Saturday, January 7, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-2

பாகம்-1படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

சங்கரன்கோவில் தொகுதி 
===================

நிர்வாக ரீதியாக தனி தொகுதியாக இருந்தாலும் , பலதரப்பட்ட மக்கள் வாழும் தொகுதிதான் இது , மக்களின் நிலைகளை பல பிரிவுகளாக பிரிந்து பார்ப்போம் 

விவசாய மக்கள் 
-------------------------
இதில் இருவகை உண்டு ஓன்று நிலங்களை வைத்து காலத்தை ஓட்டுவார்கள் , விவசாய கூலி தொழிலில் செய்து பொழப்பை நடத்துவார்கள் 
, ஒரு காலத்தில் பெரும் நில கிழார்களாக இருந்தவர்கள் இன்று இருக்கிறா இடம் தெரியவில்லை , மேலும் விவசாய மொத்தமாக படுத்து விட்டது , இந்த பகுதி விவசாயம் பெரும்பாலும் வானம் பார்த்த பூமி தான் , ஒரு பக்கம் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் கீழே பொய் கொண்டு இருக்கிறது , நூறுநாள் வேலை திட்டம் என்ற ஒன்றை கொண்டுவந்து மொத்த விவசாயத்திற்கு ஆப்பு வைத்து விட்டது காங்கிரஸ் அரசு , 
மொத்தத்தில் இன்றைய விவசாயத்தின் நிலை , சோளம் போட்டோம் நஷ்டம் , கம்பு போட்டோம் நஷ்டம் , பருப்பு வகைகள் போட்டோம் நஷ்டம் , பருத்தி போட்டோம் நஷ்டம் , இறுதியாக பிளாட்டு போட்டோம் அதிலும் கொள்ளை அடித்து விட்டார்கள் முன்னாள் ஆளும் கட்சியினர் 

நெசவாளர்கள் 
-----------------------
விவசாயத்திற்கு நிகரான தொழில்தான் , உணவில்லாமல் இருந்தாலும் தமிழன் மானத்தோடு இருக்கவே விரும்புவான் , மானத்தை காக்கு 
உடைகளை தரும் நெசவாளர்கள் , இன்று உணவில்லாமல் இருக்கிறான் , இந்த பகுதிகளில் இருக்கும் 5000 த்துக்கு அதிகமான விசை தறிகளும் , சில கைத்தறிகளும் இன்று எல்லவைகையுளும் பதிக்க பட்டுள்ளது , மேலும் இந்த பகுதிகளில் இருந்து தயாராகும் உடலை துடைக்க உதவும் நூல் துண்டுகள் , டருக்கு துண்டுகள் சந்தையில் அதிக மதிப்பு உண்டு , இதை மென் படுத்த எந்த அரசாங்கமும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை 

தறியில் ஒரு நூல் கண்டும் குறுக்கு வாக்கில் வலது ,இடது பக்கம் மர சட்டங்களுக்கு மத்தியில் அடிபட்டு அழக்களியும் , அதை போல தன இந்த திமுக , அதிமுக அரசுகளின் நடுவில் சிக்கி தவிக்கிறது நெசவாளர்களின் வாழ்க்கை 

ஆடு, மாடுகள் மேய்த்து பிழைக்கும் மக்கள் 
----------------------------------------------------------------
விவசாயம் , நெசவும் இல்லாத மக்கள் , ஏதே தங்களின் சொந்த காலில் நிற்கலாம் என நினைத்து , கடனை வாங்கி ஆடு மாடுகளை வைத்து 
பிழைக்கலாம் என நினைக்கும் மக்களின் எண்ணிக்கை இந்த பகுதியில் கொஞ்சம் அதிகமே , விவசாயமே திண்ட நிலையில் இருக்கிறது ,இவர்களின் நிலை மிகவும் பரிதாபம் , கொஞ்சம் வனபகுதி இருந்தாலாவது காலத்தை ஓட்டலாம் என்றால் , வனங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி விட்டார்கள் , ஆடு மாடுகளுக்கு வரும் நோய்கள் மனிதனுக்கு நிகராக வருகிறது என்பதே உண்மை , பழைய கால மருத்தவமும் இல்லை , அந்த வகை ஆடு மாடுக்களுமில்லை , மொத்தத்தில் இவர்களின் வாழ்க்கை நாடோடி தன்மையை ஒத்தே அமைகிறது 

தொழில் சார்ந்தவர்கள் 
---------------------------------- 
விவசாயம் முன்னேறாத வரை எந்த தொழிலை செய்து என்ன செய்ய , எதோ கொஞ்சம் இருக்கும் தீப்பட்டி தொழிலும் , நூல் , பஞ்சு ஆலைகளும் தொழிளார் தட்டுபட்டால் மொத்த தொழிலும் முடங்கிவிட்டது , மேலும் இந்த தொகுதிலிருந்து பல மந்திரிகள் வாந்தாலும் , எந்த ஒரு பெரிய தொழிலில் வளர்ச்சி இல்லை 

சாதி அடிப்படையில் 
--------------------------------
என்னதான் கல்வி வளர்ச்சி வந்தாலும் இன்னும் சாதி யை ஓழிக்க முடியவில்லை , மாறாக சிறிது மறைந்து உள்ளது என சொல்லாம் ,இந்த தொகுதியில் பல்வேறு சாதி மக்கள் இருந்தாலும் , இந்த விவாத அசம்பவித்தையும் நிகழதவரை இந்த மக்கள் காப்பத்துகிறார்கள் , இரண்டு எடுத்து காட்டு , சாதிய மோதல் வந்தபோது ஒரு நல்ல லாபத்தில் இயங்கிய திரையரங்கத்தை முடியா உரிமையாளர்கள் இந்த பகுதில் உண்டு , மேலும் ஒரு கல்லூரி விடுதியும் முடிய சரித்திரமும் உண்டு , இந்த மாதிரி பிரச்சனைகளை தவிர்க்க தங்களின் தொழில்களை முடக்கியவர்கள் இருக்கிறார்கள்.

கிராமப்புற மக்கள் 
-----------------------------
சுகாதாரம் ,கல்வி , போக்குவரத்து , மின் வசதி முழுமையாக பெறாத கிராமங்கள் இன்னும் உண்டு 


நகர்புற மக்கள் 
------------------------
தொழிலில் இல்லை ,வாழ்வாதாரம் இல்லை , விலைவாசி மொத்தமாக நேரடியாக பதிக்க படுவது இந்த மக்களே 





No comments:

Post a Comment