Tuesday, January 31, 2012

புலி தேவனாக இருந்த பூலித்தேவன்-1


தமிழ் மண்ணை ஆண்டா மன்னர்களை மறக்க கூடாது , அவர்களின் எண்ணங்கள் , வீரம் , செயல்பாடுகள் , சிந்தனைகளையும் நாம் தெரிந்து கொண்டு ,இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப அதை பயன்படித்தி கொள்ளவேண்டும்.

பாளையக்காரர் பூலி

மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு (தென் தமிழகம் )72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு உட்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இத்தகைய பாளையங்களில் ஒன்று நெற்செவ்வல் பாளையம் ஆகும்.
 
நெற்செவ்வல் பாளையத்தை நெற்கட்டான் செவ்வல் (சங்கரன்கோவில் அருகே இருக்கிறது )என்னும் ஊரை  தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த ஒரு பாளையக்காரராவார் தான் பூலி தேவர்.

இவர்தான் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் , அன்று ஓன்று பட்ட இந்தியா வாக இல்லாவிட்டாலும்  ,`வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக வீர முழக்கமிட்டவர் பூலி.

பூலி யின் ஆரம்ப காலம்

 சித்திரபுத்திரத் தேவருக்கும் சிவஞான நாச்சியாருக்கும் மகனாக  1-9-1715 ல் பிறந்தார் பூலித்தேவர்.

தாய் தந்தை இவருக்கு வாய்ந்த பெயர் 'காத்தப்பப் பூலித்தேவர்' என்பதாகும். பிற்பாடு பூலித்தேவர் என சுருக்கமாக அழைக்க பட்டு , பின்னர் புலித்தேவர் என்றும் பெயர் பெற்றார்.

 சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது. இலஞ்சியைச் சேர்நத சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று ,மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கியுள்ளார்.

பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி பெற்று இருக்கிறார்.

பதவியும் , குடும்பமும்

காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருககுப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.

அவரின் வாழ்க்கைத் துணைவியாக  மாமன் மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியாரை ஏற்று கொண்டார்,

பூலி-கயல்கண்ணி தம்பதிகளுக்கு கோமதி முத்துத் தலவாச்சி, சித்திரபுத்திரத் தேவன் மற்றும் சிவஞானப் பாண்டியன் என்று மூன்று மக்கள் பிறந்துள்ளனர்.

இறைத்தொண்டு

இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கி உள்ள பூலி . அவர் தன்னுடைய குல தெய்வமான (பூலுடையார் கோயில்) உள்ளமுடையாரைத் தினமும் வணங்கி வந்துள்ளார் , இதன் தாக்கம் தனது பதிவி காலத்தில் ,பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு  உள்ளார் .

தன்னுடைய குலதெய்வமான பூலுடையார் கோயில் தவிர சங்கரன்கோயில், பால்வண்ணநாதர் கோயில் (வைகோ பிறந்த ஊரான கலிங்கபட்டிக்கு அருகில் உள்ளது ) , வாசுதேவநல்லூர் அர்த்தநாரீசுவரர் கோயில், நெல்லை வாகையாடி அம்மன் கோயில் மற்றும் மதுரை சொக்கநாதர் கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும் பூலித்தேவர் திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதர கோவில்களுக்கு தொண்டு செய்துயுள்ளார்.
  
பூலியின் எதிர்ப்பு

மதுரை நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதை தடுக்கும் பொருட்டு  அனைத்து பாளையக்காரர்களும் ஓன்று திரட்டி பூலி எதிர்த்தார் , நாயக்கராட்சி முடிவுக்கு வந்தது.

 நாயக்கராட்சியும் வலுவிழந்து முகம்மதியர்கள் கையில் விழுந்தது. இவர்களும் பாளையக்காரர்களிடம் கப்பம் கேட்க மறுபடியும் எதிர்த்தார் பூலி.

முகம்மதியர்கள் ஆட்சியில் ,ஆற்காடு நவாபுக்கும் மற்றோரு முகம்மதிய அரசனுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக இரு பிரிவனரும் தனித்தனியே கப்பம் வசூல் செய்ய முனைந்துள்ளனர்.

இந்த இரு பிரிவினருக்கும் நடந்த குழப்பத்தைப் பயன்படுத்தி, பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினார்கள். இதன் பின்

 ஆற்காடு நவாபு கப்பம் வசூலிக்க ஆங்கிலேயர்களின்  உதவியை நாடினான், இப்போது பூலி நேரடியாக ஆங்கிலேயர்களுடன் மோதலுக்கு தயாரானார்.

                                                  தொடரும்..............................

2 comments: