Sunday, February 5, 2012

நாம் யார் -1

வந்தேறிகள் 

இன்று தமிழகத்தில் வந்தேறிகள் வந்தேறிகள் , என்ற ஒரு வாதத்தையும் , இவர்கள் தான் தமிழர்கள் , இவர்கள் எல்லாம் திரவிடார்கள் என்ற ஒரு பிரசாரம் மேற்கொள்ள படுகிறது இது உண்மையா , நாம் யார் , எங்கு இருந்து வந்தோம் , எப்படி பிளவு பட்டு போனம் ,மொழிகளின் சிதைவு போன்றவற்றை பார்ப்போம் , ஒருவகையில் அனைவருமே வந்தேறிகள் தான்.

மனித இனம் 

மனித இனம் எப்படி வந்தது ? எங்கே இருந்து வந்தது ?  என்ற கேள்விக்கு பதிலாக அறிவியல் மூலம் பதில் சொல்லுபவார்கள் மனித இனம் குரங்கில் இருந்து வந்தது என்றும் , ஒரு சாரார் வேறு விலங்கு இனத்தில் இருந்து வந்தது எனவும் சொல்லுகிறார்கள் , ஆன்மீகவாதிகளோ கடவுள் படைத்தார் என்கிறார்கள் ,

எப்படியோ ஒரு முறையில், எங்கோ ஒரு இடத்தில் மனித இனம் தோன்றி உள்ளது , இந்த மனித இனத்தின் ஆரம்ப குமரி கண்டம் (லெமூரியா ) என ஆராயிச்சியாளர்கள் சொல்லுகிறார்கள் 

குமரி கண்டம் 

இந்த குமரி கண்டம் என்பது தமிழ்நாட்டுக்கு தெற்கே இருந்ததாக ஆராயிச்சிகள் சொல்லுகிறது ,தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக்கொண்டு ஒரு தொடர்ந்த நிலப்பரப்பிருந்தது என சொல்ல படுகிறது ,இன்றும் இது குமரி கடலில் அடியில் உள்ளது , பல கிலோ மீட்டர் ஆழத்தில் .


இந்த தெற்கே இருந்த குமரி கடலில் ஒரு மலைத்தொடர் குமரியில் இருந்து தெற்கு நோக்கி நெடும் தூரம் வரைக்கும் , அங்கே இருந்து தென்மேற்கு பக்கமாக மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாக  எலியட்டு என்பவர்  தனது நூலில் எழுதிஉள்ளார்.


இதன் எல்லைகளாக கிழக்கே  இன்றையா ஆஸ்திரேலியா கண்டமும் , மேற்கே ஆப்பிரிக்காவையும் வடக்கே தமிழகத்தை தாண்டி இன்றைய ஆந்திரா , கேரளா , இலங்கை முழுவதும் , கர்நாடக போன்ற பரப்புகளை உள்ள அடக்கி விந்திய மலைகள் வரை வடக்கே ஒரு குறிகிய நிலபரப்பாகவும் , தெற்கே அகண்ட பரப்பாகவும் ஒரு முக்கோண வடிவில் இருந்தததாக ஆராய்ச்சிகள் சொல்லுகிறது . இன்று ஆராய்ச்சிகள் செய்து கண்டு பிடித்து இருந்தாலும் ,ஏற்கனவே தமிழ் இலக்கியங்களும் எழுத்துகளில் பதிவு செய்துள்ளது . அப்படி என்றால் தமிழனுக்கும் இந்த குமரி கண்டத்திற்கும் தொடர்பு இருந்து உள்ளது.


கி மு - 5,00,000 ஆண்டுகள் 

மனித இனம் மட்டுமில்லை உயிர் இனமே இங்கே தான் தோன்றி உள்ளது என ஆய்வுகள் சொல்லுகிறது , இதுவரை உலகிற் கண்டெடுக்கப்பட்ட பழைய மாந்தன் எலும்புக்கூடுகளுள், சாலித்தீவில்(Java) 1891-ல் தூபாயிசு என்பவரால் எடுக்கப்பட்டது ."நிமிர்ந்த குரக்கு மாந்தன் "  காலம் கி.மு. 500,000 என்று கணிக்கப்பட்டுள்ளது. 

1961-ல் தென்னாப்பிரிக்காவில் தங்கனியிக்காவில் இலீக்கி (Leakey) என்னும் ஆங்கில மாந்தனூலறிஞராற் கண்டெடுக்கப்பட்டுள்ள ஈரெலும்புக் கூடுகளுள், ஒன்றற்குரிய கொட்டையுடைப்பான்‘ (Nut-cracker Man or Sinjanthropos Boisi) இற்றைக்கு 6,00,000 ஆண்டுகட்கு முற்பட்ட வன் என்றும்,

இன்னொன்றற்குரிய, இன்னும் பெயரிடப்படாத, நனிமிக முந்திய மாந்தன், குறைந்த பட்சம் 17,50,660 ஆண்டுகளுக்கு முற்பட்டவன் என்றும், கணிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்க மாந்தனூற் பேராசிரியர் சிலர் மறுத்துள்ளனர். எது எப்படி இருந்தாலும் ,சாலித் தீவையும் தென்னாப்பிரிக்காவையும் தன் னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே குமரிக்கண்டம் என உறுதி படுகிறது , மாந்தன் தோற்றம் கி.மு. 5,00,000 ஆண்டுகளுக்கு முந்திய என சந்தேகம் இல்லாமல் கூறலாம்.
                                                                                                 
                                                                                           தொடரும்....................................                                                                                 

2 comments:

  1. Replies
    1. வணக்கம் Sna Ad

      வருக , உங்களின் வாழ்த்துக்கு நன்றி

      Delete