Sunday, January 8, 2012

தானே புயலின் தாண்டவம்-1

தானே புயல்


வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி ... அது புயலாக மாறி , கடந்த டிசம்பர் 30-ம் தேதி காலையில் புதுச்சேரி மாநில எல்லைக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடந்தது . பல மாவட்டங்களை பதம்பார்த்த புயல் , கடலூர் மாவட்டத்தையும் புதுச்சேரி மாநில பகுதிகளையும் புரட்டி போட்டுவிட்டது 

விழுப்புரம் மாவட்டம் 

விழுப்புரம் மாவட்டத்தில் 29-ம் தேதி இரவு முதலே பலத்த காற்றோடு மழை ஆரமித்தது . பலத்த காற்றின காரணமாக சாலை ஓர  மரங்கள் முறிந்து விழுந்தன .இதனால் சாலை போக்குவரத்து பெரும் சிக்கலுக்கு ஆளானது முக்கிய சாலையான பாண்டிசேரி செல்லும் சாலை துண்டிக்கபட்ட்து.
புயலின் வேகம் தாங்க முடியாமல் குடிசை வீடுகளை மேற்கூரை பல மீட்டர் தூரம் தூக்கி விசப்பட்டுள்ளது . 

மின்சார கம்பிகள் அறுந்து சாலைகளிலும் , ரயில் தண்ட வளங்களிலும் விழிந்து மொத்த மின்சார வசதியையும் துண்டிக்க பட்டுள்ளது , செல்போன் டவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் சாந்து விட அவசர உதவிக்கு கூட அழைக்க முடியாத பரிதாபம்.


உள் மாவட்டஇடங்களே இந்த மாதிரி என்றால் கடற்கரையில் சொல்லவ வேண்டும் 
மாவட்டத்தில் அதிகமாக மரக்காணம் முதல் கிழக்குக் கடற்கைர 19 மீனவக் கிராமங்களில் கடல் நீர் புகுந்தது .மக்களை இருக்கும் இடத்தை விட்டு அப்புறபடித்திய புயல் . படகுகள் , மீன்பிடி வலை முழுமையாக சிதைத்து விட்டது , 

கள்ளக்குறிச்சியிலும் பலத்த பாதிப்பு களை ஏற்படித்திய புயல்  .ஆலத்தூரைச் சேர்ந்த விவசாயி குரூப் நாயுடு . மாட்டை காப்பற்ற போனவர் அறுந்த மின்சார வயர் மின்சாரம் தாக்கி பலியானார். மரம் முறிந்து விழுந்தது . சுகந்தி என்பவர் இறந்து போனார் . 

மனிதர்களே உயிருக்கு போராட்டமாக இருந்த நிலையில் கோழிகளும் , ஆடுகளும் அதிக பதிப்புக்கு உள்ளானது 

அரசு அதிகாரிகள் சேத மதிப்பை கணக்கீட்டு கொண்டே இருக்கிறார்கள் , எந்த துரித நடவடிக்கை இல்லை , இதனால் மேலும் பல தொற்று நோய்களும் சுகாதார சீர்கேடும் உருவாக்கும் நிலையில் மக்கள் செய்வது அறியாது கலங்கி நிற்கிறார்கள் 

திருவண்ணமலை மாவட்டம் 

 புயலின் பதிப்பு இந்த மாவட்டத்திலும் உண்டு ,நெல் , வாழை , கரும்பு , பயிர்கள் விளைந்து அறுவடை காலத்தை நெருங்கி இருந்த நேரத்தில் அடியோடு சாய்த்து விட்டது , ஆரணி பகுதிகளில் வாழை மரங்கள் படுத்து விட்டது , ஒரு பத்து நாள் இருந்தால் வாழை காய் தார்கள் அறுவடை செய்து இருக்கலாம் 
படவோடு பகுதிகளில் கரும்பு விவசாயம் முற்றிலும் சாய்ந்து விட்டது ,சம்பங்கி பூக்கள் பரிதாப நிலையில் இருக்கிறது 

சென்னை

சென்னையிலும் அதன் சுற்று பகுதிகளும் பதிப்புக்கு உள்ளானாலும் நேரடி மக்களுக்கு பாதிப்பில்லை , மாறாக மின்சார வசதி , சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது , மீனவ பகுதிகள் கொஞ்சம் கூடுதலாக பதிப்பு ஏற்பட்டுள்ளது, சென்னையில் மட்டும் பதிப்பு 200௦௦ கோடிகளை தாண்டும் என தெரிகிறது , அனால் தமிழக அரசு மாநிலம் முழுவதும் நிவாரண பணிகளுக்கும் 150 கோடிதான் ஒதுக்கி  உள்ளது .



No comments:

Post a Comment