Thursday, February 16, 2012

நாம் யார் -11

பாகம்-10 படிக்காதவர்கள் ,படிக்க  இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

காளை அடக்குதல் 

ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்த உடன் , ஒரு சேங்கன்று ஒதுக்கப்படும்,அக்கன்றுகளை,வேலையிற் பழக்காதும் விதையடிக்காதும் சிறந்தவூட்டங் கொடுத்து வளர்த்து வந்தனர். அவைகொழுத்துப் பருத்து, காளைப் பருவத்தில், கடைந்தெடுத்த கருங்காலித் தூண்கள் போன்ற கால்களுடனும், உருண்டு திரண்ட உடலுடனும், மதர்த்துச்சிவந்த கண்களுடனும்,  கண்டார் அஞ்சும்கடுந்தோற்றத்தை அடைந்தன.

இந்த காளைகளை ஆண்டுதோறும்,பூப்படைந்து மணத்திற் கேற்ற கன்னியர்க்குரிய காளைகளை யெல்லாம், கொம்பு திருத்திக் கூராக்கி,ஒரு குறித்த நன்னாளில், அழகாகச் சுவடிக்கப்பட்டஒரு தொழுவத்திற்குள் அடைத்து, ஒவ்வொரு குமரியையும் மணக்க விரும்பும் குமரர் , அந்தந்த குமரிக்குரிய காளையைத் தனிப்படப்பிடித்தடக்கி நிறுத்துமாறு, அவற்றைத் திறந்துவிட்டனர்.

ஏறுதழுவுங் குமரர்பலர் எதிர்நின்று கொம்பைப் பற்றியும்,அள்ளையிற் பாய்ந்து கழுத்தைத் தழுவியும்,பின்சென்று காலை வாரியும், பிறவாறும், தாம்குறித்த காளையை அடக்கிநிறுத்த இயன்றவரைமுயன்றனர். சிலர் கண்ட அளவில் அஞ்சிநின்றுவிட்டனர். சிலர் மறு விழாவிற்குக் கடத்திவைத்தனர். சிலர் சிறு புண்ணொடு திரும்பினர்.சிலர் விழுப்புண்பட்டனர். சிலர் குடல் சரிந்துஅங்கேயே மாண்டனர். சிலர் வென்றனர். வென்றவர்தம் விலைமதிப்பில்லாப் பரிசைப் பெற்றதோடு , காளைக்கு உரிய பெண்ணை மணந்தும் கொண்டனர்.

மதுரை உருவாக்கம் 

ஏற்கனனே குமரி கண்டத்தில் இருந்த தலைக்கழகம் கண்ட மதுரை , கால் கோள் வந்து அழிந்து போனது , அங்கே இருந்து இடம் பெயர்ந்த மக்கள் , வடக்கே வந்து , அந்த மதுரையின் நினைவாக இங்கே   தொழுநை யாற்றங்கரையடுத்து (வைகை ) ஒருநகரமைத்து அதற்கு மதுரை என பெயருட்டுள்ளனர், (இன்றைய மதுரை தான் இது ) , இதை வட மதுரை என்றும்,  கடலில் மூழ்கி போனதை தென் மதுரை என்று குறிப்பிட்டுள்ளர்கள்.

இரண்டாம் கடல்கோள்

தமிழிலக்கியத்திற் குறிக்கப்பட்டுள்ள இரண்டாம் கடல்கோள், கி.மு.2500-ல் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அக்கடல்கோளால், நாகநாடு என்று சொல்லப்படும் கீழ்த்திசை நிலப்பகுதி, ஏறத்தாழ 1200 கல் தொலைவுபரப்புள்ளது மூழ்கிப்போயிற்று.

கதவபுரமும் குமரியாற்றிற்குத்தென்பால் நிலமும் மூழ்கிப் போயின. இலங்கை இந்தியாவினின்றும் பிரிந்துவிட்டது. 

வங்கக் கடல் தோன்றுமுன் அங்கிருந்தநிலப்பரப்பில் வாழ்ந்த மாந்தர், கீழக்கு கரைநெடுகலும் குடியேறியதனால், அவர் சேர்ந்த வூர்கள் நாகர்கோவில், நாகூர், நாகப்பட்டினம், நாகபுரிஎனப் பெயர் பெற்றன.

முதற் கடல்கோட்குப்பின் நிகழ்ந்ததுபோன்றே, இரண்டாம் கடல்கோட்குப் பின்னும்,தென்னாட்டு மக்கள் வடதிசையும் வடநாட்டு மக்கள்வடமேலைத் திசையும் பரவிச் சென்றனர்.கடல்கோட் செய்தி பாபிலோனையும் எட்டிற்று.

வட நாட்டில் தமிழன் 

விந்திய மலைகளையும் தாண்டி பரவி இருந்தான் தமிழன் , அந்த கால கட்டத்தில் அங்கே மக்கள் நெருக்கம் குறைவு, தமிழர்கள் அங்கே இருந்ததற்கு எடுத்துகாட்டுகள் 

அங்கு சென்ற தமிழன் ஊர்ப்பெயர்கள் பெரும்பாலும் ஊர், நகர், புரம், புரி எனத் தமிழீறே பெற்றன.புரம் என்பது கோபுரமுள்ள நகரையும் புரிஎன்பது கோட்டையுள்ள நகரையுங் குறித்து,பின்னர்ப் பொது வீறுகளாயின.                புரம் = உயர்வு,உயர்ந்த கட்டடம். புரி=வளைவு, வளைந்த (சூழ்ந்த)கோட்டை. பாதிரிபுரம் என்பது பிற்காலத்திற்பாடலிபுரம் எனத் திரிந்தது.

காளிவணக்கங்கொண்ட தமிழர் சிலர், வங்கத்திற் குடியேறிக்கங்கைக் கரையிற் காளிகோவிலுடன் அமைத்த நகரேகாளிக்கோட்டம். காளி (பாலைநிலத்) தமிழ்த்தெய்வம். காளி கோட்டம் என்னும் இரண்டும் தூயதென்சொல். காளிக்கோட்டம் என்பது, இன்றுஆங்கிலச்சொல் வழியாகக் கல்கத்தா எனத்திரிந்துள்ளது.

 கங்கைக் கயவாய் அடுத்துத்'தம்லுக்' அல்லது 'தமுல்க்' என்னும் பெயர்கொண்டுள்ள துறைநகர்ப் பெயர், தமிழகம் என்னும்சொல்லின் திரிபாயிருக்கலாம். 'தமலித்தி' என்றுபாலிமொழியிலும், 'தம்ரலப்தி' என்றுசமற்கிருதத்திலும் வழங்கும் இடப்பெயர்,தமிழ்நத்தி அல்லது தமிழுலாத்தி என்பது போன்றதென்சொல்லின் திரிபா யிருக்கலாம்.

                                                                                               தொடரும்................................

No comments:

Post a Comment