Tuesday, February 21, 2012

நாம் யார் -14

பாகம்-13 படிக்காதவர்கள் ,படிக்க  இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

தியூத்தானியம் (செருமானியம்)

தியூத்தானியக்கிளைகள் ,1மேற்குச்செருமானியம், (2) வடசெரு மானியம், (3) கிழக்குச்செருமானியம் என்னும் முப்பிரிவுகளைக் கொண்டது.பழைய ஆங்கிலம், பழைய பிரிசியம் (Frisian),பழைய சாகசனியம், பழைய உயர்செருமானியம் என்பன மேற்குச்செருமானியத்தையும் ,ஐசிலாந்தியம், தேனியம் (Danish),நார்வீசியம், சுவீடியம் என்பன வடசெருமானியத்தையும்; கோதியம் (Gothic),வாந்த லியம் (Vandalic)என்பன கிழக்குச் செருமானியத்தையும் சேர்ந்தவையாகும். இம் முப்பிரிவுகம் சேர்ந்ததியூத்தானியத்தின் மூல நிலையே (ProtoTeutonic), தியூத்தானிய முறை என்றுமேற்குறிக்கப்பட்டது.

இலத்தீன்

இத்தாலியரின் முன்னோர், நடுஐரோப்பாவிலிருந்து, கி.மு.8ஆம் நூற்றாண்டிற்குமுன்,ஆல்பசு (Alps),அப்பெனைன் (Appennines) மலைத்தொடர்களின் வழியாக வந்து குடிபுகுந்தனர்.கி.மு.753-ல், திபேர் (Tiber)ஆற்றங்கரைமேல் உரோம நகர் கட்டப்பட்டது. அந்நகரை ஆட்கொண்ட இலாத்தியம் (Latium)என்னும் கோட்டத்தில் (Dt.)பேசப்பட்ட மொழியே இலத்தீன். அது கி.மு.600-லேயேஒரு திரி மொழியாயிருந்தது. கி.மு. முதல்நூற்றாண்டில் தான் அது இலக்கியச் செம்மொழியாயிற்று. அதன் காலம் பின்வருமாறு ஐம்பாகுப்படும்.

1. பழைய இலத்தீன் - கி.மு. 75-ற்குமுன்

2. இலக்கிய இலத்தீன் - கி.மு. 75-கி.பி.175

3. பிந்திய இலத்தீன் - கி.பி. 175-600

4. இடைக்கால இலத்தீன் - கி.பி. 600-1500

5. இக்கால இலத்தீன் - கி.பி.1500-லிருந்து

கிரேக்கம்

கிரேக்க நாடு பல நகரநாடுகளாகத்தோன்றியதனால், கிரேக்க மொழி பல கிளை மொழிகளாகப் பிரிந்திருந்தது. அக்கிளைமொழி கள் ஆதிக்கம், அயோனியம், ஈயோலியம்,தோரியம், ஆர்க்கேடியம், சைப்பிரியம் என்பன. அதில் , அத்திக்கமே சிறந்த இலக்கியச்செம்மொழியாயிற்று. அதன் திரிபான காய்னீ (Koine)என்னும் பொதுமொழியே, அலெகசாந்தர் பேரரசிலும்பிசந்தியப் பேரரசிலும் ஆட்சிமொழியாய்இருந்தது. பழங்கிரேக்கத்தின் மிகப் பிந்திய வளர்ச்சியே இக்காலக் கிரேக்கம்.

இத்தாலியிலிருந்த 'கிரையாய்'என்னும் ஒரு சிறு மக்கட் கூட்டத்தின் பெயரினின்று,கிரீக்கு (Greek) என்னும்பெயர் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது.இத்தாலியும் கிரேக்க நாடும் ஒன்றையொன்று அடுத்திருப்பதனாலும், கிரேக்கப் பேரரசை அடுத்துஉரோமப் பேரரசு தோன்றியமையாலும், பின்னர் தன்தொடர்ச்சியான பிசந்தியப் பேரரசின் காலத்தில் கிரேக்கர் தம்மை உரோமர் என்றும்தம் மொழியை உரோமேயம் (Romaic)என்றும் சொல்லிக் கொண்டமையாலும்,இலத்தீனுக்கும் கிரேக்கத்திற்கும் பல சொற்கள்பொதுவாயிருப்பதனாலும், இருமொழியும் மிகநெருங்கியவை என்பது அறியப்படும். இலக்கியவளர்ச்சியிலும், அரசியல் வளர்ச்சியிலும்கிரேக்கம் முந்தியதே ஆயினும், மொழிநிலையில்இலத்தீன் முற்பட்டதாகும்.

கெலத்தியம், செருமானியம்(தியூத்தானியம்), இத்தாலியம், எல்லெனியம்(கிரேக்கம்), பாலத்தோ-சிலாவியம், அல்பானியம்,அர்மீனியம், ஈரானியம், இந்தியம் எனத் தொண்பெருங்கிளை களையும், வேறு சில சிறு கிளைகளையுங்கொண்டது ஆரியம் என்னும் மொழிக்குடும்பம்.

தெலுங்கு உருவானது 

ஆரியர்கள் இந்தியாவில் உள்ளே வர , மெல்ல தெற்கு நோக்கி வர , ஏற்கனவே அங்கு அங்கே கூட்ட நெரிசல் இல்லாமல் இருந்த தமிழர்கள் பகுதியில் வந்து குடியேற , அவர்களுக்கும் ,இவர்களுக்கு உள்ள மொழியில் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளும் வகையில் தமிழோடு அவர்களின் மொழியே சேர்த்து பேச ஆரமித்தர்கள் . இந்த ஆரிய குடும்ப மொழிகள் மெல்ல தமிழோடு கலந்து ஒரு பகுதி தெலுங்கு மொழியாக திரிந்து விட்டது , இவ்வாறு இருவருக்கும் ஒரு ஒத்த மொழி தான் ஏற்பட்டதே தவிர ,இரண்டு இனமும் ஓன்று சேர்ந்து விடவில்லை ,(இதனால் தான் இன்றும் தெலுங்கான பிரச்சனை இருக்கும் போல )

ஆரியர் நாட்டாண்மை 

ஆரியர் ஒரே யினத்தா ராயினும்,இசரவேலரைப்போல் முன்னோர் பெயரால் ஏற்பட்ட பல்வேறு குடிவகுப்புகளா யிருந்திருக் கின்றனர்.ஒவ்வொரு குடிவகுப்பிற்கும் ஒரு தலைவனும் ஒருபூசாரியும் இருந்தனர்.

ஆரியர் இந்தியாவிற்கு வந்தபோது ஆடுமாடு மேய்ப்பதை தவிர வேறொன்றும்தெரியாதவராக இருந்து உள்ளனர் ,அவர்கட்குக் கல்வியுமில்லை, கலைஇல்லை, எழுத்துமில்லை, இலக்கியமுமில்லை. பூசாரிகள் இயற்கைத் தெய்வங்களை, சிறப்பாக நெருப்புத் தெய்வத்தை வழிபட்டுத் தங்கள் குடிவகுப்பாரின் சடங்குகளை நடத்திப் பல்வகை வேள்விகளை வளர்த்து வந்தனர். குடிவகுப்புத்தலைவர் தமிழ்நாட்டு ஊர்க் கவுண்டர் அல்லது நாட்டாண்மைக்காரர் போன்றே தத்தம்தொழிலைச் செய்து, அவ்வப்போது ஏற்படும்சண்டைசச்சரவுகளையும் வழக்குகளையுந் தீர்த்துவந்தனர்.

வட இந்தியா  பழங்குடி 

ஆரியர் வரவிற்கு முன் வட இந்தியாவில் எண்ணிக்கையில் குறைவாக இருந்த பழங்குடி மக்கள்   ஆரியர் வரவால் , கடலில் கலந்த பெருங்காயம் போல ,வடஇந்தியப் பழங்குடி மக்களொடு இரண்டறக்கலந்துபோய் அவர் மொழியையே ஆரியர்கள் பின் பற்றினார். ஆனாலும் , ஆரியப் பூசாரிகள் மட்டும் தங்கள் உயர்வைக் காத்தற்குத் தனியினமாகவேவாழ்ந்து, மதவியல் பற்றிய தம் முன்னோர்மொழிச் சொற்களை, தம் மந்திரங்கள் என்னும் பாடல்களிலும் இருவகைச் சடங்குகளிலும் பல்வகைவேள்விகளிலும் போற்றி வந்திருக்கின்றனர். இது,அராபியரும் துருக்கியரும் பாரசீகருமான முகமதியர், இந்தியாவிற்கு வந்தபின் தம் முன்னோர்மொழிகளை மறந்து வடநாட்டுப் பழங்குடி மக்களின்தாய்மொழியாகிய இந்தியையே மேற்கொண்டு,மதத்துறையில் மட்டும் அரபிச் சொற்களையும் பாரசீகச் சொற் களையும் போற்றிகின்றனர்.

தென் இந்தியா  பழங்குடி 

வடஇந்தியாவில் ஆரியப் பூசாரிகள் தவிர மற்றெல்லாரும் பழங்குடி மக்களொடு கலந்துபோனதால் , இன்று வடநாட்டு மக்களைஆரியரென்றும் திரவிடரென்றும் பிரித்தறியமுடியாது. தென்னாட்டிற்கு வந்த ஆரிய வகுப்பு பூசாரியரே. ஆதலால், திரவிடருமான தென்னாட்டு அல்லது தென்னிந்திய மக்களெல்லாம் ஆரியக் கலப்பற்ற தூய பழங்குடியினத்தாரே.இந்தியா வெங்கும், தனிப்பட்ட முறையில் ஆடவரும்பெண்டிரும் பழங்குடி மக்களொடு மணவுறவும் கொண்டு வந்திருப்பினும், குலவளவில் ஓரளவு தூய்மையைப் போற்றிவந்திருக்கும் ஆரிய வகுப்பார் பிராமணரென்னும் பூசாரியரே.

                                                                                                                தொடரும்............................

No comments:

Post a Comment