Tuesday, February 14, 2012

நாம் யார் -9

பாகம்-8 படிக்காதவர்கள் ,படிக்க  இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

கடல் பயணம் 

தரைவழி பயணத்தில் வடக்கே விந்திய வரையும் . ஏன் அதையும் தண்டி இன்றைய இந்தியா மாநிலங்களில் அங்கே குடியேறினான். பின் கடலில் மிதந்து வந்த மரக்கட்டைகளை பார்த்து மர கப்பல்களை தயாரித்தான்.நீர்வழி போக்குவரத்தை தொடங்கினான்.

நெடியோன்

அக்காலத்தில் புயலாலும் பாறையாலும் மர கப்பல் சேதம் அடிக்கடி நிகழ்ந்ததால்,  பெருங்கடலைக்கடப்பதும் கடந்தால் மீள்வதும் கடினமாக இருந்தது .முதன் முதலில் நெடியோன் என்னும் பாண்டியன் மன்னன் ஒருவன், கடல் கடந்துகீழ்த்திசை நாடுகட்குச் சென்று, நல்ல படியாக மீண்டுவந்தான் ,கடல் தனக்கு உதவியாக இருந்ததென்று கருதி, தன்நன்றியறிவைக் காட்டும் விதமாகக் கடல்தெய்வத்திற்கு ஒரு விழாக் கொண்டாடினான்.

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்

இன்னொரு பாண்டியன் மன்னன் ,கலப்படையமைத்துக் கீழ்த்திசைத் தீவொன்றிற்குச் சென்று, தான் கடலைக்கடந்துவிட்டமையால் அதை வென்று தனக்கு அடிப்படுத்தியதாகக் கருதி, அதற்கு அடையாளமாக, கடற்கரையிலுள்ள பாறை யொன்றில் தன் பெயரை பொறித்து, அவற்றைக் கடல் தன்அலையால் என்றும் அலசிக் கழுவுமாறு செய்தான்.அதனால், வடிம்பலம்ப நின்ற பாண்டியன் எனப்பட்டான்.

வேல் வீசிய பாண்டியன் 

இன்னுமொரு பாண்டியன் மன்னன் கடன்மேற்செல்லும்போது, கடல் கொந்தளித்தது. அதைக் கடல்தலைவனின் தனக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறான் என கருதி, அதையடக்க ஒரு வேலைவிட்டெறிந்தான். கொந்தளிப்பு இயற்கை யாகஅடங்கிற்று. ஆனால் அது வேலெறிந்ததால் தான் கடல் அடங்கி என நினைத்த அப்பாண்டியனும் அவன் படை பரிவாரங்களும் கருதினர். பொதுமக்கள் அதனால் என்ன நேருமோ என்று அஞ்சிய கொண்டு இருந்தனர்.

கடல்கோள் 

சிறிதுகாலத்தின்பின், அவ் வச்சத்திற் கேற்பவே,பாண்டிநாட்டின் பெரும் பகுதியைக் கடல் கொண்டது.அது கி.மு.5000 போல் நிகழ்ந்துள்ளது. தமிழிலக்கியத்திற் கூறப்பட்டுள்ளமுதற் கடல்கோள் இதுவே. ஆப்பிரிக்காவும்ஆத்திரேலியாவும் குமரிநாட்டினின்று அறவேபிரிந்து நெடுந்தொலைவு நீங்கிவிட்டன. பழம்பாண்டி நாட்டின் தென்பெரும் பகுதிமூழ்கவே, தலைக் கழகமும் ஒழிந்தது.

இடபெயர்ச்சி 

கடல் கோள் ஆட்கொண்ட குமரி கண்டம் பல பகுதிகள் அழியே , மிச்சம் மீதி இருந்தவர்கள், வேறு இடங்களை நோக்கி மொத்தமாக பயணித்தார்கள் , அப்படி வந்தவர்கள் விந்திய மலைக்கு தெற்கே அதாவது இன்றைய தமிழ்நாட்டு , கேரளா ஆந்திரா கர்நாடக என அடர்ந்தும் , விந்திய மலைக்கு வடக்கே அங்கே அங்கே சிறு சிறு கூட்டங்களாக இடம் பெயர்ந்தனர் (இப்போது சொல்லுங்கள் அனைவரும் ஒரு விதத்தில் வந்தேறிகள் தானே )

கடல்கோள் நிகழ்ந்தவுடன், ஒருபெருங்கூட்டத்தார் வடதிசை நோக்கிச்செல்கிறார்கள் .  சிறுசிறு கூட்டத்தாரும்தனிப்பட்டவரும் வடமேற்கும் வடகிழக்கும் பல்வேறுநாடுகட்குச் சென்று, கடல்கோட் செய்தியைப்பரப்பியிருக்கின்றனர்.

இமயத்தில் மீன் கொடி 

பாண்டியநாட்டின் பெரும்பகுதிமட்டுமன்றி, பஃறுளியாறும் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடும் மூழ்கவே, பாண்டியர் குடியில்எஞ்சியிருந்தவன் தன் பேரிழப்பை யெண்ணி வருந்திஅதற்கு ஒருவாறு ஈடுசெய்து கொள்வதுபோல், வடக்கிற்சென்று பனிமலைக் குவட்டிலும் (இமய மலை ) கங்கை யாற்றங்கரையிலும் தன் கயல் (மீன் கொடியை ) முத்திரையைப் பொறித்துமீண்டான். அன்று அங்கு வல்லரசின்மையாலும்பெரும்பகுதி காடாயிருந்தமையாலும், சிறிதும்அவனுக்கு எதிர்ப்பில்லாது போயிற்று.

சேர , சோழ நாடுகள் 

இதுவரை ஒரே நாடாகவும் , அதற்கு பாண்டிய மன்னனே தலைவனாகவும் இருந்த வந்தான் , கடல்கோட்குத் தப்பிய மக்களைக்குடியமர்த்துவதிலும், தலைநக ரமைப்பதிலும்,ஆட்சித்துணைவரைத் தேர்ந்தெடுப் பதிலும், படைதொகுப்பதிலும் நீண்ட காலஞ் சென்றதனால்,பாண்டியனால் நேரடியாகத் தமிழ்நிலம் முழுவதுங்கவனிக்க முடியவில்லை.

இந்த சமயத்தை பயன்படித்தி நாவலந்தேயப் பகுதிகளையாண்ட இரு துணை யரையரும் (பாண்டியனின் கீழ் நிர்வாகம் செய்தவர்கள் ), அந் நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு இரு வேந்தராகப்பிரிந்துபோயினர். கீழ்நாடு நெல்விளைவாற் சோழநாடென்றும், மேல்நாடு மலைச்சரிவாற் சாரல் நாடென்றும் பெயர் பெற்றிருந்ததனால்கீழைவேந்தன் சோழன் என்றும், மேலைவேந்தன்சேரன் என்றும், ஆள்குடிப் பெயர் பெற்றனர்.

நிர்வாக முறை 

பாண்டியன் ஏற்கனவே நிர்வாகம் செய்து வந்தான் , அதனால் அவனுக்கு , கொடி , சின்னம் , படை இருந்தது இதை போல் சேர , சோழ மன்னர்களும் உருவாக்கினார் (பாண்டியனிடம் கற்று கொண்டு வந்திருப்பார்கள் போல ),

நாற்படையும் ஐம்பெருங்குழுவும்எண்பேராயமும் ஐவகை யுறுதிச் சுற்றமும் அமைந்தன.

முகுடம் (முடி), செங்கோல், மாலை,முத்திரை, குடை, கொடி, முரசு, தேர், யானை, குதிரைஎன்பன பத்துவகைச் சின்னம். கொடியும்முத்திரையும் குறிவடிவில் ஒன்றேனும், பொருள்வடிவிலும் பயன்பாட்டு வகையிலும் வேறாம்.

நாடு , குடி , பொருள் , படை, அரண், அமைச்சு,நட்பு என்னும் ஏழும் அரசியலுறுப்பாம்

இப்போது இருக்கும் உள் துறை , மனித வளத் துறை , நிதி துறை , ராணுவத் துறை , காவல் துறை (உள்நாட்டு பாதுகாப்புக்கு ), பாராளுமற்ற விவகார துறை , வெளியுறவு துறை .

முந்நாடும் தனித்தனி நாடென்றும், ஒருங்கேதமிழகம் என்றும் பெயர் பெற்றன.

                                                                                                                தொடரும்..........................

2 comments:

  1. padhivu arpudham arumai thodarndhu ezhudhungal
    nandri surendran

    ReplyDelete
  2. வணக்கம் சுரேந்திரன்,

    வருக , உங்களின் வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete