்பகுதியே. அதுவே தென்கொங்குவடகொங்கு மேல்கொங்கு (மீகொங்கு) என மூன்றாகப்பிரிந்தும் உள்ளது.

கொங்குநாடு தொடர்ந்த போர்நிகழ்ச்சியாற் செங்களமாகி அமைதிகுலைந்ததனால், சேரன் தன் தலைநகரைக்கருவூரினின்று 


                                                                                                                          தொடரும்...................

1 comment:

  1. கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

    மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,045,801.25 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

    மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html

    ReplyDelete