Wednesday, January 18, 2012

முல்லை பெரியாறு- பாகம் 29

பாகம்-28 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 


மங்காத மக்கள் புரட்சி

டிசம்பர் மாதம் 12 ம் தேதி

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா மற்றும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் திமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை அருகே தாம்பரத்தில் உண்ணாவிரதம் இருந்த திமுக பொருளாளர் ஸ்டாலின்

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச் செயலாளர் .அன்பழகன்

வீட்டிலே உண்ணாவிரதம் இருந்து விட்டு மாலையில் உண்ணாவிரத்தை முடித்து வைக்க வந்த திமுக தலைவர் கருணாநிதி ,

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட கேரள முயற்சிப்பது தவறானது என்று இந்தியன் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன்.

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம்.கிட்டத்தட்ட 200 கடைகள் மூடப்பட்டன. இதனால் கேரளாவுக்கு ஒரு காயும் போகவில்லை. இந்த கடையடைப்பு காரணமாக கேரளாவுக்குப் போக வேண்டிய ரூ. 5 கோடி மதிப்புள்ள காய்கறிகளை வியாபாரிகள் அனுப்பவில்லை.

கேரளாவைக் கண்டித்து தமிழகம், புதுவையில் 60,000 வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

குமுளியை நோக்கி 1 லட்சம் மக்கள் படையெடுத்துள்ளனர். கம்பம் மெட்டு பகுதியில் திரண்ட 20 ஆயிரம் பேரை போலீசார் திடீரென தடியடி நடத்தினர்.இதனால் விவசாயிகள் மலைப் பாதையில் உருண்டும், அடிபட்டும் சிதறி ஓட வேண்டியநிலை ஏற்பட்டது. போலீஸாரின் இந்த திடீர் தடியடியால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது.

முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க கேரளாவை அனுமதிக்கக் கூடாது-திமுக வழக்கு

அணை விவகாரம்- டெல்லியில் இருந்தபடி வேடிக்கை பார்க்காதீர்-மத்திய அரசு மீது கருணாநிதி கடும் தாக்கு (கூட்டணியில் இருந்து கொண்டு சென்னையை தாண்டவில்லை )

டிசம்பர் மாதம் 13 ம் தேதி

முல்லை பெரியாறில் புதிய அணை என்ற முடிவில் இருந்து அணு அளவு்ம் அரசு பின்வாங்காது. புதிய அணைக்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.5 கோடி நிதி ஓதுக்கப்பட்டுள்ளது. நம்முடைய இடத்தில் அணைகட்ட யாருடைய முயற்சியும் தேவையில்லை. முல்லை பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் 10 நாட்களுக்குள் மத்திய அரசு சுமுகமான ஒரு முடிவை எடுக்காவிட்டால் கேரள காங் (எம்) கட்சி 2ம் கட்ட போராட்டத்தில் குதிக்கும். இந்த போராட்டம் முதல் கட்டத்தை விட தீவிரமாக இருக்கும்-கேரள நிதியமைச்சர் கே.எம்.மாணி

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க வலியுறுத்தி தேனி மாவட்டம் முழுவதும் உள்ள வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து நிறுத்தம் , பள்ளிகளுக்கும் விடுமுறை என மொத்த மாவட்ட முழுவதும் ஸ்தம்பித்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கக் கோரும் கேரள அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது .இந்த மனுவை வாபஸ் பெறாவிட்டால் டிஸ்மிஸ் செய்வோம் என்று நீதிபதிகள் கூறியதைத் தொடர்ந்து மனுவை கேரள வக்கீல் வாபஸ் பெற்றார்.

முல்லைப் பெரியாறு அணையில் 162 அடிக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம், ராணுவத்திடம் ஒப்படைக்கலாம்: கலாம்

டிசம்பர் மாதம் 14 ம் தேதி

கேரள மாநிலம் மூணாறில், போலீஸாரின் தடையையும் மீறி நூற்றுக்கணக்கான தமிழர்கள் திரண்டு, கேரள அரசைக் கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக, கேரள மக்கள் அமைதி காக்க வேண்டும்-மன்மோகன் (முதல் முறையாக வாய் திறந்த பிரதமர் )

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கைக் கண்டித்து தேனியில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக ஆர்ப்பாட்டம் நடத்தியது . வழக்கம் போல பிரச்சனையின் விவரத்தை பேசாமல் அது இது என பேசி மக்களின் ஏளனத்திற்கு ஆளான எதிர்கட்சி.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து திமுக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. (வந்தார்கள் போனார்கள் )

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக கேரளாவில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. கேரள அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்தார். (அப்படியே கர்நாடகாவை பார்த்து ஒரு அறிக்கை விடலாமே )

மக்களே போராட்டத்தை முன் நின்று நடத்தி கொண்டு இருக்க , முன்னாள் ஆளுகட்சி , இன்னாள் எதிர்க்கட்சி எதோ ஒப்புக்கு போராட்டம் நடத்த, தேசிய கட்சிகள் அறிக்கை களோடு நின்று விட , அடுத்த கட்டமாக கேரளாவிற்கு பொருளாதார முற்றுகை போடும் விதமாக  சாலை மறிப்பு போராட்டத்திற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் வித்த்தில் ஊர் ஊரக மீண்டும் பிரச்சாரம் என பம்பரமாக சுற்றினார் வைகோ என்றால் அது மிகை ஆகாது .
                                                    
                                                தொடரும்.................


No comments:

Post a Comment