Monday, February 13, 2012

நாம் யார் -8

பாகம்-7 படிக்காதவர்கள் ,படிக்க  இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

தலைக்கழகம்

ஊர்தலைவர்களை எல்லாம் ஒருகினைத்து , நாட்டுக்கு ஒருவன் தலைவன் ஆனான் , மூவ்வேந்தர்களில் முதல் வேந்தன் பாண்டிய மன்னனின் ஆட்சி செய்தான் , இதன் பிறகே சேர , சோழ என மற்றவர்கள் தோன்றினார்.

முத்தமிழும் ஒருங்கே கற்ற புலவர்நூற்றுக்கணக்கினர் தோன்றியதனால், பழையஇலக்கியத்தை ஆராயவும் புதிய இலக்கியத்தைஇயற்றவும், பாண்டியன் குமரி கண்டத்தில் பஃறுளி யாற்றங்கரைமேலிருந்த மதுரையென்னும் தன் தலைநகரில் ஒருகழகம் நிறுவினான்.இதுவே தலைக்கழகம் என போற்றபட்டது.

அதன் உறுப்பினர் 549 பேர் இருந்துள்ளார்கள் , மொத்த ஆண்டுகள் -4449 ,

இதை நடத்திய பாண்டிய மன்னர்கள் காய்சினவழுதி முதல் கடுங்கோன் வரை மொத்த மன்னர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 86 பேர் ஆட்சியில் இந்த தலைக்கழகம் தொடர்ந்து நடைபெற்று உள்ளது ,இந்த கழகத்தின் தொடக்கம் சுமார் -கி.மு 10,000 ஆண்டுகள்.இந்த தலைகழக்கம் மூலம் இயற்ற பட்ட பல படைப்பு கிடைக்கவில்லை.

ஐந்திணைப்பெயர்கள்

முத்தமிழும் , இயக்கியமும் , நகரியமும் வளர்த்த தமிழன் நிலங்களின் நிலையை ஐந்து கூறாக பிரித்தான்,குறிஞ்சி , முல்லை, பாலை ,மருதம், நெய்தல் என ஐந்து பகுப்பாக பிரித்தான்.

குறிஞ்சி

குறி = அடையாளம், காலம், அளவு, தடவை.

குறி - குறிஞ்சி = ஒரு பல்லாண்டுக்காலஅளவைக் குறிக்கும் பூ, அப் பூப்பூக்கும் செடி, அச்செடி இயற்கையாக வளரும் மலை, மலையும் மலை சார்ந்தஇடமும், மலைநாடு.

கோடைக்கானல் மலையிலும்நீலமலையிலும் உள்ள குறிஞ்சிச் செடிகள்,12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கின்றன. நீலமலையிலுள்ள தொதுவர் (தோடர்), குறிஞ்சி பூக்குந்தடவையைக் கொண்டே தம் வயதை கணக்கிட்டுவந்தனர். குமரிநாட்டுக் குறிஞ்சிநில வாணரும்இந்த முறையை செய்திருத்தல் வேண்டும்.

ஆங்கிலேயர், இந்தியா முழுதுமுள்ள குறிஞ்சிச்செடிகளை யெல்லாம் ஆராய்ந்து குறிஞ்சிவகைகள் மொத்தம் 46 என்றும், அவை பூக்கும்காலவிடையீடு ஓராண்டு முதல் 16 ஆண்டுவரை பல்வேறுஅளவுபட்டதென்றும், கண்டறிந்திருக்கின்றனர்.குமரிநாட்டில் எத்தனைவகை குறிஞ்சி இருந்தது என தெரியவில்லை.

முல்லை

முல் - முன் - முனை = கூர்மை, கடலிற்குள்நீண்டுசெல்லும் கூரிய நிலப் பகுதி.

முல்-முல்லை=கூரிய அரும்புவகை, அஃதுள்ளகொடி, அக் கொடி வளரும் காடு, காடும் காடு சார்ந்தஇடம் என்பதில், முல்லையரும்பை கூர்மையைச் சிறப்பித்துள்ளது.

பாலை

பால் - பாலை = இலையிற் பாலுள்ளசெடியுங்கொடியும் மரமுமான பல்வேறு நிலைத்திணையினங்கள், அவை (முது) வேனிலில் தழைக்கும்நிலப்பகுதி, குறிஞ்சி நிலத்திற்கும் முல்லைநிலத்திற்கும் இடைப்பட்ட வறண்ட காடு, மாரியில்தழைத்தும் கோடையில் வறண்டும் இருக்கும்வன்னிலம்.

மருதம்

மல் = வளம்.

மல் - மல்லை = வளம்.

மல் - (மர்)-மருது=ஆற்றங்கரையும்பொய்கைக்கரையும் போன்ற நீர்வளம் மிக்கநிலத்தில் வளரும் மரம்.

மருது - மருதம் = பெரிய மருது, மருது, மருதமரம் வளரும் நீர்வள நிலம், வயலும் வயல் சார்ந்தஇடமும், நீர்வளமும் நிலவளமும் மிக்க அகநாடு.

மருதமரம் ஆற்றையும் பொய்கையையும் வயலையுமேஅடுத்திருந்ததால் மருதம் என ஆனது.

நெய்தல்

நள்ளுதல் =அடைதல்
நள் - நளி. நளிதல் = செறிதல்.

நள் - நெள் - நெய். நெய்தல் = தொடுத்தல்,ஆடை பின்னுதல்,ஒட்டுதல்.

நெய் = ஒட்டும் பொருளாகிய உருக்கினவெண்ணெய்., வெண்ணெய், எண்ணெய்.

நெய் - நெய்தல் = நீர் வற்றியகாலத்திலும் குளத்துடன் ஒட்டியிருக்கும் செடிவகை,அச் செடி வளரும் கடற்கரை நிலம், கடலும் கடல்சார்ந்த இடமும்.

                                                                                                  தொடரும்..............................


No comments:

Post a Comment