Sunday, February 19, 2012

நாம் யார் -12

பாகம்-11 படிக்காதவர்கள் ,படிக்க  இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.


பாண்டியர்களின் பரவல் 

கடல்கடந்து சென்று, சாவகம்என்னும் சாலித் தீவைக் கைப்பற்றியதாகும்.
சாலி என்பது செந்நெல் என்றுபொருள்படும் தென்சொல். பிற்காலத்திற் பாண்டியனொடு சென்ற பிராமணப் பூசகன் ஒருவன், சாலிஎன்பது ஒரு தவசப் பெயராயிருத்தலால், அதைவடமொழியில் " யவ" என்று மொழிபெயர்த்தான். அதுபின்னர் ஜவ-ஜாவ எனத் திரிந்து தமிழில் சாவகம்என்னும் வடிவுகொண்டது. சாலித்தீவின் தலைநகர்சாலியூர்.

சாலித்தீவைப் பாண்டியன்கைப்பற்றியபின், தமிழர் அங்குச் சென்று குடியேறினர். அதனால், அத் தீவின் பல பிரிவுப்பெயர்கள் இன்றும் பாண்டியன், மதியன், புகார்,பாண்டிய வாசம், மலையன்கோ, கந்தளி,செம்பூட்சேய் என்று தமிழ்ப்பெயர்களே கொண்டுவிளங்குகின்றன என்றும்; மீனன் காப்பு என்னுமிடத்துள்ள மலையர், தம் முன்னோர்இந்தியாவினின்று வந்ததாகக் கூறுகின்றனர்.

மீனன் மீனவன்; அஃதாவது மீனக்கொடியுடைய பாண்டியன். மீனன் காப்பு என்பது பாண்டியன்காவலுள்ள இடம் என்று பொருள்படும்.

தமிழர் படிப்படியாகப் பக்கத்துத்தீவுகளிலும் நிலங்களிலும் பரவினதாகத்தெரிகின்றது. சாலிக்கு வடகிழக்கில் ஒரு சிறு தீவுமதுரா என்றும், வடமேற்கில் ஒரு பெருந்தீவு சுமதுரா (Sumatra)என்றும், வடக்கில் ஒரு மாபெருந் தீவு பொருநையோ (Borneo)என்றும், சுமதுராவிற்கு வடக்கிலுள்ள தீவக்குறைமலையா (Malaya) என்றும்பெயர் பெற்றுள்ளன.

பொருநை (தாம்பரபரணி) என்பதுபாண்டிநாட்டு ஆற்றுப் பெயர். மலையம் என்பதுபொதியமலைப் பெயர். சுமதுரா என்பதன்முன்னொட்டும் சிங்கபுரம் (Singapore)என்னும் தீவுப் பெயரும், ஆரியச் சார்பால்ஏற்பட்டனவாகும்.

சோழர்களின் வெற்றி 

அக்காலத்தில் இலங்கையில் அரக்கர்என்றும் இயக்கர் என்றும் இருவகுப்பார் இருந்திருக்கின்றனர். அரக்கர் அரசன் இராவணன். அவன் தலைநகர் இலங்கை.இயக்கர் அரசன் பிங்கலன் (குபேரன்). அவன்தலைநகர் அளகை. அவன் மாபெருஞ் செல்வன். சங்கம்தாமரை என்னும் பேரெண்களின் அளவுகொண்ட இருபொக்கசம் (நிதி) ஈட்டி வைத்திருந்ததாகச்சொல்லப் படுகின்றான்.  ஒன்றுமூலபண்டார மாகவும் இன்னொன்று வழங்கும்பண்டாரமாகவும் இருந்திருத்தல் வேண்டும்.

அரக்கருக்கும் இயக்கருக்கும் நெடுநாட்பகையிருந்து வந்தது. இறுதியில் மூண்ட கடும்போரில்,இயக்கர் குலம் வேரறுக்கப்பட்டது. பிங்கலன்தப்பிப் பனிமலைக்கு ஓடிப்போய்விட்டான்.பிற்காலத்தில் ஓர் இயக்கி (இயக்கப் பெண்)தமிழகத்தில் நாட்டுப்புறத் தெய்வமும் ஆனாள்.

இலங்கை அரக்கர், அந்தரத்தில் தொங்குமாறு மூன்றுஅரணான கோட்டைகளை அமைத்து இருந்திருக்கின்றனர்.அவற்றை ஒரு சோழன் அழித்து, "தூங்கெயில்எறிந்த தொடித்தோட் செம்பியன்" என்னும்விருதுப் பெயர் பெற்றான்.

சேரனின் சிறப்பு 

கரும்பு முதலில் நியூகினியாவில்இயற்கையாக விளைந்த தென்றும், பின்னர்ச்சீனத்திற்கும் அதன்பின் பிற நாடுகட்கும்கொண்டு போகப்பட்ட தென்றும்,  வரலாறு கூறுகின்றது. சாலி (சாவகம்) நியூகினியாப் பக்கத்திலிருப்பதால், சீனத்திற்குமுன் சாலிக்குக் கரும்புசென்றிருக்கும் என்பதை உணரலாம்.

சாலி நாட்டரசர்க்கு இந்திரன்என்னும் பட்டம் இருந்தது. வெள்ளையானை கீழைநாடுகளுள் ஒன்றாகிய கடாரத்தில்(பர்மாவில்) வாழ்ந்தது. இந்திரன் யானைவெள்ளையானை யென்றும், அதன் பெயர் ஐராவதம்என்றும் தொல்கதை கூருக்கிறது . கடாரத்தில்வெள்ளையானை இருந்ததால், அங்கு ஓடும் ஆறு ஐராவதிஎனப்பட்டது.

சேரருள் ஒருவன், இந்திரன் என்னும்பட்டங்கொண்டவன் ஆண்ட நாடாகிய சாலியினின்றுதமிழகத்திற்குக் கரும்பைக் கொண்டுவந்துபயிராக்கினான்.

மூவேந்தர் கொண்டுவந்த பொருள்கள் 

இவ்வாறாக , நிலவணிகரும் நீர்வணிகரும் மூவேந்தரும், உலகத்தின் பல விடங்கட்கும் சென்று,ஆங்காங்குள்ள அரும் பொருள்களையெல்லாம் எடுத்து வந்து , தமிழகத்தையும் தமிழர்வாழ்க்கையையும் வளம்படுத்தினர்.

சீனத்தினின்று கற்பூரம் கற்கண்டுசீனக்காரம் முதலியனவும், சாலியினின்று கரும்புகராம்பூ திப்பிலி (பண்டகி) முதலியனவும்,மொலுக்காசினின்று அட்டிகமும் (சாதிக்காயும்),இந்தோனேசியா வென்னும் கீழிந்தியத் தீவுக்கணத்தினின்று கொடியீந்து என்னும்சவ்வரிசியும், மலையாவினின்று பாக்கு என்னும்அடைக்காயும், இலங்கையினின்று கருவாப்பட்டையும், ஆபுகானித்தானம் என்னும் காந்தாரத்தினின்றுபெருங்காயமும், அரபியாவினின்று அடப்பம் (வாதுமை),கொடிமுந்திரி, சுராலை (சாம்பிராணி) முதலியனவும்,மேலையாசியாவினின்று கசகசா, அத்திரி (கோவேறுகழுதை) முதலியனவும், சின்ன ஆசியாவினின்றுகொத்துமல்லி, சீரகம், பெருஞ் சீரகம்,கொங்காரப்பூ (குங்குமப்பூ) முதலியனவும்,மெகசிக்கோ வினின்று மிளகாயும்,அமெரிக்காவினின்று வள்ளி யென்றும்சருககரைவள்ளியென்றும் சொல்லப்படும் சீனிக்கிழங்கும், பிறவிடங்களினின்று பிறவும் வந்துசேர்ந்தன.

                                                                                                              தொடரும்........................  

No comments:

Post a Comment