Wednesday, January 4, 2012

முல்லை பெரியாறு- பாகம் 22

பாகம்-21படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.   


குளுரிலும் போராட்ட தீ பரவியது



நவம்பர் மாதம்

நவம்பர் 18,முல்லை பெரியாறு அணை உடைவது போல , மக்கள் சாவது போலவும் போலியான ஒரு குறுந்தட்டை கேரளாவில் பரவ விட்டார்கள் , அதே போலவே டேம்-999 என்ற பெயரில் ஆங்கிலத்தில்  திரைப்படமாக எடுத்து, இப்போது அனைத்து தரப்பு மக்களையும் திசை திருப்பு வகையில் கேரளா முன் வந்துள்ளதை முதலில் வெளியில் வெளிக்கொண்டு வந்தவர் வைகோ , இந்த படத்திற்கு தமிழகத்தில் தடை போடவேண்டும் என கோரிக்கை வைத்தார் வைகோ.

நவம்பர் 20,கடந்த 2 நாட்களுக்கு முன்பு இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வால் முல்லைப்பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி மறுபடிவும் மக்களுக்கு பீதி ஏற்படுத்துகிறார்

இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதி்வானது. இந்த நில அதிர்வால் இடுக்கி மாவட்டத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

ஆனால் முல்லைப்பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த விரிசல் வழியாக தண்ணீர் அதிகளவு கசிவதாகவும் கேரள நீர்பாசன துறை அதிகாரிகள் பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள்.

நவம்பர் 22,மதிமுக டேம்-999 படத்தை வெளியிட விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இந்தப் படம் வெளியாகவே கூடாது. அதற்கான போராட்டத்தில் மதிமுக இறங்குகிறது. இப்போது அமைதி வழியில் போராடுகிறோம். மீறி படத்தை வெளியிட முனைந்தால் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு போகும்.

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என ஆணை பிறப்பிக்க வேண்டும். அத்துடன் மத்திய அரசையும் இதுகுறித்து வலியுறுத்தி இந்தியாவில் அந்தப் படம் வெளியாகாமல் தடுக்க வேண்டும். என தனது அறிக்கையில் சுட்டி காட்டுகிறார் வைகோ.

நவம்பர் 23, டேம் 999,விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று அலுவல் ஆய்வுக் குழுவில் திமுக வலியுறுத்தியது.

முல்லைப் பெரியாறு அணை உடைவது போல் படம் எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் அதிமுக வும் வலியுறுத்தியது.
பரவ இல்லையே என நினைக்க தோன்றும் அளவிற்கு மதிமுக தொடங்கி வைத்த பிரச்சனைக்கு , திமுக, அதிமுக என சேர்ந்து பிரச்சனை குறித்து பேச ஆரமித்தது

நவம்பர் 23,'டேம் 999' படத்தில் இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள எந்த அணைகள் பற்றியும் நான் சொல்லவே இல்லை. இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம், என்று படத்தின் மலையாள இயக்குநர் சோஹன் ராய் அறிக்கை விடுகிறார்.

முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டு, அதற்கு பதிலாக பெரிய அணை கட்டினால்தான் தமிழர்களுக்கு நிறைய தண்ணீர் கிடைக்கும் என்றும் தெரிவிக்கிறார் ,

ஆனால், 999 என்ற பெயரே முல்லைப் பெரியாரைத் தான் குறிக்கிறது. தமிழகத்திடம் இந்த அணைக்கான 999 ஆண்டு உரிமை உள்ளது. இதைத் தான் படத்தின் டைட்டிலில் குறி்ப்பிட்டுள்ளார் ராய்.

நவம்பர் 24,முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கைக் கண்டித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை எழுத்துகிறார்.

 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்று சொல்லி கேரள மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வையும், பீதியையும் ஏற்படுத்தவும், சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ள அதிகாரக் குழுவிடம் உண்மை விவரங்கள் இல்லாமல் பயம் சார்ந்த விஷயங்களை அறிக்கையாக சமர்ப்பித்து அந்த குழுவை தன் பக்கம் ஈர்க்கும் வகையிலும் செயல்படுவது போல் தோன்றுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா தனது கடித்த்தில் தெரிவிக்கிறார்.

நவம்பர் 24,முல்லைப் பெரியாறு அணை உடைவதைப் போல காட்டும் தமிழகத்துக்கு எதிரான "டேம் 999' ஆங்கிலத் திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி திமுக, மதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.மதிமுக எம்பி கணேசமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் எம்பி லிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி நடராஜன் மற்றும் அதிமுக எம்பிக்களும் எழுந்து நின்று கோஷமிடவே அவை நடவடிக்கைகள் முடங்கின.

நவம்பர் 24,சர்ச்சைக்குரிய டேம் 999 படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தமிழக அரசு தடை விதித்தது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.

நவம்பர் 25,கேரளாவைச் சேர்ந்த சில அமைப்புகள் முல்லைப்பெரியாறு அணை உடையும் அபாயத்தில் இருப்பதாகவும், அதனால் 30 லட்சம் பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கேரளாவில் இருந்து தமிழகத்தி்ற்கு வரும் பேருந்துகளில் போஸ்டர்கள் ஒட்டிகிறார்கள். (வினையை ஆரம்பம் முதல் விதைத்தாலும் இப்போது கொஞ்சம் அதிகமாக கேரளா விதைக்க ஆரமித்தது )

நவம்பர் 27,கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணை 130 அடி நீர் வந்த்தும் ,தேவை இல்லாத அபாய எச்சரிக்கை தருகிறது கேரளா அரசு.
                                                 தொடரும்............................

No comments:

Post a Comment