Tuesday, January 17, 2012

முல்லை பெரியாறு- பாகம் 28

பாகம்-27 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.


தலைமை இல்லமால் தணலாக மாறி தமிழன்

டிசம்பர் மாதம் 9 ம் தேதி

 நதி நீர்ப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். மத்திய அரசுக்கு மாநிலங்களை கட்டுப்படுத்த ஏற்கனவே இந்திய அரசியல் சட்டத்தில் 356 என்ற விதி உள்ளது என்பதை நினைவூட்டுவது நமது கடமை. அண்டை மாநிலத்தைப் பகைத்துக் கொண்டு எந்த மாநிலமும் வாழ்ந்து விட முடியாது என்பதை கேரளா நினைவில் கொள்ள வேண்டும் என்று தி.. தலைவர் கி.வீரமணி அறிக்கை

முல்லைப் பெரியாறு அணையில் எவ்வளவு நீரை தேக்கி வைப்பது என்பதை கேரள அரசே நிர்ணயிக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு புதிய மனு தாக்கல் செய்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட அளவை 120 அடியாக குறைக்க வேண்டும். புதிய அணை கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை முன்னிறுத்தி கேரள சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான அதிமுக, கண்டனத் தீர்மானம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்காத நிலையில், அதுபோன்ற தீர்மானத்தை போட வேண்டும் என்று புதுவை அரசை, புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியாது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பெரிதாகி வரும் நிலையில் கேரளாவில் வாழும் தமிழர்களின் சொத்துக்களைக் கணக்கெடுக்கும் விஷமனத்தனமான வேலையில் சில அமைப்புகள் ஈடுபட்டன.
 
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் .கே.அந்தோணி  பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்துப் பேசியுள்ளார். அந்தோணி மூலம் கேரள அரசு பிரதமருக்கு மறைமுக நெருக்குதல்

டிசம்பர் மாதம் 10 ம் தேதி

தேனி மாவட்டம் கூடலூர் சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த 50,000 விவசாயிகள் குமுளி நோக்கி பேரணியாக சென்று முல்லைப் பெரியாறு அணையை முற்றுகையிட முயற்சி.

முல்லைப் பெரியாறு மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்பதையும், இதனால் மக்களின் உயிருக்கும, உடைமைக்கும் அச்சுறுத்தல் இல்லையென்பதையும் கேரள மக்கள் உணரவேண்டுமென்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

டிசம்பர் மாதம் 11 ம் தேதி

 மீண்டும் 50,000 பேர் பேரணியாக கேரளாவை நோக்கி படையெடுத்த  மக்கள்  பேரணியாக கேரளாவை நோக்கி சென்று குமுளியில், தமிழகப் பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். நிதியமைச்சர் .பன்னீர்செல்வம் குமுளிக்கு வந்தபோது அவரது காரை மறித்து கூட்டத்தினர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீஸார் கல்வீசியவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்.

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அயர் கலந்து கொண்டார் (1957 ஆம் ஆண்டு கேரள அரசில் தாங்கள் அமைச்சராக இருந்தபோது, கேரளத்துக்கு அரிசி, காய்கறிகள், பழங்கள், பால் தருகின்ற தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரைத் தர வேண்டும் என வலியுறுத்தியவர் தான் இந்த வி.ஆர்.கிருஷ்ண அயர்)

நீதிபதியான தாங்கள், இந்த விவகாரத்தில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று வைகோ கிருஷ்ண அய்யருக்கு  கடிதம் அனுப்பிகிறார்.

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் மனு தாக்கல் செய்தார் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் .வி.எஸ். விஜயக்குமார் .

இருமுறை எந்த தலைமையும் இல்லாமல் 50,000 மேற்பட்ட தமிழர்கள் ஓன்று திரண்டு கேரளாவை நோக்கி படை எடுத்து விட்டார்கள் , தன்மையாக இருந்தால் தமிழன் தணலாக மாறிவிட்டான், இது வரை எதிர்கட்சியும் , முன்னாள் ஆளும் கட்சியும் கண்டு கொள்ளவே இல்லை.

                                                 தொடரும் ...................

No comments:

Post a Comment