Monday, January 9, 2012

முல்லை பெரியாறு- பாகம் 23


கலவரத்தை முதலில் ஆரமித்த கேரளா

பாகம்-22 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.    

நவம்பர் 28,கேரளத்தின் பல பகுதிகளிலும் அன்று  தமிழகத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்துள்ளன. நான்கு மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம் மாநில அரசின் ஆதரவோடு நடந்தது. அப்போது இடுக்கி மாவட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவியும் 30 க்கு மேற்பட்ட இடங்களில் வைகோ கொடும்பாவியும் எரித்தனர்.முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும், புதிய அணையைக் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி கேரளாவின் இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கூட்டணியும், இடதுசாரி கூட்டணியும் அழைப்பு விடுத்தன.


நவம்பர் 28,  ஒருபக்கம் போராட்டம் , மறுபக்கம் கேரள அமைச்சர்கள் பிஜே ஜோசப், மற்றும் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அன்று  டெல்லி சென்று ,பிரதமர் மன்மோகன்சிங், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து பேசினார்

அத்தோடு நில்லாமல், அத்தனை மத்திய அமைச்சர்களையும் அவர்கள் சந்தித்து முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, புது அணை கட்டுவதற்கு ஆதரவு திரட்டினார்

இந் நிலையில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த பல கட்சி எம்பிக்களும் நாடாளுமன்றம் முன் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

நவம்பர் 28,இந்திய அரசு, பிழையாக கேரளத்துடன் இணைக்கப்பட்ட முல்லைப் பெரியாறு நீர் பிடிப்பு பகுதிகளையும் இடுக்கி மாவட்டத்தையும் தமிழகத்துடன் இணைத்து எல்லை மறுசீரமைப்பு செய்யுமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி  வலியுறுத்துகிறாது

நவம்பர் 29,கேரளத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்த்தால் ,அணைக்கு நீர்வரத்து அதிகரித்து,

அனையின் நீர் மட்டம் 136.4 அடியாக உயர்ந்த்து.  இது தான் அணையின் தற்காலிக கொள்ளளவாகும்.(இப்போதும் அணையில் ஓன்று ஆகவில்லை )

நவம்பர் 30,இரு மாநில அரசுகளின் நலனைக் கருத்தில் கொண்டு முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கண்மூடித்தனமாக நடந்து கொள்ள வேண்டாம் என்று கேரள அரசை  வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு ,இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.(இவர் முந்தைய திமுக ஆட்சி செய்த பொது கடிதம் எழுதியதை கண்டித்தார் , இப்போது இவரும் அதே வழியை பின்பற்றி திமுக , அதிமுக இரண்டும் ஒன்றுதான் என நிருபித்து விட்டார் )

நவம்பர் 30,கோவாவில் நடந்த 42வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவில் நடித்துப் பிரபலமான கேரளாவைச் சேர்ந்த நடிகர் ரவீந்தர் தலைமையில் கேரளத்து பத்திரிக்கையாளர்கள் சிலர் கூடி ஊர்வலமாகப் போய் முல்லைப் பெரியாறு அணை இடியப் போகிறது என்று கோஷமிட்டனர்.

இதைப் பார்த்து கொந்தளித்து விழாவுக்கு வந்திருந்த பல்வேறு திரைப்படக் கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள், உங்களுக்கு ஏன் இந்தக் கொலை வெறி என்ற கோஷத்துடன் பதிலடி ஊர்வலம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

நவம்பர் 30,கேரள அரசும், அங்குள்ள கட்சிகளும், படு தீவிரமாக புதிய அணைக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அணை விவகாரத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் கேரள முதல்வர்கள் இணைந்து செயல்படுகின்றனர். அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்கின்றன. அதேபோல இங்கும் நடக்க வேண்டும். புதிய அணை கட்டுவதில் அவர்கள் தீவிரமாக உள்ளனர்.

கேரளாவின் இந்த முயற்சிகள் நிறைவேறாமல் தடுக்க வேண்டும். இதை தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டும். முதல்வர் ஜெயலலிதா, உடனடியாக டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முறையிட வேண்டும்.வைகோ வேண்டுகோள் வைக்கிறார்.


                                             தொடரும்............................    

No comments:

Post a Comment