பாகம்-30 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.
அனல்பறக்கும் போராட்டம்
டிசம்பர்
மாதம் 18 ம் தேதி
முதல் நாள் வீரமாக பேசிய மத்திய அமைச்சர் , மறுநாள் டெல்லி போனவுடன் , பேச்சை வாபஸ் பெற்றார் ,நான் அந்த கருத்தை திரும்ப பெறுகிறேன்.அப்படி நான் கூறியது தேவையற்ற கருத்து. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது.சிதம்பரம்!
நெய்வேலியில் இருந்து கேரளாவிற்கு செல்லும் மின்சாரத்தை உடனே நிறுத்து வேண்டும் என்று பாமகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருன் கோரிக்கை .
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்திற்கு கனடா படைப்பாளிகள் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், தமிழர்களுக்கு இன்னல் விளைவித்தால் உலகத் தமிழினம் பொங்கி எழும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்தது
டிசம்பர்
மாதம் 19 ம் தேதி
கேரளாவுக்கு எதிராக டிசம்பர் 21ம் தேதி நடைபெறும் பொருளாதார முற்றுகைப் போராட்டம் மதிமுகவின் போராட்டம் அல்ல. அனைத்துத் தரப்பு மக்களின் போராட்டம். அதில் அனைவரும் பங்கேற்று கேரளாவை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார் .மேலும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரளாவை கண்டித்து பேசியதை வரவேற்கிறேன். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அந்த அரசை `டிஸ்மிஸ்' செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு பாராட்டுதலுக்குரியது. தமிழக காங்கிரஸ் தலைவர்கள், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, அந்த மாநில அரசை டிஸ்மிஸ் செய்யுமாறு வற்புறுத்த வேண்டும்.என கேட்டு கொண்டார்.(காங்கிரஸ் தலைவர்கள் இந்த மாதிரி வைகோ வை பாராட்டுவார்களா ???)
கேரளத்தில் தொடந்து தமிழக வாகனங்களைத் தாக்கி, தமிழக ஐயப்ப பக்தர்களை போலீஸாரின் துணையோடு மலையாளிகள் தாக்கி விரட்டியுள்ள நிலையில் தமிழகத்தில் வாழும் மலையாளிகளுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு கோரி முதல்வர் ஜெயலலிதாவுக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமிழர்கள் மீதும், தமிழகத்திலிருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் மீதும் கேரளாவில் மலையாளிகள் தொடர்ந்து வெறித்தனமாக தாக்கி வருவதால் ஆவேசமடைந்த தூத்துக்குடி, நெல்லை மாவட்ட வர்த்தர்கள், கேரளாவுடனான தங்களது வர்த்தக தொடர்புகளை நிறுத்தி வைப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.
நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தத் திரண்டபோது போலீஸார் அனைவரையும் தடுத்துக் கைது செய்தனர்.
கேரளாவில் வசிக்கும் தமிழர்களின் சொத்துக் கணக்குகளை சேகரித்த போலீசார் தற்போது தமிழ்நாட்டில் இருந்து ஏலக்காய் தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகளின் முகவரிகளையும் சேகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து திருப்பூரில் உள்ள மலையாளிகள் இரண்டு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தினால் கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பேருந்துகளை அம்மாநிலத்தவர் தாக்கி வந்ததால் போக்குவரத்து
நிறுத்தப்பட்டது.கேரளாவில் இருந்து வரும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
டிசம்பர்
மாதம் 20 ம் தேதி
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி தேனியில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்ற வேன் டிரைவர் ஒருவர் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேனியில் கடைகள் அடைக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் மலையாளிகள் மீது நடைபெறும் தாக்குதல்கள் வேதனை அளிப்பதாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூறினார். இருப்பினும் முல்லை பெரியாறில் புதிய அணை என்ற முடிவில் இருந்து கேரளா பின் வாங்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.(என்ன ஒரு திமிரான பேச்சு)
முல்லை பெரியாறு பிரச்சனையால் இரு மாநிலங்களிலும் எழுந்துள்ள பதற்றத்தை அடுத்து தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாப்பது என்ற பெயரில் " சப்போர்ட் கேரளா " என்ற இணையதளம் தொடங்கப்பட்டது
முல்லைப்பெரியாறு அணையை உடைக்க நினைக்கும் கேரள அரசைக் கண்டித்தும், இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க வலியுறுத்தியும் கோபி செட்டிபாளையத்தை சுற்றியுள்ள 30 ஊர்க்களில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனார்.
கேரளாவில் மலையாள ரவுடிகளிடம் அடிபட்டு திரும்பிய தமிழக ஐயப்ப பக்தர்கள் மீது செங்கோட்டை அருகே தமிழக போலீசார் அறிவிப்பின்றி தடியடி நடத்தியதால் பதற்றம் உருவானது.(இரண்டு பக்கம் அடிவாங்கி துன்படும் தமிழர்கள் )
தொடரும்.............................
தமிழக ரயில் நிலையங்களைக் கேரள பயணிகளின் வசதிக்கான ரயில்களை நிறுத்தி வைக்கும் இடங்களாக (Rail Parking Stand) இந்திய ரயில்வேத் துறை மாற்றியுள்ளதாக பயணிகள் கருதுகின்றனர்.
ReplyDeletehttp://kkdrua.blogspot.com/2011/07/blog-post.html?showComment=1327221006495#c386608172987358885
தென் மாவட்ட மக்களை ஏமாற்றி கேரளாவுக்கு சாதகமாக செயல்படும் ரயில்வேதுறை
Deleteதென்தமிழக மாவட்டங்களுக்கு புதிய ரயில்களை இயக்கவும், இங்குள்ள ரயில் வசதிகளைப் பெருக்கவும் ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ரயில்வே நிர்வாகம் தமிழகத்தின் தலையில் செமத்தியாக மிளகாய் அரைக்கத் தொடங்கியிருக்கிறது. கேரளாவுக்கு ஓவ்வொரு ஆண்டும் மத்திய ரயில்வே பட்டிஜெட்டில் தமிழகத்துக்கு என அறிவிக்கப்படும் சொற்ப புதிய ரயில் வழித்தடங்களில் ஒன்றிரண்டாவது திருவனந்தபுரம் வழியாக தமிழகத்திற்குள் நுழைகிற நிலையில்தான் ரயில்கள் இருக்கும் உண்மையில் அத்தகைய ஒரு ரயிலுக்கு தமிழக மக்கள் கோரிக்கை வைத்திருக்வே மாட்டார்கள். ஆனாலும் அழையா விருந்தாளியாக பெரும்பாலும் நள்ளிரவு வேளைகளில் தமிழகத்திற்குள் தலையைக் காட்டிவிட்டு மறுநாள் நள்ளிரவில் இங்கிருந்து இந்த ரயில்கள் விடப்படும் விதத்தில் கால அட்டவணை நிர்ணயித்திருக்கும்.