Saturday, February 4, 2012

சட்ட சபை ! சவால் சபை !!

இன்றைய நிலையில் சட்டசபை தங்களின் தனிப்பட்ட சவால்கள் விடும் சபையாக மாற்றிவிட்ட ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் 

தேமுதிக உறுப்பினர் :- பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு கேள்வி கேட்கிறார்

முதல்வர் பதில் :-இதுகுறித்து பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சி கேள்வி எழுப்புவது ஒன்றும் தவறில்லையே , அதற்கு ஏற்கனவே விளக்கம் கொடுத்து விட்டும் என ஆளும்கட்சி சொல்லவிட்டது.அந்த விளக்க குறிப்புகளின் படித்து தெரிந்து கொள்ளவேண்டியது எதிர்கட்சியின் பொருப்புதனே 

தேமுதிக உறுப்பினர் :- இதை ஏன் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு செய்யவி்ல்லை.அப்போதே செய்திருக்கலாமே என்று கேட்கிறார்.

என்ன கேள்வி இது , ஏற்கனவே விளக்கம் கொடுத்தால் அந்த விளக்கத்தின் மீது கேள்வி கேட்கவேண்டியது தானே , எப்போது உயர்த்தினால் என்ன மக்களுக்கு தானே சீரமம், ஒருவேளை அப்போது உயர்த்தி இருந்தால் எதிர்கட்சி என்ன செய்து இருக்கும் , விலைவாசி உயர்வை காட்டு படுத்துவது எப்படி என எதிர்கட்சி ஆலோசனை சொல்லுவதை விட்டு விட்டு , கால கொடுவை பற்றி விவாதிப்பது யாருக்கு நன்மை.

முதல்வர் பதில் :-விலை ஏற்றத்திற்கு பின்னர் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறும் என்று ஆவேசமாக சொல்லுகிறார்.உங்களுக்குத் திராணி இருந்தால் தனித்து நின்று பாருங்கள் என்றும் விஜயகாந்த்தைப் பார்த்துக் கூறினார்.

விலைவாசி என்ன உயர்த்தினாலும் இடைதேர்தலில் ஆளும்கட்சிக்குதான் மக்கள் ஒட்டு போடவேண்டும் என்ற கட்டாயத்தை ஏன் மக்கள் மீது திணிக்க வேண்டும். உறுப்பினர் சமந்தமில்லாத கேள்வி கேட்டால் ,முதல்வரும் சம்மந்த மில்லாத பதில்தான் சொல்ல வேண்டும் என்ற நிலையை உருவாக்கி விட்டார். 

 திடீரென தனது சீட்டிலிருந்து வேகமாக எழுகிறார் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த். படு ஆவேசமாக ஆளுங்கட்சித் தரப்பைப் பார்த்து கையை உயர்த்தி ஏதோ பேசுகிறார். அவரது கண்களில் கோபம் கொப்புளிக்கிறது. பின்னர் தனது ஸ்டைலில் உதட்டை மடித்து மிரட்டுவது போல பேசுகிறார். நாடி நரம்பு புடைக்க கோபமாக பேசுகிறார்.ஏன் நீங்க அங்கே  தோற்கவில்லையா , இங்கே தொர்கவில்லையா என பேச்சை தொடர்கிறார் 

இதற்கு பிறகு நடந்த கூச்சல் குழப்பத்தால் தேமுதிக உறுப்பினர்கள் வெளியேற்ற படுகிறார்கள்.

அவை அடக்கத்தை கடைபிடிக்காத எதிர்கட்சி , தனிப்பட்ட சவால்கள் விடும் ஆளும்கட்சி என்ற காட்சிகள் நிறைவு பெற்று எதிர்கட்சி தலைவர் பத்து நாள் இடைநீக்கம் செய்ய படுகிறார் . தமிழக மக்களில் மீது கத்தி போல பிரச்சனைகளை வைத்து கொண்டு மக்கள் பிரதிநிதிகள் அது பற்றி கவலை கொள்ளாமல் , இவர்களின் தனிபட்ட சவால்கள் விட வேறு இடமில்லையா 

ஒரு பக்கம் முல்லை பெரியாறு ,மறுபக்கம் மீனவர் படுகொலை , தெற்கே கூடங்குளத்தில் 150 நாட்களுக்கு மேலாக போராடும் மக்கள் , வடக்கே புயலால் மொத்தமாக வாழ்வாதாரங்களை இழந்து விட்டு இருக்கும் மக்கள் என பிரச்சனைகள் பற்றி பேசாமல் தீர்வுகளை பற்றி பேசமால் , இவர்களின் தனிப்பட விரோதங்களை பேசவா மக்களை இவர்களை தேர்ந்தெடுத்தார்கள் 

சங்கரன்கோவில் 

இவர்கள் சவால் விடும் சங்கரன்கோவில் இடைதேர்தலில் மக்கள் இந்த ஆளும் கட்சியையும் எதிர்கட்சியையும் ஒரே அடியாக புறக்கணித்தால் , ஒரு மாற்றத்தை ஏற்படித்தினால் இவர்களுக்கு பாடம் புகட்டயாது போல இருக்கும். இந்த மாதிரி சவால்களை இனி யாரும் விடாமல் இருக்க தீர்வாக இருக்கும் .அதற்காக ஏற்கனவே ஆண்டவர்களை கொண்டு வந்து விடாதீர்கள் அவர்கள் ஒன்றும் யோக்கிய சிகாமணிகள் கிடையாது , மேலும் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சி வேண்டாம் என்றுதானே எதிர்கட்சி அந்தஸ்த்து கூட கொடுக்காமல் விட்டோம் என்பதையும் மனதில் வைக்கவேண்டும். 

No comments:

Post a Comment