பாகம்-32 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.
உறுதியோடு போராடும் மக்கள்
டிசம்பர்
மாதம் 22ம் தேதி
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் விஷமப் போக்கைக் கண்டித்து மதுரை மாவட்டத்தில் முழுக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பல ஆயிரம் விவசாயிகள் திரண்டு பேரணி நடத்தினர். அப்போது தபால் அலுவலகம் ஒன்றை சூறையாடினர்.
கேரளாவில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து திமுக எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினர். அப்போது புதிய அணை தேவையில்லை என்று வலியுறுத்தினர்.
முல்லைப் பெரியாறு அணையை விஜயகாந்த்தான் தீர்த்து வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தேமுதிகவைச் சேர்ந்த மேடைப் பேச்சாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் ,தேனி மாவட்டம் சீலையம்பட்டியைச் சேர்ந்தவர் சேகர். இவர் தேமுதிகவில் மேடைப் பேச்சாளராக இருக்கிறார். 30 வயதான இவர் விருத்தாச்சலம் வந்து . அங்குள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கி. பின்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டை கண்டித்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நடந்த இந்தப் போராட்டத்தால் இந்த மாவட்டங்களில் மருந்துக் கடைகளைத் தவிர மற்ற அத்தனை கடைகளும் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டன.
முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையால் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு காய்கறி மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு செல்வது தடைபட்டுள்ள நிலையில் தற்போது கறிமாடுகள் கிடைக்காமலும் கேரளா வியாபாரிகள் திணறினார்.
இந்த ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகை கறிக்கோழி, மாடு இல்லாத பண்டிகையாகத்தான் இருக்கும் என்று அவர்கள் கூறினர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளமும் மத்திய அரசும் சேர்ந்து நடத்தும் சதித்திட்டம் அம்பலமாகி விட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.பிரதமர் தலைமையில் இயங்கும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒரு குழுவை அமைத்து, பூகம்பத்தால் முல்லைப் பெரியாறு பகுதிக்கு ஏற்படும் சேதத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக் குறித்து தன்னெழுச்சியானப் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் மக்களை ஒடுக்கும் முயற்சியை மேற்கொள்வது என்பது தமிழகத்தின் நலனுக்கு எதிரானதாகும். என்று தமிழக அரசுக்கு பழ. நெடுமாறன் எச்சரிக்கை.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் தென்காசியில் ஆர்பாட்டம்.
டிசம்பர்
மாதம் 23ம் தேதி
முல்லைப் பெரியாறு அணையில் நிலநடுக்கம் அபாயம் இருப்பதாக கேரள அரசு கூறி வருவது சரியானதா, இல்லையா என்பதை ஆராய்வதற்காக உச்ச நீதிமன்றம் அமைத்த உயர் அதிகாரி குழுவின் நிபுணர்கள் இரண்டு பேர் அணையில் நேரடி ஆய்வை மேற்கொண்டனர்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் கேரள அரசின் நிலைபாட்டைக் கண்டித்து கோவையில் ஆட்டோ ஸ்டிரைக் நடந்தது.
டிசம்பர்
மாதம் 24ம் தேதி
எங்களுடைய நிலைப்பாடானது கேரளத்துக்கு பாதுகாப்பு, தமிழகத்துக்கு தண்ணீர் என்பதுதான். அணை விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசுடன் பேச கேரளா தயாராகவே இருக்கிறது. தற்போது வழங்கும் தண்ணீரை விட தமிழக அரசு கூடுதல் தண்ணீர் கேட்டாலும் தருவதற்கு கேரளா அரசு தயாராக இருக்கிறது. இது பற்றி ஒப்பந்தமும் போட்டுக்கொள்ளலாம் இவ்வாறு கேரள பாசன துறை அமைச்சர் ஜோசப் கூறியுள்ளார்.(நயவஞ்சக பேச்சு )
மக்களின் போராட்டத்தால் , மதிமுக சாலை மறியலால் கேரளாவிற்கு செல்ல வேண்டிய காய்கறிகள் , பால் , இறைச்சி
போன்ற வை தட்டுபாடு நிலவியது , ஒருவேளை கேரளா மக்கள் இதை உணர ஆரம்பித்து அரசுக்கு எதிராக போராட கிளம்பி விட்டால் என்ன செய்ய என கேரளா அரசு பேசி தீர்க்கலாம் என நயவஞ்சகமாக தமிழகத்தை அணுகுகிறது , மேலும் மத்திய அரசும் அதற்கு துணையாக இருக்கிறது.
தொடரும்............................
No comments:
Post a Comment