Thursday, February 9, 2012

நாம் யார் -4

பாகம்-3 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.


கூட்டு வாழ்க்கை 


பல ஆயிரம் ஆண்டுகளாக தனித்தனியே திரிந்த மாந்தன்கள் ,கி.மு. 50,000 க்கு பிறகு தனக்கான மொழி பரிமாற்றம் வந்த உடன் , ஒருவருக்கு ஒருவர் தகவல்களை பரிமாறி கொண்டானர் , இதன் விளைவாக ஒருவருக்கு ஒருவர் இணையும் தன்மை ஏற்பட்டது , கூட்டம் கூட்டமாக வாழ ஆரமித்தான் ,


எப்படி கூடி வந்தான் மாந்தன் , மிருங்கலோடு மிருகமாக திரிந்தான் , கொடிய மிருங்கள் தன்னை காக்கவும் , எதிரியை தாக்கவும் ஏதொரு உடல் உறுப்பு பயன்படுத்தியது , இவனிடம் ஒன்றுமில்லை , மிருகங்களை கண்டு அஞ்சி ஓடினான் .அது வரை உணவிற்கு பழங்களை , தாவர உணவுகளை உண்டு வாழ்ந்து வந்தான் , தாவரமும் இவனை தாக்கி இருந்தால் , அதை கண்டும் ஒடி இருப்பான் , அழிந்து போயிருப்பான் .

பின் கூட்டமாக வாழ்ந்தால் தான் தங்களை காத்து கொள்ள முடிவும் , ஒருவருக்கு ஒருவர் ஆப்பத்து கள் வருவதை தெரிந்து கொள்ள முடியும் என கூட்டம் கூட்டமாக சேர்ந்து கொண்டான்.

தண்ணீரை தேடி 

பசிக்கு தாவரங்கள் உதவின. தாகத்திற்கு ஆற்று நீர் உதவின , மாந்தன் கூட்டம் பெருக பெருக நீரின் அவசியம் அறிந்து நீர் நிலைகளை நோக்கி கூட்டம் கூட்டமாக பல திசைகளில் பயணிக்க ஆரமித்தான் , அவ்வாறு இன்றைய ஆப்பிரிக்க வை நோக்கியும் , தென் இந்தியாவின் விந்திய மலை வரையும் பரவ ஆரமித்தார்கள் , ஆற்று படுகைகளில் நீர் தேவையை தீர்த்து கொண்டு மலை குகைகளில் வாழ ஆரமித்தான் .

கூடி வாழ்ந்தவன்  கூடுகட்ட ஆரமித்தான் 

நீரின் தேவை அதிகமாக ,(ஒருவேளை தட்டுபாடு , கூட்ட நெரிசல் ஏற்பட்டு இருக்குமோ ), அதிகமாக ,ஆற்று ஓரமே தனது இருப்பிடத்தை மாற்றி கொண்டன் , வீடுகளை அமைக்கும் முறையை மலை குகைகளை பார்த்தும் , வீடு கட்ட தேவையான பொருள்களை , மண்ணின் பயன்பாட்டை கரையான் புற்றுகளை பார்த்தும் , குச்சிகள் , ஓலைகள் பயன்பாட்டை பறவைகளை பார்த்தும் தெரிந்து கொண்டு , தனக்கான இருப்பிடத்தை அமைத்து கொண்டான் .

எங்கும் பரவிய மனிதன் 

கூட்டம் கூட்டமாக பிரிந்து பிரிந்து பல பகுதிகளை நோக்கி பயண பட்டார்கள் ,இன்றைய கேரளாவை நோக்கியும் , ஆந்திராவை நோக்கியும் நீர் நிலைகளை தேடி சென்று , அங்கு அங்கே குடிகளை அமைத்து வாழ ஆரமித்தான் , விந்திய மலைகளையும் தாண்டி தண்ணீருக்காக வடக்கே போனான் , விந்திய மலைக்கு தெற்கே இருந்த மக்களின் நெருக்கம் , வடக்கே இல்லை , இங்கு எண்ணிக்கையில் அதிகமாக இருந்தான் 

மொழி மாறிய விதம்

இதுவரை ஒரு மொழியாக பேசி வந்தவன் , அந்த , அந்த இடங்களில் இருந்த தட்பவெப்ப நிலை , சூழலால் , அவனின் குரல் , உடல்வாகு , பல்லின் ஈறு வளர்ச்சி போன்றவற்றால் , ஒலிகள் மாறி , மாறி மொழி பேச ஆரமித்தான் , இன்றைய சூழலில் கோவை தமிழ் , சென்னை தமிழ் , மதுரை தமிழ் , ஈழ தமிழ் போல , அன்றே மொழி ஒலிகளால் மாறியது , வார்த்தைகளையும் தனக்கு தகுந்தால் போல் மாற்றி பேச ஆரமித்தான்.


                                                                                                தொடரும்................................

ஒரு அழைப்பை பதிவு செய்து
ஒன்றுமையை வெளிபடுத்துங்கள் 
                                                                                                    


            



No comments:

Post a Comment