பாகம்-4 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.
இன்றைய கள நிலவரம்
கொஞ்சம் சுறுசுறுப்பு பெற்றுள்ளது சங்கரன்கோவில் இடைதேர்தல் களம் .
அதிமுக பக்கம்
===============
ஆளும்கட்சியாக இருப்பதாலும் , தொகுதி ஏற்கனவே வென்றதாலும் , இந்த களத்தில் வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு ,அமைச்சர்ர் பெருமக்களை களத்தில் இறக்கிவிட்டுள்ளது கட்சி தலைமை.
சாதகங்கள்
ஆளும் கட்சி என்ற பிரமாண்டத்தோடு களத்தில் இறங்கி விட்டார்கள் , கடந்த நான்கு முறை தொகுதியை கைபற்றியவர்கள் என ஒரு மாய தோற்றத்தோடும் களத்தில் உள்ளது அதிமுக
சட்டமன்ற உறுப்பினரின் மறைந்த சில நாள்களிலே இலவசங்களை வரி இறைக்க ஆரமித்து விட்டது
அமைச்சர்கள் தேர்தல் பனி செய்வதால் அனைத்து அரசு ஊழியர்களும் ஒத்துழைப்பு தருகிறார்கள்.
இவர்கள் பெரிதும் நம்பி களம் காண்பது இலவசங்களை தவிர வேறு ஒன்றும் இல்லை
பாதகங்கள்
ஆளும்கட்சி என முழு பலம் இருந்தாலும் , அரசு எடுத்த முடிவுகள் மக்களிடம் கேட்ட பெயர் வாங்கி உள்ளது , இவர்கள் ஆட்சிக்கு வந்த உடனே , சமசீர்கல்வி , அரசு கட்டிடங்களை மாற்றுவது , விலை வாசி உயர்வு , மூன்று பேர் தூக்கு விவகாரத்தில் முன்னுக்கு பின் முரணான முடிவுகள் என தங்களுக்கு தாங்களே வெறுப்பை பெற்று கொண்டார்கள்.
தலைமை யின் பண்புகள் தேர்தலில் எதிர் ஒலிக்குமானால் இவர்களுக்கு பெரும் சிக்கலே , நீதிமன்ற வழக்குகள் மக்கள் மனத்தில் வைத்தால் ஓட்டுகள் குறையும்.
தன் யுக அடிப்படையில் வேலை செய்யும் அமைச்சர்கள் , காங்கிரஸ் கட்சிக்கு நிகராக கோஷ்டிகள் என ஒரு இறுக்கமான , மெத்தன போக்கோடு களத்தில் இருக்கிறது அதிமுக .
மேலும் விசை தறி தொழிலார்களின் போராட்டம் தலைமேல் கத்தியாக இருக்கிறது
வேட்பாளர்
தேர்தல் அறிவிக்கும் முன்னே வேட்பாளரை அறிவித்து விட்டது , இது எதிர்கட்சிகளுக்கு ஒரு நிர்பந்ததை ஏற்படுத்தவதுதான் . இவர்களின் வேட்பாளர்கள் மாற்றும் பாணி இங்கேயும் நடக்குமா என தெரியவில்லை .
இப்போது அறிவித்து உள்ள வேட்பாளர் படித்தவர் , ஒரு பெண்மணி என்ற பலம் இருந்தாலும் தனி செல்வாக்கு என்ற ஓன்று இல்லை , மேலும் இவர் சங்கரன்கோவில் நகரமன்ற தலைவியாக இருக்கிறார் , பதவிக்கு வந்து ஆறுமாதங்கள் கூட ஆகாத நிலையில் அவரையே வேட்பாளராக நிறுத்துவது என்பது நல்ல அணுகுமுறை அல்ல
இந்த தேர்தல் முடிந்த யுடன் நகரமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் சங்கரன்கோவில் , அரசு பணமும் தேர்தல் ஆணையத்தின் வேலை நேரமும் தேவை இல்லாமல் வினவதை மக்கள் சிந்தித்தால் , பெரும் பாதகமாக முடிவுகள் இருக்கும் ,
மதிமுக பக்கம்
===============
நாம் ஏற்கனவே சொன்னது போல போட்டியில் இருப்பது மதிமுக மட்டுமே , ஏனோ தெரியவில்லை மற்ற கட்சிகள் இன்னும் ஆரம்ப பணிகளை கூட தூடங்கவில்லை , இவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் கள பணிகளை விறுவிறுப்பாக செய்து கொண்டு இருக்கிறார்கள் , வெற்றி பெற்றால் இவர்களின் அரசியல் வழிவிலே ஒரு பெரிய மாற்றம்தான் , எனவே "மாற்றம் வேண்டும் " என்ற முழக்கத்தோடு களத்தில் மதிமுக
சாதகங்கள்
இவர்களின் பிரசார உத்திகள் , தலைமை , பேச்சாளர்கள் , போராட்ட வாழ்வு என பின்புலமாக கொண்டு களத்தில் பம்பரமாக சுற்றி வருகிறார்கள் .
எந்த முடிவுகள் வந்தாலும் தங்கி கொள்ளும் தொண்டர்களை கொண்டுள்ளதால் ,மன உறுதியோடு களத்தில் பனி செய்கிறார்கள் .
இன்றைய போராட்ட கால தமிழகத்தில் , இவர்கள் முன்னோடியாக இருப்பது கூடுதல் பலம் , ஸ்டேரிலேட் ஆலை விவகாரம் , கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு , முத்தாய்பாக முல்லை பெரியாறு போராட்டம் என நல்ல பெயரோடு வலம் வருகிறார்கள்
தலைமை யின் பண்புகள் தேர்தலில் பிரதி பலித்தால் , இவர்களுக்கு சாதகம உள்ளது.
பாதகங்கள்
ஆளும் கட்சியின் பண பலம் , அதிகார பலம் முன் இவர்களால் பணத்தை செலவு செய்ய முடியுமா என தெரியவில்லை .
மக்கள் இலவசத்திற்கு மயங்கினால் , இவர்கள் படு திண்டாட்டமே ,
நகராட்சி பகுதிகளில் இவர்களுக்கு செல்வாக்கு குறைவு என்பது உண்மை
மற்ற கட்சிகள் ஓட்டை பிரித்தல் மிக பெரிய பாதகமே .
வேட்பாளர்
இன்னும் வேட்பாளர் அறிவிக்க வில்லை , இவர்களின் வேட்பாளர் தேர்வு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் இருக்குமா ?
வேட்பாளர் யாராக இருந்தாலும் உண்மையான வேட்பாளர் வைகோதான் என தொண்டர்கள் உற்சாகத்தோடு களத்தில் சுற்றி வருகிறார்கள் .
ஒருவேளை பொது வேட்பாளர் என்ற ஓன்று உருவாகுமா , (இது தமிழகத்தில் சாத்தியமில்லை )
தொடரும்...............
No comments:
Post a Comment