Thursday, January 19, 2012

முல்லை பெரியாறு- பாகம் 30

பாகம்-29 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 



கேரளாவின் கோரமுகம்

டிசம்பர் மாதம் 15 ம் தேதி

முல்லைப் பெரியாறு பிரச்சனை காரணமாக கேரளாவில் தமிழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டது .கேரளாவில் உள்ள உடுப்பஞ்சோலை, ஆணைக்கல்மெட்டு, ஆட்டுவாரை, மணத்தோடு, தலையங்கம், சதுரங்கப்பாறை, நெடுங்கண்டம் உள்பட பல இடங்களில் 10,000 தமிழர்கள் தங்கள் குடும்பத்தோடு வாழ்கின்றனர். அவர்கள் ஏலத்தோட்டங்கள், காப்பித்தோட்டங்கள், மிளகு தோட்டங்களில் தங்கி வேலை செய்கின்றனர்.
 இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீரிமட்டத்தை குறைக்கக் கோரிய கேரள அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடு்தது அங்குள்ள ஏலத் தோட்டங்களில் வேலைபார்ககும் தமிழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 வரை உயர்த்தும் வகையில் எதிர்காலத்தில் அணையை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த கூடத்தில் அனைத்து கட்சிகளும் கலந்துகொண்டு பேசியது , வழக்கம் போல எதிர்கட்சி தலைவர் நடிகர் விஜயகாந்த் தாமதமாக வந்தார் , அவருக்கும் பதில் எதிர்கட்சி துணை தலைவர் பேசினார்.

டிசம்பர் மாதம் 16 ம் தேதி

போடி நாயக்கனூர், காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்.இவர் ஒரு விவசாயி. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான போராட்டங்களில் பங்கெடுத்து வந்த ராஜ், கேரள அரசைக் கண்டித்தும், அணையின் நீர் மட்டத்தை உயர்த்தக் கோரியும் தீக்குளித்து விட்டார்.

கேரளாவில் தமிழர்களைத் தாக்கி விரட்டியடித்த மலையாளிகளைக் கண்டித்து தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே சாலை மறியல்,  10 கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினார்.

மத்திய மாநில அரசுகள் தமிழர்களைக் காப்பாற்றக் கோரியும், கம்பத்தில் இன்று பெரும் திரளான பெண்களின் தலைமையில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் திரண்டு மாபெரும் பேரணி நடத்தினர்.
 கேரளாவில் தமிழர்கள் மீது மலையாளிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து தேவாரம் அருகே உள்ள 1000 அடி உயர மலை உச்சியில் 100 பேர் அமர்ந்து கொண்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் அக்கட்சியினர் சார்பில்  குமுளியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி பயிலும் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து தப்பி வந்தவர்கள் கூறினார்.

விடுதிகளில் தங்கி படிக்கும் தமிழக மாணவர்களை பள்ளிகளில் இருந்து வெளியேற்றுமாறு அங்குள்ள மலையாளிகள் பள்ளிகளுக்கு சென்று நெருக்கடி கொடுத்து வருவதாகவும் அவர்கள் கூறினார்.

போராட்டம் வலுபெற்ற நினையில் இனி மதிமுக பொது செயலாளர் தவிர வேறு எந்த அரசியல் கட்சிகளையும் அனுமதிக்க போவதில்லை என மக்கள் முடிவு செய்தனர்.

மேலும் அனைத்து இடங்களிலும் கட்சி கொடிகம்பங்களை அகற்றவும் முடிவு செய்தனர் , இதிலும் மதிமுக கட்சிக்கும் மட்டும் சலுகை , ஆரம்பத்தில் இருந்து போராடுவதால் அவர்களை மதிக்கும் வகையில் அவர்களின் கொடி கம்பங்களை விட்டு மற்றவைகளை அகற்ற முடிவு.(பாசகார மதிமுக என நாளேடுகள் பாராட்டியது )

டிசம்பர் மாதம் 17 ம் தேதி

மதிமுக இணையதள நண்பர்கள் சார்பில் சென்னையில் படித்தவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்து விதத்தில் கருந்தாரங்கு நடத்த பட்டது , இதில் வைகோ யும் கலந்து கொண்டார் மேலும் பல பொதுப்பணி துறை பொறியாளர்கள் கலந்து கொண்டு அணை குறித்து புள்ளி விவரங்களோடு விளக்கம் கொடுத்தனர்.(தலைவருக்கு இணையாக செயல்படும் மதிமுக இணைய நண்பர்கள் , புதிதாக இருக்கு கேட்கவே நல்ல இருக்கு).

முல்லைப் பெரியாறு விவகாரத்தால் தமிழகம், கேரளா இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் உற்பத்தியாகும் தேயிலை, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.தமிழகத்தை பகைத்தால் இரண்டு பக்கம் பதிப்பை சந்திக்கும் கேரளா , உணவு பொருள் இல்லாமல் பாதிப்பு ஒரு பக்கம் என்றால் , அங்கே உற்பத்தி ஆகும் சில பொருள்கள் தமிழகத்தை கடந்து தானே போகவேண்டும் .

கேரளாவில் இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், இந்த பிரச்சினை பெரிதாக்கப்படுவதாக மத்திய அமைச்சர் சிதம்பரம் அறிக்கை , முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை எனவும் சொன்னார் .(இவர்தானே இந்தியாவிற்கே உள்துறை அமைச்சர் வேறு யாரை அணையை காக்க சொல்லுகிறார், மேத்த படித்த மேதாவி குழப்பவாதியாக மாறிப்போனார்)

ஒரு மத்திய அமைச்சர் தன்னை தானே சொல்லிக்கொள்ளும் நிலை இங்குதான் , இந்த மாதிரி பேசினால் கேரளா விடுவானா......

                                          தொடரும்.............................



No comments:

Post a Comment